Pages

Saturday, October 30, 2010

வேலை...வே...லை.......(ம) போச்சு.

முஸ்கி.
தலைப்பை பார்த்துவிட்டு, பட்டாபட்டி,   “ (ம)”  என்று சொல்வது தலைமுடியை என்று நினைப்பவர்கள், சீக்கிரமாக, இவ்விடத்தை விட்டு விலகுமாறு அன்புடன்..டோண்......சே...சே... பண்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

---------------------------------------------------------------------

’வாய்யா சின்ராசு.  மன்னாரு சூடா ரெண்டு டீ.’
அப்புறம் சின்ராசு, ஏன் டல்லா இருக்கே?.  யாரும் கல்யாணத்துக்கு கூப்பிடலையா?. ஹி..ஹி


’நீ வேற பட்டாபட்டி. நானே வேலை போயிடுச்சுனு வருத்ததுல இருக்கேன். எரிய தீயில எண்ணெய ஊத்திக்கிட்டு..’ சின்ராசு

என்னய்யா சொல்றே?.  உனக்கு இருக்கும் அறிவு(?)க்கு, பில் கேட்ஸ்ச, உன்னோட மாமனாராகியிருப்பேனு நினச்சேன்?

அடப்போய்யா.  இன்சூரன்ஸ் கம்பெனில வேலை கிடைச்சதேனு சந்தோசப்பட்டேன். அதே சந்தோசத்தோட போறவரவனுகெல்லாம் தண்ணி வாங்கிக்கொடுத்துட்டு,   வாந்தியெடுத்துட்டு.... வேலையில ஜாயின் பண்ணினேன்.

உம்.. அதுதான் தெரிஞ்ச கதை ஆச்சே. அதுவுமில்லாம , நீ மூளக்கரான். டிஸ்யூ பேப்பர் வெச்சு சம்பாரிச்சவனில்ல நீ.  
உன்னைய எப்படியா வேலைய விட்டு தூக்கினானுக?.  உங்க மேனேஜருக்கு தெரியாம, தமிழ்மணத்தில உலாவினியா?.அவரு உன்னோட காதை புடிச்சு, வெளிய தள்ளீட்டாரா?.
(உபயம்.. டோண்டு சார்.. அவருக்கு எங்களுடைய நன்னி) 

இல்லய்யா....வரவர டோமரு மாறியே பேசு.. தெரியாத தொழில், புரியாத பாஷை. எப்படியோ மேனேஜர் கிட்ட , தாங்கி(?) வேலைய வாங்கிட்டேன்.
அந்த டோமரு, ஒரு வாரத்தில, எவனை பிடிப்பியோ தெரியாது. $25,000 பாலிஸிக்கு ஆள் தேத்துனு சொல்லுச்சு..    அலைஞ்சு திரிஞ்சு , ரெண்டு முட்டாப்பயலுகளை பிடிச்சேன். அதுவும் எவ்வளவுக்கு தெரியுமா?  $50,000..

அடப்பாவி.. அப்படீனா உங்க மேனேஜர் உன்னோடத தாங்க(?) ஆரம்பிச்சிருப்பானே. அப்புறம் என்னாய்யா வருத்தம்?

இல்லப்பா. அங்க எல்லாரும் நல்லா நிறம் பார்க்கிறானுக. நான் எப்படி பிடிச்சேனு எல்லோரும் காண்டு ஆயிட்டானுக. அத பார்த்த மேனேஜரு, தனியா அவரோட ரூம்-க்கு கூப்பிட்டு, காச்மூச்னு கத்திட்டாரு..

அதுக்குத்தான் சொன்னேன். எப்பவும் வெண்ணையும் கையுமா சுத்தனுமுனு.  நீ கேப்பியா?. உனனைய.. ங்கோ....விடு..விடு.
சரி...என்னானு சொல்லிக் கத்தினான?

$25,000 பாலிசு புடிச்சா, மெடிக்கல் செக்கப் செஞ்சாத்தான் செல்லுமாம். என்ன எளவு கர்மாந்திரமோ.. முதல்லேயெ சொல்லியிருந்தா, பாலிஸில கையெழுத்து வாங்கும்போது பாட்டில எடுத்துட்டு போயிருப்பேன். நாதாரி.. எல்லாம் முடிஞ்சதும், உனக்கு வேலைய ஒழுங்கா செய்ய தெரியலேனு கத்தரான்.    வெறுப்பாயி, டாக்ஸில போயி, பாலிஸி போட்டவனுகள கண்டுபிடிச்சு எப்படியோ பாட்டில நிரப்பிட்டு வந்துட்டேன்.

என்னாது.. தண்ணி பாட்டிலா?

யோவ்..யூரின் பாட்டில்.. கடுப்பேத்தாதே....

ஓ... அப்படீனாதான் பிரச்சனை முடிஞ்சிருச்சே. அப்பால,  என்னா ம^%$ருக்கு வேலைய விட்டு தூக்கினானுக?.

பாட்டிலை கொண்டு வந்ததும், எங்க மேனேஜர் மூஞ்சி ..ஆங்.. நீ அடிக்கடி சொல்லுவியே.. டோமரு.. அதுமாறி ஆயிடுச்சி.    அடுத்த வாரம் $60,000-க்கு ஆள் பிடினு சொல்லிட்டாரு..

சே.. பாவம்யா நீ.. எப்படியா ரெண்டு வாரத்தில இவ்வளவு $-க்கு ஆள் பிடிப்பது?. ஓ.. அதான் வெறுப்பாயி வெளிய வந்துட்டியா?.

