Pages

Saturday, January 30, 2010

விடாது கருப்பு... ( தங்கபாலு பாகம் 2 )



பட்டாபட்டி ஆபிஸ்..

ஒரு வழியா , போன பதிவோட , தாக்கதிலிருந்து  மீண்டு ,
நானாகவே சாப்பாடு சாப்பிடும்" அளவுக்கு ரெடியாயிட்டேன்...

திடீர்-னு என்னோட போன் கத்தியது..    யாரு-னு பார்த்தா "Unknown Person"..
இன்னும்,   இது மாறி பய புள்ளைக ஊருக்குள்ள இருக்காங்களே-னு நொந்துகிட்டு போனை  ஆன் பண்ணினால் " நான் தங்கபாலு.. தமிழக காங்கிரஸ் தலை......................"...
.
.
டொக்.. சே.. விடாது கருப்பு போல.. ( ஆகா.. தலைப்ப   கோத்திட்டேன் )..
பேசாம  ஆபிஸ்க்கு ரெண்டு நாள் லீவு விட்டுவிடலாமுனு ,
நம்ம கஸினக் ( அதாங்க அஸின்-கஸின்)  கூப்பிடலாமுனு போனா ,
நம்ம ப.சி  ( புரியாதவங்க.. இதைப் படிச்சுட்டு வாங்க)
போனைக் கையில வெச்சுட்டு வாசலிலே பரிதாபமா  நிக்கிறாரு..

என்னப்பா.. வேலை நேரத்திலே இங்கே நிக்கக்கூடாது.. போ.. போ..போயி வேலைப் பாரு....
.
சார்.. தங்கபாலு லைன இருக்காரு.. உங்ககூடப் பேசனுமாம்..
.
சே.. காலக்காத்தால சனி,  சங்கோட.....சரி..சரி.. போனைக் கொடுத்துட்டு வேலையப் பாரு..
.
என்னா வேணுங்க உங்களுக்கு.. சாகவாசமே வேண்டாமுனுதான் வந்துட்டுமே.. இன்னும் எதுக்கு போன்?
.
.
நானும்  ஒரு கட்சி தலைவருனு தெரியாம பேசிட்டீங்களா..  மன்னிச்சு , திரும்பவும் வரனுமா?...
இங்க பாரு..நான் கவரிமான் ஜாதி.. உங்க ஆபிஸ்க்கு அடியெடுத்து வைப்பதில்லையினு சத்தியம்  பண்ணியிருக்கேன்.. 
அதனால.....
.
.
என்னாது.. வெளிய எங்காவது பார்க்கலாமா..?..என்னைய்யா.. காத்து போன பலூன் மாறி பேசறிங்க.. என்னாச்சு..
.
.
சரி.. சரி.. ..ஆனா என்னோட ஷு-வும் , பக்கிரியோட செருப்பும் இங்க வந்து சேரனும்..   புரிஞ்சதா?... ஓ.கே.. நாளைக்கு காலையிலே தெருமுக்கு டீ-கடையில பார்க்கலாம்..
.
.
சரிப்பா.. ஒரு டீ- தானே...வேனுனா வடையும் வாங்கித்தரேன்..
.
அட.. உடப்பா.. ரொம்ப புகழ்ந்துகிட்டு...சரி..சரி..
டொக்..

சே... எத்தனை மணிக்குனு கேக்காம சந்தோசமா போன  வெச்சுருச்சே  .உங்க. கட்சி வெளங்குமய்யா...
.
.
அடுத்த நாள்
நேரம் :காலை 9 மணி..
இடம் : தெருமுக்கு டீ-கடை
..

தலைவா.. வாங்க தலை.. நானே உங்களை கூப்பிடனுமுனு நினைச்சேன்..

ஏன் மன்னாரு.. என்னாச்சு..?

