என்னடா.. பட்டாபட்டி ,இன்னுமா, இடைதேர்தலில் இருந்து விடுபடலைனு, நினைக்கிற மக்களுக்குகாக இந்த பதிவு..
அரசியல்வாதிகளும் மனிதர்கள்தான்..அவர்களுக்கு குடும்பம்,குட்டினு இருக்கும்.. அதையெல்லாம் விட்டுவிட்டு, மக்களுக்காக,ஊண் உறக்கம் தவிர்த்து , வீதி வீதியாக அலைந்து ஓட்டு சேகரித்து.. ஒரு நிமிசம் நினைத்துப்பாருங்க சார்..உங்களுக்கே
மனசு நெகிழும்..
ரைட்.. ரொம்ப நெகிழவிட்டுவிடாதீங்க..
முதுகுத்தண்டு வளைந்துவிடும்..தேர்தல்னா என்ன?.. அண்ணாச்சி கடைக்கு போயி
1 கிலோ புண்ணாக்கு வாங்குவதுனு நினைச்சீங்களா? இல்ல சார்.. இல்லை..
Target - தொகுதி
தேர்தல் தேதி அறிவிச்சவுடன்.. முதல்வேலை அந்த தொகுதி எங்க இருக்குனு கண்டுபிடிக்கனும்..
சரியான தொகுதி..
சரியான மக்கள்..
சரியான நேரம்..
ஏன்னா..அவர்கள் உழைப்பு,
விழலுக்கு இறைத்த நீராகிவிடக்கூடாது பாருங்க. அதனால..
Planning - கணிப்பு
தொகுதில எவ்வளவு நம்ம ஜாதி..எவன் எதிர்கட்சினு, பணம் கொடுத்தா குத்துவானுகளா?.. இல்ல சிக்கன் பிரியாணி+குவாட்டருக்கே குத்திட்டு போயிடுவானுகளா?.... எதிர்த்து நிற்பவன் பண முதலையா? இல்ல பச்சோந்தியா?.... போனதடவை சொன்ன வாக்குருதியை, , திரும்பவும் ரீமேக் பண்ணி எப்படி சொல்லுவது?..... அதெல்லாம் பொதுக்குழுவில முடிவு செஞ்சு, தொகுதிய,தரவாரியா பிரிக்கனும்..
Decision Making - வேட்பாளர்..
இது ரொம்ப கஷ்டமான காரியம் சார்..இதை பண்றது,
’விஜயகாண்டு வெச்சு பிட்டு படம் எடுத்து.. 100 நாள் ஓட்டறதுக்கு சமம்’..
இதுல முக்கியமா கவனிக்க வேண்டியது..
சொந்தக்காரன்..மாமன் , மச்சான்.. சகலையோ சித்தப்பா..
இல்ல.. நல்ல கொழுத்த பணக்காரன்..
இல்ல.. டம்பி பீசு.. எதுசொன்னாலும் தலையாட்டும் பாருங்க ..அதெல்லாம் கன்சிடர் பண்ணிட்டு, பேரை அறிவிக்கனும்..
Action - தேர்தல் களம்
இதுல, கட்சிக்கு நிதிசேர்பது..
போஸ்டர் ஒட்டுவது..
தினமும் முச்சந்தியில் மீட்டிங்..
பணம் பட்டுவாடா..
கள்ள ஓட்டு..
நல்ல ஓட்டு..
கட்டைபஞ்சாயத்து..
பிரியாணி..
ஆள் சேர்ப்பது அடக்கம்...
OutCome - தேர்தல் முடிவு..
இங்க தான் சார் மூளைய உபயோகிக்கனும்..
ஜெயிச்சா.. நன்றினு ஒரு பெரிய கும்புடு போட்டுட்டு போயிட்டேயிருக்கனும்..
தோத்தா.. இது எதிர்கட்சிகளின் சதி..ஊழல் தலைவிரித்தாடிச்சு..
இன்னும் பிறக்காதவர்கள் எல்லாம் வந்து ஓட்டு போட்டுட்டானுக..
அடுத்த ஆட்சி எங்களுதுதான்.. bla..bla...bla..னு சொல்லிட்டு
போயிட்டேயிருக்க வேண்டியதுதான்..ஏன்னா.. காலம் கலிகாலம் சார்..