வெண்ணை.. கொஞ்ச நேரம் மூடிக்கிட்டு, நான் சொல்றதை கேட்குறியா?.
அந்தாளு சொன்னமாறி போய், அடுத்த தடவை, $100,000-க்கு ஆள் புடிச்சேன்.ஆனாலும் தொரத்திவிட்டுட்டானுக..

இரு..இரு..நீ என்ன தப்பு பண்ணியிருக்கேனு நானே கண்டுபிடிக்கிறேன்.  $50K-க்கே யூரின் வேணும்னு சொன்னாங்க. $60K-க்கு மேலேனா, ‘மோஷன் சாம்பிள்’ வேணுமுனு, உன்னிய தொரத்திவிட்டிருப்பானுக.. நீ மூஞ்சிய காட்டிட்டு, ‘ என்னைய பார்த்தா.. அவருமாறியா தெரியுதுனு’ மேனேஜர் மூஞ்சில பீச்சாங்கைய வெச்சிருப்பே....... சரியா?

போய்யா வென்று.  ’சண்டைக்கு போய், சண்டைக்கு போய் , வரவர சாக்கடை ஆயிட்டிருக்கே.’  விசயம் என்னான,   எல்லா ம%$^#ருக்கும் அதே யூரின் சாம்பிளாம். அதையும் தெளிவா விசாரிச்சுட்டேன்.  ஆபீஸ்க்கு எடுத்துட்டு போயி, அவரு டேபிள்ல வைச்சதும், காச் மூச்-னு கத்திக்கிட்டு செக்யூரிட்டிய கூப்பிட்டு வெளிய தள்ளீட்டாங்க.

ஏன்னாய்ய சொல்றே.. வேலைய கரீக்ட்டா செஞ்சாலும், கழுத்தை பிடிச்சு வெளிய தள்ளுவானுகளா. சே. வரவர கலிகாலம் ஆயிடுச்சு..
நீயிம் ஒருவேளை, அவரு வாயில .... இரு..இரு.. தப்பா புரிஞ்சுக்காதே. அவரு வாயில விழுந்துட்டியானு கேட்கவந்தேன்.

என்ன எளவுயா சொல்றே.. யாரு வாயில.. யாரு விழுந்தா?- சின்ராசு

விடு...விடு.. இந்தா டீ வந்திருச்சு.. சூடா சாப்பிடு.


மன்னாரு.. தங்கபாலு கணக்குல எழுதி வெச்சுக்க.. அப்பால வந்து நம்ம ஜீ செட்டில பன்ணுவாரு..   நீ வா சின்ராசு.


அது யாருயா புதுசா ஜீ?...


’நம்ம வருங்கால பிரதமர், இந்தியாவின் விடிவெள்ளி,  ராகுல்ஜீ’ தான்




அவரு, இந்த மாறி பிரச்சனைனா, லுங்கிய கட்டிக்கிட்டு, கேமரா எடுத்துகிட்டு ஓடி வருவாரு...





டிஸ்கி 1..
.
பதிலே சொல்லாம, ஷட்டரை போட, நான் என்ன அவரா?
.
எதுக்கு வேலைய விட்டு தூக்கினானுகளா?.
.
யோவ்... அவன் கடைசியா பிடிச்ச பாலிஸி, ”குரூப் பாலிஸி”யாம்..
அந்த நாதாரி,  எல்லோருடையதையும், ஒண்ணா , ஒரே பக்கெட்ல பிடிச்சுட்டு வந்து,   மானேஜர் டேபிள்ல வெச்சா???????
.
.
.

டிஸ்கி 2..
.
//  பதிலே சொல்லாம, ஷட்டரை போட, நான் என்ன அவரா?  //


“அண்ணா.. நீங்கள் அவரா(?) எனக்குறிப்பிடுவது, நார்வே பதிவரைத்தானே”   என்று வரும் கமென்ஸ்கள்  ,  மட்டறுக்கப்படும்.
.
.
.

Friday, October 29, 2010

”Don't Do”-வின் சுயசொறிதல்..

.
.
.

கடந்த வாரம் நடந்த பதிவர் ராஜன் கல்யாண நிகழ்சிதான், இந்த  வாரப்பதிவர்களின் நொறிக்குத்தீனி எனுமளவுக்கு, பதிவுகளாக வந்துகொண்டிருந்தது. ”வந்துகொண்டிருக்கிறது.”

முதன் முதலில் ராஜனின், கல்யாண புகைப்படத்தை பார்த்த ஆனந்தப்பட்டவர்களில் நானும் ஒருவன்.   அப்புறம் என்னங்க?  ’ஜெயலலிதாவையும் கருணாநிதியையும் ஒரே மேடையில் பார்த்தால், நமக்கு அடி வயிறு கலங்காது?’.

சரி.. நாடுவிட்டு நாடு வந்ததால், நமக்குத்தான், ஒரு மண்ணும் புரிவதில்லை என்று சுயசொறிதல்(?) பண்ணிக்கொண்டு ஆணி பிடுங்க ஆரம்பித்தேன்.

அப்புறமா வர ஆரம்பித்தது பாருங்க பதிவுகளா?..

சரி ..விசயத்தை ஆரம்பிக்குமுன், நம்ம டோமருக்கு என்னுடைய வணக்கத்தை போட்டுக்கிறேன்..  ( அட பார்றா..என்னாது?... பதில் வணக்கம் போட்டா, ஹிட்டு கிடைக்காதா?.)

’பெரியமனுசன், என்ன இருந்தாலும்.. பெரிய மனுசந்தான்’
தப்பா நினச்சுட்டேன் போல.   ரைட்.. விடுங்கண்ணா.
நாம எப்ப,  மற்றவர்களை மதித்தோம்?..நானும் மறந்து போயிட்டேன்.