பாருங்க தலை.. விடியகாலை  4மணியில இருத்து கடைக்கு முன்னாடியே உக்காந்திருக்காரு.. போ.. போ.. சொன்னாலும் போக மாட்டேங்கிறாரு....
.
அட.. தங்கபாலு.. எப்ப வந்தீங்க?...
.
தங்கபாலு ,  மன்னாருவை பார்த்து.."பார்த்தயா.. நானு  சொல்லலே..பட்டாபட்டி தங்கம் -னு "-
.
.

மன்னாரு..  அவருக்கு டீ-யும் , ரெண்டு வடையும் என்னோட கணக்கில கொடுத்துடுங்க..
அப்புறம், சொல்லுங்க பாலு.. என்ன விசயம்.. இவ்வளவு சீக்கிரமா?..

சார்.. நேற்று நடந்ததுக்கு நான் மன்னிப்பு கேக்கலாமுனு...........  
நேற்றே புறப்பட்டுவிட்டேன்.....  ரொம்ப நாளா , கட்சி ஆபிஸ்-னே காவலுக்கு இருந்ததாலே , ரோடு எல்லாம் மறந்துபோச்சு..ஹி..ஹி 
அப்புறம் வேலூர்-ல ஒருத்தரு வழி சொன்னாருங்க..எப்படியோ சென்னை வந்துசேர்ந்திட்டேங்க..

பக்கத்தில 5 கி.மீ இருக்கற கட்சி ஆபிஸுக்கு 150 கி.மீ சுற்றி வந்திருக்கீங்க..
சொல்லுங்க.. என்ன விசயம்?

நீங்க எப்படிங்க , கட்சிக்கு ஆளச்சேர்க்கிறீங்க.. ஏதோ எங்களுக்கு சொன்னா
நாங்களும் ரெடியாயிடுவோமில்ல..
..
பாலு..முதல நான் கேக்கறதுக்கு பதில் சொல்லுங்க..
நீங்க சொல்லும் பதிலைப்பார்த்துதான் என்ன பண்ணலாமுனு சொல்வேன்..   ஆனா அப்புறமா ,Consultant Fees-ய எங்க ஆபிஸ்ல கட்டிடனும்.. சரியா?..


சரிங்க.. அப்படியே செய்துடுவோம்..

ஓ.கே..
Q1...உங்க அன்னையப்பற்றி முதல்ல....
அவர்கள் வெளி நாட்டுக்காரங்க..
எப்படி நிழல் பிரதமராயிருக்காங்கனு ஒரு பிரச்சனை வந்ததே..
அதுக்கு உங்க கட்சிக்காரங்க எப்படி எதிர்கொண்டீங்க?..

அதுங்களா..நாங்கதான் பக்கம் பக்கமா அறிக்கை விட்டோமே..
அவங்கதான் எங்க அன்னை.. மற்றவங்கெல்லாம் நொண்ணையினு..
இதுபோக , தீக்குளிக்க ரெண்டுபேர ரெடி செய்தோம்..

அப்புறம் .( யோசனை செய்கிறார்...).. ஆங்க்.. இந்தப் பிரச்சனைக்குதான்,
எல்லா தமிழக காங்கிரஸ் தலைவர்களும் ஒற்றுமையா சேர்த்து அறிக்கை விட்டோமே..  அது கூட "மாபெரும் சரித்திரம் மற்றுமொரு அதிசயம் " -னு தினமலர்-ல நீயூஸ் வந்ததே.. அப்புறம்...

சரி.. சரி.. ரொம்ப யோசனை பண்ணாதீங்க..அப்புறம் பட்டாபட்டி சதி பண்ணுனதாலதான் தலை முடி  கொட்டிருச்சுன்னு அறிக்கை விடுவீங்க..
அடுத்த கேள்வி..

சார். முதல் கேள்விக்கே பதில் சொல்லலீங்க..