சீக்கிரம் திரும்பி வரவேண்டியிருக்கலாம்.. (உள்குத்து எதுவுமில்லை -ஆசிரியர்)
Thanks Giving - மக்கள்
இந்த பார்ட்..நாம...அதாவது மக்கள்....
இப்படியெல்லாம் போராடி.. மக்களுக்கு நல்லது பண்ண வந்தா.. நக்கல் பண்ணிகிட்டு..சே.. கட்சிக்காரன் தோற்றானோ.. இல்ல ஜெயிச்சானோ.. அது வேற விசயம்.. ஆனா, பொழப்ப விட்டிவிட்டு உங்களுக்காக பாடுபட்டானே.. அவனுக்கு நீங்க என்ன பண்ணுனிங்க..?
ஓட்டு போட்டேனு சொல்லாதீங்க....
அது ஜனநாயகக்கடமை சார்..அதுவுமில்லாம காசு வாங்கித்தானே போட்டீங்க..அதைய பெரிய ம^%$ரா சொல்லக்கூடாது..
மாடுகளை மதித்து, மாட்டுப்பொங்கல்+ஜல்லிக்கட்டு கொண்டாடும் தமிழர்கள் நாம்.. ஆனால்.. இவர்களுக்கு எதுவும் பண்ணுவதில்லை நாம்.. ஏன்?..
இனிமேல நாம அவர்களுக்கு என்ன/எப்படி செய்யலாமுனு சொல்றேன்.. கேட்டுக்குங்க..
இதுக்கு தேவையானவை...
சைக்கிள்
( பைக் வேணாம்.. சாமகோடாங்கி பிரகாசு..எப்படி கார்பன் சுவடுகளுக்கு சப்போர்ட் பண்றேன்..)
மரப்பலகை
( ரோஸ்விக்.. எனக்கு தெரியும்.. மரம் வெட்டுனா, நீர்வளம் குறையுமுனு..ஆனா வேற வழியில்லை எனக்கு..)
வேட்பாளர்கள்
( நம்மை வழிநடத்திச்செல்லும் தலைவர்கள்)
ஓட்டாளர்கள்
( அட நாமதான்..)
அடுத்து மரத்தை வெட்டி..மேடான பாலம் மாறி செட்டப் செய்யுங்க..
தொகுதிக்கு பாடுபட்ட..தேர்தலில் நின்ற எல்லா வேட்பாளைகளையும்
வரச்சொல்லி.. வரிசையா படுக்கச்சொல்லனும்..அடுத்து..ஓட்டு போட்டவனுக
க்யூல நின்னு , கீழ உள்ள படத்தில் உள்ளது போல ஜம்ப் பண்ணுங்க.
.
விதிமுறைகள்..
ரேசன் கார்ட் உள்ளவர்களுக்கு மட்டும்தான் கலந்து கொள்ளலாம்..
கள்ள ஓட்டு கண்டிப்பாக அனுமதிக்கப்படாது..
ஒருவர் ஒரு தடவைதான் ஜம்ப் பண்ணனும்..
யார் மேலையும் படாமா, ஜம்ப் பண்ணிவிட்டால்..1 குவாட்டர் இலவசம்..
ஒரு வேட்பாளர் மேல் பட்டுவிட்டால்.. அவருக்கு நீங்கள் 5கிலோ ரேசன் அரிசியும்..2 சாத்துகுடியும் கொடுக்கவேண்டும்..
இரண்டு வேட்பாளர்கள்மேல் பட்டுவிட்டால்..5 கிலோ அரிசி + 2 சாத்துக்குடி + நீங்கள் அவரிடம் வாங்கிய பணத்தையும் திருப்பிகொடுக்கவேண்டும்..
ஓ.கே..
ஆரம்பியுங்கள்.. ஸ்டார்ட்..
.
.
இந்த விளையாட்டு, வீடியோ கேமரா மூலமாக,கண்காணிக்கப்படுவதால்..ஊழல் நிகழ வாய்ப்பில்லை என
தினக்குசும்பு நிருபர் பேட்டி அளித்துள்ளார்....
.
.
.