வயது ஆக ஆக அனுபவம் கூடும். வார்த்தைகள் தெளிவுபடும் என நினைத்துக் கொண்டிருந்த பன்னாடை நான்.     ஊகூம்.  ’அப்படியெல்லாம் இல்ல தம்பி.. நாங்க நல்ல விசயத்தையும்,   நாற அடிக்கும் திறமை கொண்டவர்கள்.. கூவமே எங்களை பார்த்து முகம்கோணும் அளவுக்கு   முன்னணி பதிவர்கள்’னு சொல்லிவிட்டீர்கள்.

விடுங்க.. இப்ப எதுக்கு பாயறீங்க  டோமர் சார்?..

பார்வதியம்மா பிரச்சனைய,  பதிவா வாந்தியெடுத்தபோதே, ”இது சாதாரண மனிதப்பிறவி எழுதிய பதிவேயில்லை”னு , மக்கள்கிட்ட பந்தயம் கட்டியவன் நான்.     மனதில வக்கிரம் கொண்ட , ஒரு டோமரால்தான் இப்படி சிந்தித்து, சிறப்பாக(?) எழுதமுடியும்.

ஆனா, கல்யாணத்தில  கலந்து கொண்டதும், ’ஆகா.. பதிவுகள் என்பது வேறு, நண்பர் குழு வேறு என்ற நிலைபாடு’, நல்ல ஆரோகியமான சூழ்நிலை என்று பெருமை கொண்டேன்.

”கேட்கவேண்டிய நேரத்தில் கேட்காமல் இருப்பதும், கேட்கக்கூடாத நேரத்தில் வாயைத்திறந்து கல்லா கட்டுவதும், உம்முடைய தனிச்சிறப்பு ஆயிற்றே.”


ராஜன் வந்ததும், அவரிடம் உங்கள் கேள்விகளை வைத்து, அதன்பின் பதிவுகள் வந்திருந்தால்....
”ஒரு வேளை வந்திருந்தால்...”,      “முன் ஏர் செல்லும் வழி, பின் ஏர் ” வந்திருக்கும்..

இல்லையில்லை.. எனக்கு பதிவுதான் முக்கி..முக்கியம்.. அவர்கள் வரும்வரை காத்திருந்தால், ஹிட் ரேட் என்னாவது?

ஊகூம்.. எதையோ குளிப்பாட்டி , எங்கேயோ வைத்தாலும்,  அதுதான் சாப்பிடுவேன் என்றால், நாங்கள் என்ன செய்வது?


சரி. விடுங்க.  நமக்கு வால் பையனும், கும்மியும்தான் டார்கெட்.
என்னா லொள்ளு இருந்தா, கல்யாணத்தில ஆடிப்பாடி வேலை செஞ்சிருப்பாங்க?.
விடாதீங்க சார்.. நண்பர்களாம் நண்பர்கள்.. அது எப்படி நல்லாயிருக்கலாம்?..

மறக்காம,  கூட  கொஞ்சம் மொய் எழுதிட்டு(?)   கழிப்பிடத்திலிருந்து, கார் பார்க் வரை நடந்ததையும், அதில் உங்கள் நிலைபாட்டையும்  விளக்கி பதிவுகளா எழுதி குவிங்க..
ஹிட் ரேட் வரும்...

பாருங்க.. இந்த ராஜனை......
கல்யாணம் பண்ணினதும் , இவர்களுக்கு பதில் சொல்லவேண்டுமே என அக்கறையில்லாம ,  தேனிலவு போயிருக்காரு.. என்னா லொள்லு இருக்கும்?

டோமரே.. அதுவரை வாலையும், கும்மியையும் விடாதீங்க. தொடரட்டும் உங்கள் நற்பணி..   காவல்(?) என்ற கடமை, முக்கியம் .. நாலுகாலில் பாயுங்கள்.. எதிரிகள் இதோ....


டிஸ்கி 1
முதன்முதலில் எதிரெதிர் கருத்துக்களை கொண்டவர்கள், இணைந்து, நல்ல ஆரோகியமான சூழ்நிலை வளர்ந்துகொண்டிருக்கிறது என்ற எண்ணத்தை கொண்டுவந்துவிடுவீர்களோ என நினைத்தேன்..
ஊகூம்..

அடுத்த பதிவர் சந்திப்பு எப்பப்பா?..
மூணு பதிவுக்கு வேண்டிய மேட்டரை எடுத்து, 10000 ஹிட் வாங்கலேனா, அடுத்த நாள், முக்கினாலும் வராது..



டிஸ்கி 2

மொய் ரூ 100க்கே  கல்யாணம் மண்டபம் வாடகை விவரத்தை கேட்டவரு,
ஒருவேளை...  நல்லா பாருங்க மக்களே.. ஒருவேளை,  ரூ 1000 கொடுத்திருந்தால்,   மண மேடையிலேயே, பேண்ட் அவுத்து, ராஜன் , இடுப்பில கறுப்புகயிரு கட்டியிருந்தாரானு  பார்த்திருப்பாரோ, என்னவோ?

நல்ல மனசுய்யா .. நடத்துங்க.. நடத்துங்க..
.
.
.

Tuesday, October 26, 2010

பாரம்பரியம்.. பன்னாடையின் பார்வையில்

.
.
.
முஸ்கி

இந்த நீண்ட பதிவுக்காக, பட்டாபட்டி
என்ற பாவியை  மன்னித்துக்  கொள்ளுங்கள்.     பதிவை படித்து முடிக்க, கட்டுச்சோற்றை, கைவசம் வைத்திருப்பது நல்லது.....( நீண்ட பிரயாணிணம்..) 
முக்கியமா, இந்த படத்துக்கும், பதிவுக்கும் சம்பந்தம் இல்லை என்று சுயநினைவோடு  சொல்லிக்கொள்கிறேன்....