பாலு..எல்லாவற்றுக்கும் சேர்ந்து கடைசியா பதில் சொல்லுகிறேன்
நடுவல , நடுவுல பேசக் கூடாது.. அப்புறம் டீ-க்கு காசு கொடுக்கமாட்டேன்.என்னா?..

சாரி சார்.. சாரி சார்..

இப்ப
Q2..
தாத்தா திவாரி பிரச்சனைய எப்படி ஹேண்டில் பண்ணுனீங்க ?

அது வந்து.. அது வந்து..
ஆங்க்.. "கட்சியில் சில கருப்பு ஆடுகள்"...கட்சியவிட்டு நீக்குவோம்...
கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம்..அப்படி.. இப்படினு..

ஓ.கே பாலு.. போதும்... போதும்..இப்ப சொல்றேன்.. உங்க கட்சி.... கஷ்டம்தான்..

என்ன சார். இப்படி சொல்லீட்டிங்க...

அப்புறம் என்னையா.. சும்மா உப்பு சப்பில்லாம பேசுனா, எவன் கட்சியில சேருவான்?..
இதுல வேற என்னையே பிடிச்சுப் போட " ப்ளான் பண்றாங்களாமா.. ப்ளான்-னு.."

சார். அதுதான் மன்னித்துவிடுங்கள் என அறிக்கை .. சாரி சார்..போன்-ல சொன்னேனே...


சரி..சரி. நோட் பண்ணிக்க...
முதல்ல Q1-க்கு.....

நீங்க எதுக்கையா மற்றவங்க " வெளி நாடு"-னு சொன்னா, ஒத்துகிட்டு பதில் அறிக்கை கொடுக்கிறீங்க..
 
இந்தியா - முதல் எழுத்து "இ".... மொத்த எழுத்து   " 4 "

இத்தாலி - முதல் எழுத்து "இ".... மொத்த எழுத்து  " 4 "


அப்புறம் எப்படியா வெளி நாடுனு சொல்லுவீங்க? சொல்லி பதிலுக்கு கிழிப்பீங்களா.....அத விட்டுட்டு...

அடுத்து Q2

திவாரியப் பத்தி தப்பாவே எல்லோரும் சொல்றாங்க.. அவரு சுதந்திர போராட்டத்தில எல்லாம் கலந்துகிட்ட...    எவ்வளவு பெரிய ஆளு..அவரப் போயி கொச்சப் படுத்திக்கிட்டு....

அவரு என்ன அவருக்காவா பண்ணினாரு..உங்க கட்சிக்கு ஆள் சேர்க்க அந்த வயசிலும் , அயராது வேலை செஞ்சிருக்காரு..

ஏதோ பொறந்தா........... கட்சிக்கு நிதியா கொடுக்கலாமுனு அவர் நினைத்து பண்ண,    நீங்க என்னமோ "கருப்பு ஆடு.. வெள்ளை பூனை"-னு அறிக்கை உட்டு .......அவர் மனச நோகடிச்சிட்டீங்க...
அப்புறம் எப்படியா கட்சிக்கு ஆள் சேர்வாங்க..?

அட.. ஆமா சார்.. நான் இந்த கோணத்தில பார்க்கவேயில்ல..
இதைப் புரிஞ்சுக்காம,     நானே "எங்கள் அன்னை"-க்கு ஒரு கடிதம் போட்டுட்டேனே.. முருகா...
மன்னிச்சுக்குங்க..நான் இப்பவே ஒரு அறிக்கை...

நிறுத்து.. நிறுத்து...அறிக்கையப் பத்தி இந்த டீ-கடையில பேசக் கூடாது..
அப்புறம் மன்னாரு என்ன பண்ணுவானு அவனுக்கே தெரியாது..

.
சார். இவ்வளவு நல்லா சொல்றீங்க.. அப்படியே , ஒரு சின்ன கையெழுத்து போட்டீங்கனா...

ஆகா.. தொழிலில கரெக்டாதான் இருக்காங்க...இப்படியே உட்டா நமக்கே ஆப்படிச்சாலும் அடிச்சுடுவாங்க...