எந்திரனின் படத்தோட one Liner, ’ஒரு ரோபோவில், மனித சிந்தனைகளை பதித்தால்?’.

இந்த பதிவின் one Liner, ’நமீதாவை அடுத்த படத்தில புக் செய்ய, முதல்வர் பரிந்துரைத்தால்?’.

இந்த செய்தி, சமீபத்தில ஒரு பிரபல வாரப்பத்திரிக்கையில் வந்தது.     அந்த தெய்வத்திடம்(?), ’இந்த வருட தீபாவளிக்கு, உங்களுக்கு கிடைத்த சர்ப்ரைஸ் கிப்ட் என்ன?’ என்பதுதான்  கேள்வி.       அதற்கு அவர்கள், ’நான் நடிக்கப்போகும் அடுத்த படத்தில, என்னை பரிந்துரை செய்தது முதல்வர். அது எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு’. 
இதில் பெருமை என்னவென்றால், ’நமீதா ஆடை கட்டிக்கொண்டு நடிக்கிறாங்களா, இல்ல அரைகுறையா நடிக்கிறாங்களா?’ என்பதல்ல.     இவ்வளவு பணிச்சுமைகளுக்கும் நடுவில், தலைவர் அவர்கள், அந்த மேடத்தை பரிந்துரை செய்திருக்கிறார்கள் என்றால், அங்கு அவருடைய கடின  உழைப்பைத்தான் பார்க்கவேண்டுமே  அன்றி புறங்கூறக்கூடாது.     நமீதா பிறந்த மண்ணும், காந்தி பிறந்த மண்ணும்,  நமது மண்டையில் உள்ள மண்ணும், ஒன்றே எனபதுதான் கூடுதல் செய்தி.    இதற்காக, ஒவ்வொரு இந்தியரும் பெருமை கொள்ளவேண்டும்.   

இப்படிப்பட்ட பரிந்துரைகள், வேறு எந்த நாட்டிலாவது நடக்குமா?. ஊகும். ஏன் என்றால், ’நாம் மனித நேயம்மிக்கவர்கள்.  வந்தாரை வாழவைக்கும்  மனப்பான்மை கொண்டவர்கள்.’

சரி.. இனி பதிவுக்கு போவோம்.

அடிமை ரத்தம்    To    இந்திய ரத்தம்

நாடு சுதந்திரம் அடைந்த அந்த காலகட்டத்தில், இரு பிரிவுகள்.    ஒன்று அகிம்சை,  அடுத்தபிரிவு,  அவர்களின் பார்வையில்(?) ஹிம்சை.   
ஒரு அணியில் பிரபல தலைவர்கள் காந்தி, நேரு போன்றோர்.    அடுத்த அணியில் நேதாஜி, பகத்சிங்....etc..     அதில் யார் வென்றாலும், அவர்களால்தான் நாடு சுதந்திரம் அடைந்தது என்று நாளைய சரித்திரம் சொல்லப்போகிறது.   அப்படிபட்ட சரித்திரதை ஆணியில எழுத அவர்கள் எடுத்த முடிவு?.

’பகத்சிங்கை தூக்கில் போடப்போகிறோம், உங்கள் கருத்து என்ன?’,  ஆங்கிலேயர்கள் காந்தியிடம் கேட்கின்றனர்.    ’நாங்கள் நடத்தப்போகும் உண்ணாவிரதம் முடிந்தபின், அவரை தூக்கில் போட்டுக்கொள்ள, எங்களுக்கு ஆட்சேபனை இல்லை’, அகிம்சையின்(?) பதில். 
இந்த சம்பவத்தில, அவருடைய நாட்டுப்பற்று, மதஉணர்வு, உங்களை மெய்சிலிர்க்க வைத்திருக்கலாம்.    அதில வென்றவர்கள், ’மாமா’வாகவும், ’தாத்தா’வாகவும் உருவாகினர்.

அடுத்த பிரிவினர், ’போராட்டத்தில கலந்து கொண்டவர்கள்’ என்ற பெயரை பெற்று, அவர்களின் கடைசி காலக்கட்டத்தை, இன்றுவரை தேடிக்கொண்டிருக்கிறோம்.     குறுநிலமன்னர்களால், பிரிந்துகிடந்த நாட்டை ஒன்று சேர்த்த படேலை, வழக்கம்போல மறந்துவிட்டோம். 

ஒன்றுபட்ட சுதந்திர இந்தியாவை,  ஆளும் பொறுப்பு  காங்கிரஸ்க்கு ( நேரு குடும்பத்திற்க்கு கிடைத்தது.) அள்ளிக்கொடுத்தோம்.      மன்னராட்சியை ஒழித்து மக்களாட்சியை கொண்டு  வந்ததற்கு ஒவ்வொரு இந்தியரும் பெருமை கொண்டோம்.      நமது உடம்பில் ஓடுவது இந்திய ரத்தம் என்று தலை நிமிர்ந்தோம்.





இந்திய ரத்தம்     To   திராவிட ரத்தம்

இப்பொழுது, அன்றைய தமிழக சூழ்நிலைக்கு வருவோம்.     சுதந்திரம் அடைந்து, சிலவருடங்களுக்குப்பிறகு, தமிழகத்தில் ஒரு விடிவெள்ளி முளைத்தது.   
அண்ணாவின் பின்னால், அலைகடலென திரண்ட கூட்டம்.     காங்கிரஸை எதிர்த்து கழகங்கள் உருவாகின.     ”திராவிடர்கள், ஆரியர்கள்” என்ற பாகுபாட்டை, ஒவ்வொரு தமிழனும்  உணர்ந்துகொண்ட பொற்க்காலம் இது.    அவரது காலத்துக்குப்பின் நடந்த திரைமறைவு வேலைகள், சொல் ஜாலங்கள், நடிகர்களின் அரசியல் பிரவேசம்.     திராவிட ரத்தம் வடிய ஆரம்பித்து, மனிதர்களின் உடம்பில், நடிகர்களின் ரத்தம் ஏற்றப்பட்ட காலம்.

மக்கள் , மந்தைகளாக பிரிந்து, நடிகர்களின் பின்னால் ஒரு பிரிவினரும், தாய் கழகத்தின் பின்னால் அடுத்த பிரிவினரும் அணி திரண்ட காலங்கள்  அவை.  
காலங்கள் உருண்டோடுகின்றன.      காட்சிகள் மாறுகின்றன.       நடிகரின் மறைவும், நடிகையின் தோற்றமும் தோன்ற ஆரம்பித்த பொற்காலங்கள்.   
இரண்டு பிரிவினர் , மூன்று, நான்காக பிரிய ஆரம்பித்தது.      மனிதர்களின் உடம்பில், பன்றி ரத்தத்தை தவிர, மற்ற ரத்தங்கள் ஊற ஆரம்பித்தது.




திராவிட ரத்தம்   To   அடிமை ரத்தம்

இது இளைய தலைமுறையின் காலம்.    பள்ளிப்பருவத்தில, ‘காந்திய தேசம் என்று பெயர் சொல்லுவார். பிறர் பயங்கொள்ளுவார்’என்ற எண்ணங்கள் ஊறறப்படுகிறது.     தமிழன் என்பதால், ‘இலையில் சோறை போட்டு, ஈ-யை தூர ஓட்டு’ என்ற இலக்கணங்கள் வேறு.     மீடியாக்களால், எங்களையறியாமல், நடிகர்களின் ரத்தமும் சேர்க்கப்படுகிறது.     கழங்களின் துணையால், அவர்களின் ரத்தத்தையும் ஏற்றுக்கொள்கிறோம்.    இப்பொழுது எல்லாம் கலந்த ’கலவையின் அடிமைகள்’ நாங்கள்.

இன்றைய இளைய தலைமுறையினர் ஒன்று, 
தளபதியின் ரசிகனாகவோ, இல்லை, தல-யின் ரசிகனாகவோ
கலைஞரின் தலைமையிலோ இல்லை, லலிதாவின் தலைமையிலோ
அல்லது, சிலபல ’குறுநில மன்னர்களின்’ கட்சி தலமையை ஏற்காவிட்டால், மனிதனாக இருப்பதற்க்கே தகுதியில்லை என்று முத்திரை குத்தப்படுகிறது.

சுதந்திர இந்தியாவில், ’அந்நிய ரத்ததிலிருந்து.. அடிமை ரத்தத்துக்கு’ மாற்ற , நாய் பேய்களாக, அரும்பாடுபட்ட, காங்கிரஸுக்கும், கழகத்துக்கு, நடிகர்களுக்கு, அவர்தம்  வாரிசுகளுக்கு, கட்சித்தலைவர்களின் வாரிசுகளுக்கும்,  முக்கியமாக,  இனி கருவில் உருவாகப்போகும் எங்கள்  தலைமையின் சிசுகளுக்கும் எங்கள் நன்றியினை தெரிவித்துக்கொண்டு ,
அவரவர் வேலையை, திறம்பட செய்த,  கழகங்களின் கால்களில் விழுந்து, நமீதாவிற்க்காக,  அலகு குத்தி, பால்காவடி எடுக்க, ஓர் அணியில் திரளுங்கள் இளைய சமூகத்தினரே..    என்று அறைகூவல் விடுகிறேன்.




டிஸ்கி 1.
இது நமக்கு
  • தலைவர்களின் பணி, நாட்டை சீர்திருத்துவது,
  • நடிகர்களின் பணி, அரிதாரம் பூசிக்கொண்டு அவர்தம் தொழிலில் திறம்பட செழிப்பது.
  • வாரிசுகளின் தொழில், அவரவர் குடும்பத்தொழிலை(?), மென்மேலும் சிறப்புறச்செய்வது.
  • குறுநிலமன்னர்களின் பணி, நல்ல அடிமைகளாக, அணியில் சேர்ப்பது..
நாம் , அடிமைகளாக தொடர்வதா?..  இல்லை.. அவரவர் திறமைகளை  தீட்டிக்கொண்டு, அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறுவதா?.
முடிவு உங்கள் கையில்.

டிஸ்கி 2.
இது குஷ்புக்கு
என்னடா, இவன் நம்ம பொழப்பை கெடுத்துடுவானேனு நினைக்காதீங்க.
எல்லோருக்கும் வயதாகும்.  தோல சுருங்கும். ஆகவே நமீதா, உங்கள் இடத்துக்கு வருவதற்கு, மனம் கோணாமல் உதவுங்கள்

டிஸ்கி 3.
இது அவருக்கு(?..)
எங்கள் தலைவர் ராகுலை, அவமதித்துவிட்டனர் என்று, யாராவது வருத்தப்பட்டால்... உங்களுக்கு என்னுடைய பதில். “நீ வேணா, ராகுலுக்கு பரம்பரை அடிமையா இருங்க பாஸ்....அதற்கு எங்களுடைய வாழ்த்துக்கள்... மேலும், எங்களுக்கு வாழ , கைவசம் நேர்மையான தொழில் இருக்கிறது.