சரிப்பா.. உங்க திவாரி எப்படியிருக்காரு?.. .

அய்யோ.. நான் தாத்தா திவாரிக்கு ஏதாவது பண்ணனுமே?..அவரு இப்ப எங்கிருக்காரு சார்...?

(எப்படியிருக்காருனு கேட்ட.... எங்கிருக்காருனு என்னையே கேக்கறாங்க.)

இப்ப சொன்னீங்களே.. அது..சரி.. நேரா தெற்கு நோக்கி போயிட்டேயிருங்க..
கடைசியா கடல் வரும்..ஆமாமா. நீலக் கலருதான்..

அடையாளத்துக்கு ஒரு பெரிய வள்ளுவர் சிலையிருக்கும்.. அதுக்கு இடது பக்கத்திலே  கடலுக்குள்ள வண்டிய உட்டீங்கணா நேராப் போயிடலாம்..

முக்கியமா , கரையில இருந்து கத்துவானுக..உகூம்.. காதில விழப்படாது.. நேரா உடுங்க..

சார்.. நம்ம காரு கடலுக்குள்ள ஓட்டுனது இல்ல சார்..

அட.. இது ஒரு பிரச்சனையா...

பம்பர்ல ஒரு சின்ன மஞ்சத்துணிய கட்டிடுங்க.. ஒண்ணுமாகாது..


வரட்டா..


.
.

Friday, January 29, 2010

பேட்டி எடுப்பது தப்பா சார் ?.....

செய்தி : சென்னை சத்யமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் சார்பில் குடியரசு தினவிழா இன்று கொண்டாடப்பட்டது. இதில் தங்கபாலு தேசிய கொடி ஏற்றினார்.
அப்போது செய்தியாளர்கள்,  "ஓரிரு தினங்களுக்கு முன் புதுடெல்லி சென்ற அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா, காங்கிரஸ் தலைவர் சோனியாவை, ஜெயலலிதா  சந்தித்த காரணத்தால் தமிழகத்தில் கூட்டணி மாற்றம் ஏற்படுமா? " எனக் கேள்வி எழுப்பினர்.


அதற்கு பதிலளித்துப் பேசிய தங்கபாலு, “சோனியா காந்தியை ஜெயலலிதா டெல்லியில் சந்தித்தது சாதாரணமாக நிகழ்ந்தது.  தலைவர்கள் சந்தித்துக் கொள்ளும்போது மரியாதை நிமித்தமாக பேசிக் கொள்வது வழக்கமானது. அதேபோலதான் இருவரும் பேசிக்கொண்டனர். இதில் வேறு எந்த முக்கியத்துவமும் இல்லை. ஊடகங்கள்தான் பெரிதுபடுத்துகின்றன.
தமிழகத்தைப் பொறுத்த வரை திமுக-காங்கிரஸ் கூட்டணி வெற்றிக் கூட்டணி. எங்கள் கூட்டணி வலுவாக உள்ளது. இதில் எந்த பாதிப்பும் வராது” என்றார்.

------------------------------------------------------------------------------------------------------


சார்.. மேலேயுள்ள செய்திகளைப் படித்தீர்களா?..
<.சே.. போட்டோ வுல கூட என்னை மொரைக்கிறாரு....>
.
நீங்க நினைப்பது சரிதான்.. எனக்கும்....... அதே டவுட்தான்  வந்தது...

புரிஞ்சவங்க அப்படிகா ஜம்ப் பண்ணி அடுத்த பாராவுக்குப் போயிடுங்க....
பத்திரம் சார்.. பார்த்து...( கீழ விழுந்தா.... தற்கொலை முயற்சியினு போலீஸ் புடிச்சுக்கும்..)
.
.
( ஓகே.. நம்மாளுக....... இப்படிக்கா எங்கூடவே வாங்க...)