அடுத்தவர்கள் மனசு புண்படக்கூடாது  எனபது பட்டாபட்டியின் எண்ணம். ஆகவே மேற்சொன்னதை, அடித்துவிட்டேன்....யாரும் படிக்கவேண்டாம்...

இது ராகுல்ஜீ-க்கு
ராகுல்ஜீ..ராகுல்ஜீ.. நிம்மள்க்கு பட்ச்ச பய, நிம்மள் பேரை வெச்சவன்,  அடிமையா சிக்கியிருக்கான். அம்மாகிட்ட , சொல்றான்.... ரெண்டு செட் பேண்ட் சர்ட் எடுக்றான். கோயமுத்துர்ர் வரான். அந்த ‘படிச்ச அடிமைய’, நிம்மள் கட்சில சேர்க்ரான்,,
ஜல்தி ஆவோ....



டிஸ்கி 4.
இதுவும் அவர்களுக்கு(?..)
என்னாடா.. பட்டாபட்டி பக்கா லோக்கலா எழுதுவானே.. ஒரு வேளை, தண்ணி,கிண்ணி போடாம, தமிழர் பாரம்பரியத்தை விட்டு விலக்கிப்போறானோ-னு நினச்சீங்கனா, உங்களுக்கு என்னுடைய பதில்...”ஹி..ஹி.. லோக்கல்னா என்னா பாஸ்?..  எனக்கு தெரிஞ்சு, தாய் தந்தை உடலுறவின் மூலம் வாரிசுகள் பிறக்கின்றன. அது சென்னையில் பிறந்து வளர்ந்தா லோக்கல். பக்கத்து ஊரில் பிறந்து , சென்னை வந்திருந்தா, அது பாரீனா?”..புரியலே.. மேலும் எனக்கு புரியவும் வேண்டாம்..

டிஸ்கி 5.
இதுவும் இவர்களுக்கு(?..)
லோக்கல் பிரச்சனைகளின் அடி வேரான..உங்களுக்கு..
நீங்க சொல்ல வந்த விசயம் சரிதான். ஆனால், அதற்காக ஒருவரின், உடலமைப்பை நக்கல் பண்ணவேண்டாமே..ஏன்னா.... குஷ்புவுக்கும் வயசாகும். ஹி..ஹி
.
.
.

Saturday, October 23, 2010

பதிவர்கள் என்றால் யார்?.

”பதிவர்கள் என்றால் யார்?.......”

இந்த கேள்வி ரொம்பநாளா , என்னோட மனசுல உறுத்திகிட்டு இருந்தது..... இருக்குது.

பொழுதுபோக்க, ப்ளாக் ஆரம்பிச்சு, கூத்தடிக்கும், சாதாரண குடி(?)மகன் நான்.
என்ன பிரச்சனைன்னா......மூடிக்கிட்டு சும்மா இருந்தாலும் சீண்றானுக. எழுதினாலும் கிழிக்கிறானுக.

அன்புள்ள வெண்ணை வெட்டி பதிவர்களா. நீங்க பிரபல பதிவர்களாகவோ.. இல்ல ப்ராப்ள பதிவர்களாகவோ, என்ன மயி%$#@ராவோ இருந்து தொலைங்க. வேணாங்கலே.   ஆனா, ரெண்டு மூதேவி சினிமாகாரனுக படத்தை போட்டு,
  • அவனுக்கு கு%$#ண்டி பெரிசா இருக்கா?. இல்ல இவனுக்கு பெரிசா?
  • இவன் நடிச்ச முதல் படம் எது?. 
  • கவர்ச்சி நடிகையுடன், பார்க்-ல ஜல்சா பண்ணிய படம் எது?.
  • உயிரை கொடுத்து , முக்கிய(?) படம் எது?.
  • முத்தம் கொடுத்தபோது கண்களை மூடிக்கொண்ட நடிகை யார்?
  • க்ளைமேக்ஸ் சீனில், தொப்புள் தெரிய ஓடிய நடிகை யார்?
அப்படியெல்லாம் சொல்லிக்கிட்டு, பிரபலம்னு சொல்லிக்கிட்டு திரிஞ்சே.. சாணி ஆயிடுவே.(சாரு சார்.. உங்களை சொல்லலே. நீங்க  எப்பொழுதும்போல தண்ணியபோட்டுக்கிட்டு, பதிவுகளா வாந்தி எடுங்க)

மேட்டருக்கு வரேன்...அப்படிப்பட்ட, அந்த பிரபலமான பதிவரின், ஒவ்வொருபதிவும்..
”ஆகா......... அருமையான,அழகான காவியங்கள்.  ”

ஆபீஸர் சார்...நீங்க, குனிஞ்சு.. நிமிர்ந்து.. குத்த வெச்சு... எப்படி வேணா எழுதுங்க.  யாருயா வேணாங்கறா?.  ஆனா.. ங்கொய்யாலே.. என்னை சீண்டி விட்டே, பொங்கி எழுந்து..பொங்கல் வெச்சுருவேன்.

உண்மையசொல்றேன்.  பேசாம,  இந்த பொழப்புக்கு, மருதாணிய மஞ்சள்ல குழைச்சு, வெறும்வயிற்டோட, கிழக்கு பார்த்து கொஞ்சம்  குனிந்தவாறு நின்று, பீச்சினால்..  (ஸ்பெல்லிங் மிஸ்டேக்),  பூசினால்,  பிரபல பதிவர்  ஆயிருக்கலாம். (Again....ஸ்பெல்லிங் மிஸ்டேக்)   ஆகியிருக்கலாம்     

( இதோட மருத்துவ குணங்கள் என்னென்னனு,விளக்கி சொல்லமுடியுமா? என கேட்டு வரும் கமென்ஸ் மீது, உடனடியாக சாணி பூசி அழிக்கப்படும் என்று இந்த நேரத்தில  சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.)