  • எதுக்கு "டெல்ல்ல்ல்லியிலே" சந்திச்சாங்க?
  • அம்மா ,"  அன்னை   "-கு வணக்கம் வெச்சாங்களா?
  • பதிலுக்கு அவிங்க , இவிங்களுக்கு வணக்கம் வெச்சாங்களா?
  • அப்படினா...கலைஞரும் , அம்மாவும் மரியாதை நிமித்தமாக பேசிக்கொள்வார்களா?
  • இது எப்படி மக்களுக்கு தெரியாம போயிடுச்சு?.
  • சந்திப்பு சாதாரணமா டெல்லியில நடக்கும் அளவுக்கு....நாடு...  பணக்கார நாடு ஆயிடுச்சா?
  • "ஊடகம் பெரிதுபடுத்துகின்றன"  என்றால்  பதிவுலகம் ( அட.. நாமதான்...) நல்லவர்களின் கூடாரமா?.
  • "திமுக-காங்கிரஸ் கூட்டணி வெற்றிக் கூட்டணி" யென்றால் , ஏன்  இடைத்தேர்தலிலே பணம் பட்டுவாடா நடந்தது?..

இவ்வளவுதாங்க நம்ம டவுட்டு..
.
.
.
.
(  ஜம்ப் பண்ணினவங்க... இங்க வந்து சேர்ந்துக்கோங்க...)


தங்கவாலு.. சே.. எல்லாமே தப்பு... தப்பாவே... வருது..
ஆங்....நம்ம தங்கபாலு அண்ணன் சும்மாதானே  இருப்பாரு....
பாதிப்பு வேற வராதுனு அடிச்சு சொல்றாரே......
.
எதுக்கும் " இரண்டு இத்தாலி பிஸ்சா " வாங்கிட்டு,
அவருக்கு போயி ஒரு சலாம் போட்டுட்டு  வரலாமுனு
கம்பெனி வேன் எடுத்துகிட்டு போனோமா....( அட நானும் , பக்கிரியும் ).
.
.
.
மூச்சு வாங்குது...கொஞ்சம் இருங்க தண்ணி குடுச்சுகிறேன்...
.
.
.
போனோமா , பெரிய "கேட்"-னே.. முன்னாடி தடி தடியா இரண்டு பேரு.. கையில வேற குச்சின்ணே...எப்படியிருக்கும் எங்களுக்கு.....
பார்த்ததுமே பக்கிரி , பாத்ரூம் எந்தப்பக்கம்னு,    பார்க்க ஆரம்பிச்சுட்டான்..
.
.
இரண்டு பேப்பர் கொடுத்து
"பேரு..... 
வயசு.......  
ஆம்பளையா இல்ல பொம்பளையா....
அப்பன் பேரு.......
ஆத்தா பேரு......
எத்தன குழந்தைக........."
பெரிய லிஸ்ட்-னே....இதுல வேற வேனை .........வெளியே நிறுத்திட்டு போகனுமாமாம்....
.
அப்பப்பா.. ஒருவழியா எழுதிக்கொடுத்துட்டு ,  உள்ள போறோம்......
ஒரு பத்தடி நடந்திருப்பனே.. பின்னாடியே திபு..திபு -னு  ஓடிவராங்க அந்த தடியனுக...

திரும்பிப் பார்த்தா , எமதர்மனுகளே ஓடிவருவது போல இருக்கு...
ஆகா.. உள்ளவிட்டு உருவுவானுகளா.. இல்ல .. குமறுவானுகளா-னு புரியாம  ....நான் கிழக்க ஓட , பக்கிரி மேற்க ஓட....
கடைசியா...............  புடிச்சுட்டாங்கணே....

என்னடானு பார்த்தா................ ஷூ -வ வெளியே கழட்டிவெச்சுட்டு போகனுமாம்..அதுவும் மேலிட உத்தரவாம்..( திருந்தவே மாட்டாங்க போல...)
அதையும் பண்ணித் தொலச்சுட்டு , நாறக்காலோட நடந்தே உள்ளே போனோம்..