அய்யா. நல்லவர்களே. இப்படி கஷ்டப்பட்டு, ப்ளாக் எழுதுவதற்க்கு, கேரளாவுக்கு அடிமாடாப்போங்கய்யா...... (போகும்போதாவது மறக்காம, கோடு போட்ட டீ-சர்ட்டை, கழட்டி வெச்சுட்டு போகவும்.)

இனிமேல, காந்தி சொன்னமாறி, என்னை அடிச்சாலும், மிதித்தாலும்,  ”அகிம்சை தான் என் உயிர்....அதுதான் என்  மூச்சு”-னு சொல்லிக்கிட்டு,குனிந்து நின்னு முதுகு காட்டப்போறேன்.  போறவன், வரவனெல்லாம் போட்டு   மிதிங்க..
.
.
.
இப்படியெல்லாம் சொல்லாமுனு பார்த்தேன்.

.
.
.
ஆனா.. ஒரு மெயில்..  சாதாரண மெயில் இல்லை பாஸ்.
அது முக்கியமான , பர்சனல் மெயில் என்னோட மனசை மாற்றிவிட்டது.
சாதாரண குப்பை மேட்டுல இருந்த என்னை, கோபுர உயரத்துக்கு கொண்டு செல்லப்போகும் மெயில் அது.  

இனிமேல..சண்டை, சச்சரவு, பொய், புரட்டு.. எதுமே வேணாய்யா .
மூடிக்கிட்டு ( ப்ளாக்கை..) பொழப்ப பார்க்கபோகலாமானு, முடிவு செய்யும் காலம் வந்தேவிட்டது.  முடிஞ்சா, கமலஹாசனை, ” என்னோட மாமனாராய் இருக்க விருப்பமா(?) “ -னு கேட்கப்போறேன்.


சரி.. விசயத்துகு வராம எதுக்கு, வளவளனு பேசறேனு சொல்றீங்களா?.
பர்ஷனல் மெயிலாச்சே. எப்படி பப்ளிக்கா சொல்றதுனு நினைச்சேன்.
பங்காளி பயலுகளா போயிட்டீங்க.. உங்ககிட்ட சொல்லாம யாருகிட்ட சொல்லப்போறேன்.

ஆனா, படிச்சதும், எட்டாம்பட்டி வேலை செஞ்சு, நீங்க கமலஹாசனுக்கு போன் பண்ணக்கூடாது..   சொல்லிட்டேன்..

மேல் விபரங்களுக்கு, இதை   சொடிக்கி  பார்த்துக்கொள்ளுங்கள்..


டிஸ்கி:
இந்த பதிவு யார் மனதையும் புண்படுத்த எழுத்தப்பட்டதல்ல.
அப்படி யாராவது மனம் புண் பட்டிருந்தால்............  விடுங்க...   தீபாவளிக்குள்ள ஆறிவிடும்..
.
.
.
(  வா.. வா...  தீபாவளிக்குள்ள வா.... கொத்துக்கறி போட..... I am Wating.... )
.
.
.
.

நானும் பணக்காரந்தேன்..

Hello Friend.

I am Chief Engineer in the Computer/Telex department of (BOA) Bank Of Africa Ouagadougou Burkina Faso. West Africa.I am writing this massage to you under cover,Do not disclose the secret of this transaction to anyone till you receive your fund.


I want to let you know that Your payment US$12.500,000 was approve for payment under category (A) this quarter payment in the year 2010.

Your payment US$12.500,000 has reflected several times in our computer as pending and seems to have been forgotten.

Your urgent response to this offer will guide me immensely in our decision making.Please send the below information to me.

Your Full Name
Your Residential Address
Your Monile Telephone Number.

I want you to call me on my private telephone number 00 226 766 44 000 for more details.



Mr Alpha Campoare
Chief Engineer in the Computer
Telex department.
+ 226 76 644 000

--------------------------------------------------------------------------------------

அண்ணா வணக்கண்ணா.. என்னையும் பெரிய மனுசனா மதிச்சு காசு கொடுக்கிறேனு கூவிக்கினு  இருக்கீங்க...

ஆணி அதிகமானதால், இந்த ரகசிய கடிதாசிய படிக்கமுடியாம போயிடுச்சுங்கண்ணா..
இப்ப படிச்சு முடிச்சதும். என்னோட கால் நிலத்திலிருந்து முக்கா அடி மேல போயிருச்சுனா .. பார்த்துக்குங்களேன்... உங்க வார்த்தைக்கு வீரியம் அதிகம்ண்ணே...


 ஆங்.. டீட்டெய்லு வேணுமா?..

பெயர்  : பட்டாபட்டி
விலாசம் :  காந்திபுரம் கக்கூஸ் பக்கம்...
போன் நம்பர் :  "1800-ங்கொய்யாலே"


மறக்காம, நான் வரும்போது எவ்வளவு சூட்கேஸ் எடுத்துகிட்டு வரனுமுனு மெயில அனுப்புங்க ஆபீஸர் சார்...
.
.
.

Monday, October 11, 2010

எந்திரன் - பட்டாபட்டியின் பார்வையில்




டைரக்டர் ஷங்கர் அவர்களுக்கு, அன்பான, அடக்கமான, பண்பான, பன்னாடை(?), பட்டாபட்டி  எழுதும் கடுதாசி. சன் டீவியின் கொடுமையும், சக நண்பர்களின் துக்க விசாரணயையும் தாண்டி,  எந்திரனை பார்க்கவைத்த பெருமை, அண்ணன் கலாநிதிமாறனையே சேரட்டும்.

இன்னும் ஒரு வாரத்தில, இந்த படத்தை பார்க்காமல்  இருந்தால், தெய்வகுற்றமாகி, அலகு குத்தி,  கையில் தீச்சட்டி ஏந்தி வீதி வீதியாக சுற்றும் நிலைக்கு ஆளாக்கியிருப்பார்கள். எப்படியோ, என்னை தப்பிக்க  வைத்த, எங்கள் அன்னை சோனியா வாள்க....சாரிங்க... வாழ்க...  ( இனிமேல அரசியல் பேசினா, சாணி கொண்டு எறியலாம் என்று தாழ்மையுடன்  கூறிக்கொள்கிறேன்..)

எந்திரன் தமிழ் படமா?....................  சொல்லலாம்
ஆங்கிலப்படமா ?............................  இருக்கலாம்
சயின்டிபிக் படமா?.........................  அப்படியும் வைத்துக்கொள்ளலாம்
சென்டிமெண்ட் படம்?....................  ஹி..ஹி.. இருக்கலாம்
எல்லோரும் பார்க்கவேண்டிய படமா?......  ஆமாய்யா..ஆமாம்
ஐஸ் அழகா?......................................  அப்படியும் ஜொல்லலாம்..
தலைவர்?............................................  சூப்பரோ சூப்பர்..

ஆக மொத்தம் எல்லாம் சேர்ந்த கலவையை, கலந்துகட்டி தமிழர்களுக்காக கொடுத்ததை, வாழ்த்தி  வரவேற்க்கும் இந்த தருணத்திலே.. ( யோவ்.யோவ்.. எழுதிக்கிட்டு இருக்கும்போது எதுக்குய்யா  சாணிய எடுக்கிறே?...)

ஆனாலும், ரஜினிய வெச்சு ஹாலிவுட் ரேஞ்சுக்கு படம் எடுப்பதில், உங்களை மிஞ்ச  ஆள்கிடையாதுங்கண்ணா.  அதுக்கு பணம் கொடுத்து உதவிய, அண்ணன் கலாநிதியையும், அவருக்கு  இந்த வாய்ப்பை அளித்த அய்யா கலைஞரையும் , நினைக்காமல் இருந்தால், அவன் தமிழன் கிடையாது.


ஐஸ்வரியாராய் அழகா?.. இல்ல எல்லா அழகும் ஐஸ்வரியாவா?. இதுக்கு பதில் சொன்னா அருவாளோட  அமிதாப் வந்தாலும் வரலாம். எதுக்கு வம்பு. அதுவுமில்லாம, வரவர எனக்கு அருவாள்-னாவே அலர்ஜி..

ரஜினியின் நடிப்பு வழக்கம்போல கலக்கல்.... என்ன.(!)....... படம் பார்த்துட்டு வெளிய வரும்போது, டாக்ஸி டிரைவர் முதற்ககொண்டு,  ரஜினிமாறியே தெரியறாங்கண்ணா. அதுக்கு காரணம் உங்க உழைப்புதாங்கண்ணா.  அதுக்காக உங்களை குற்றம் சொல்றேனு நினைக்காதீங்க. அந்தளவு படம் என்னுடைய மண்டையில் பதிஞ்சிருச்சு..ஹி..ஹி



அப்புறம் முக்கியமா, ஒண்ணு சொல்லாட்டி,எனக்கு சாப்பாடு இறங்காது. டெக்னாலஜிய யூஸ் பண்ணி, பூந்து விளையாடியிருக்கீங்க. அதுக்கு செலவு அதிகமாயிருக்கும். வெள்ளக்கார துரைகளையெல்லாம்(?)  வரவெச்சு எடுத்ததா,  பழனிச்சாமி சொன்னான். மிச்சம் மீதியிருந்தா, பத்திரமா வையுங்க. நம்ம, அடுத்த லோ-பட்ஜெட் படத்துக்கு யூஸ் பண்ணிக்கலாம். (பணத்தை அள்ளி வீச நாம என்ன ஆட்சியிலேயா இருக்கோம் பங்காளி..)

மறக்காம, அமிதாப்புக்கு போன் பண்ணி, நம்ம ’அழகாத்தா’வுக்கு சுற்றிப்போடச்சொல்லுங்க. எனக்கு வேற வயிற்றை கலக்குது. சரி விடுங்க அண்ணாச்சி.  சொல்லாம போயிடலாமுனு பார்த்தா, விட மாட்டீங்கிறீங்க.

எனக்கு பர்கரை, பாயாவோட கலந்து சாப்பிட்டா, பின்னாடி கிரீன் சிக்னல்(?) விழும். அன்னை சோனியாவின் ஆசியிலே, தலை நிமிர்ந்து பீடு நடைபோடும் இந்திய மகனாகிய நான், அதுக்காக, சாப்பிடாம இருக்கமுடியுமா?.

இதோ.. சாணி வருவதற்குள் ஷட்டரை போடும்
உங்கள் பட்டாபட்டி..

வாழ்க மக்கள், வளர்க சன்...வெல்க பணநாயகம்...
.
.
.
டிஸ்கி
இதுவரை எந்த கட்சியிலும் உறுப்பினர் அட்டை வாங்காததால், எனக்கு கொ%$#@டை தாங்கும் மனப்பான்மை  வரவில்லை என கூறிக்கொள்கிறேன் ,
ஆங்கில பாணியில பர்கரா?.. இல்லை...நம் பாணியில் பாயாவா?.. ரெண்டும் கலந்து அடிக்காதீங்க சாமிகளா.....
.
.
.