உள்ள போனதுமே ஒரே மீன் நாற்றம்..... என்னடானு பார்த்தா,
தங்கபாலு , பல்லுக்குச்சிய வெச்சுகிட்டு.............
குத்திகிட்டு இருக்காருணே..( பல்லை- யில்ல.......  மீனை.....)

மீன் -> சின்னம் -> பாண்டிய நாடு  -> அட....ங்க்... அண்ணன் வந்துட்டு போயிருக்காரு போல..( எப்படியா    பட்டாபட்டி ?)

நம்ம தங்க்ஸ் , குச்சிய வெச்சு, மீன்   முள்ள எண்ணிக்கிட்டு  " உம்.. சொல்லுங்க.. என்னா  ? " -னு    கேக்கறாருங்க..

நான்  "சார்.. சில டவுட்ஸ்......அதை தெளிவுபடுத்திக்கலாம் என்று...."  நான் இழுக்க...

"யோவ்.. கட்சித் தொண்டனா கடமையச் செய்.. மீதிய நான் பார்த்துக்கொள்கிறேன்      "னு தெனாவெட்டா  சொல்றார்...

பக்கிரிக்கு மண்டைக்கு மேல ஏறிடுச்சு..."  யாரப் பார்த்து என்னா கேள்வி கேக்குறே ?.. இவரு யாரு தெரியுமா?...   ப.மு.க தலைவர் + ரிப்போர்டர்.........இவரப் பார்த்து எப்படி சொல்லலாம்   "னு குதிக்கிறான்..
( பக்கிரிக்கு  இந்த வருசம் கண்டிப்பா  சம்பளத்த ஏத்தி கொடுக்கனும் )..
.
.
"தம்பி.. பாரம்பறிய கட்சிக்காரன் நானு.. எனக்கு தெரியாத தகிடுதத்தமா?..
நீ செக்யூரிட்டியிலே பாரம் நிரப்பினாயே.....அது என்னானு தெரியுமா உனக்கு..?

எங்க கட்சி அடிப்படை உறுப்பினர் ஆயிட்டேனு...  நீயே   எங்களுக்கு கொடுத்த......... பட்டா.. அப்பு.. பட்டா.."-னு வீரப்பா மாறி சிரிக்கிறாரு...

அதுகூடப் பரவாயில்ல சார்.. ஆனா சொன்னாரு பாருங்க ஒரு வாக்கியம்..
என்னோட ஈரக் குலை நடுங்கிருச்சு சார்.

"என்னோட சாதனையா.... இந்த 2 Form's -ச  டெல்லிக்கு அனுப்பி , அடுத்த 5 வருசத்துக்கு தலைவராவே ஓட்டிடுவேன்.....  "-னு...
.
.
வந்ததே சார்.. கோபம்...அப்படியே கைய ஓங்கிட்டு ....
.
.
.
திரும்பி வேனைப் பார்த்து ஒரே ஓட்டம்..
நாங்க ஓடிவர ஸ்பீட் பார்த்துட்டு... அந்த ரெண்டு குண்டனுக....
கையில வச்சிருந்த பாரமெல்லாம்( Form's) கீழ போட்டுட்டு ,
என்னோட ஷூ-வையும் , பக்கிரியோட செருப்புக்களையும் அவசரம்மா
எடுத்து ஒளிச்சு வெச்சுடாங்க...( சீப்பை ஒளித்துவைத்தால், கல்யாணம் நின்னுடுமா?- பாருங்க.. இவனுக பண்ணின அலம்பறையில )

செருப்பா  இல்ல வாழ்க்கையா.?????.
.
.
.
"வாழ்க்கை"-தான் முடிவுபண்ணிட்டு , Forms பொறுக்கியெடுத்துட்டு       ஓடி போயி வேன்-ல ஏறி "கிரேட் எஸ்கேப்"....
.
.
அதனாலே , அந்தப் பக்கம் போனா, பார்த்து சூதனமா நடந்துக்குங்க...
.
.

சரிங்க.. உங்களுக்கு  நேரமாச்சுனா , கமெண்ஸ் போட்டுட்டு
போயிட்டேயிருங்க.. நாளைக்குப் பார்க்கலாம்..


மற்றவர்களுக்கு...

.
.
சார்.. அந்தப் பக்கம் போனா , என்னோட ஷூ-வையும்,
பக்கிரியோட செருப்பையும் ,அவங்களுக்கு தெரியாம எடுத்துட்டு வந்திடுங்கண்ணே...
.
.
அடையாளமா?..
.
.
.
என்னோட  இடது கால் ஷு-ல "பட்டா" ,
லது கால் ஷு-ல "பட்டி" -னு போட்டிருக்கும் சார்...
.
.
பக்கிரியோடதா?
சொல்ல மறந்துட்டேங்க...
பக்கிரி காது குத்து , கிடா வெட்டுக்கு போகும்போது
ரெண்டுமே வலதுகால் செருப்பா போட்டுக்குவானுங்க...

அப்புறம்.. இந்த  கருமாதி, ஆஸ்பத்திரி போகும்போது
ரெண்டுமே இடதுகால் செருப்பா போட்டுட்டு போவானுங்க..
.
.
. என்னா பக்கிரி  ?  .. இப்ப தொலைச்சது எந்த ஜோடி செருப்பு?..
.
.
"இடது கால் செருப்பா.....அடப் பார்றா...."
.
.
.




ரெடிமேட் மிக்ஸ் ( 1 )

Official News
------------------------
ஈரோடு நகர் பகுதியில் உள்ள மக்கள் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் இந்த மாதம் முதல் தேதியில் இருந்து ஹெல்மெட் அணிந்து செல்லவேண்டும் என ஈரோடு மாவட்ட காவ‌ல்துறை க‌ண்கா‌ணி‌ப்பாள‌ர் ஜெயசந்திரன் கூறியிருந்தார். அதன்பின் ஆங்காங்கே இருந்த போக்குவரத்து காவல‌ர்க‌ள் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களை எச்சரித்து அனுப்பி வந்தனர்.

இன்று முதல் ஈரோடு மாநகராட்சி பகுதியில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணியவேண்டும். இல்லையென்றால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என ஈரோடு மாவட்ட க‌ண்கா‌ணி‌ப்பாள‌ர் ஜெயசந்திரன் எ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளா‌ர்.



Offline News
-----------------------
இதைபற்றி ஈரோடு இளங்கோவன் அவர்களை கேட்ட போது " அன்னை சோனியாவுக்கு நன்றி " என கண்ணீர் மல்க கூறினார்..

அய்யா.. இது தமிழக அரசுவின் உத்தரவு என நாம் எடுத்துரைக்க , "கலைஞர் மனத்தை மாற்றிய எங்கள் அன்னைக்கு நன்றி " என கண்களை துடைத்துக்கொண்டார்..


-----------------------------------------------------------------------------------------------
Official News
------------------------
சத்தியமங்கலம் அருகே விவசாய தோட்டத்தில் வெளிநாட்டு ஆந்தை பிடிபட்டது. இதை பார்த்த விவசாயி ஈஸ்வரமூர்த்தி,  சத்தியமங்கலம் மாவட்ட வனஅதிகாரி ராமசுப்பிரமணியத்திற்கு தகவல் கொடுத்தார். 

வனத்துறை ரேஞ்சர் மணி தலைமையில் வனக்குழுவினர் ஈஸ்வரமூர்த்தி தோட்டத்திற்கு சென்று புதரில் பாதுகாப்பாக இருந்த வினோத ஆந்தையை பிடித்து வந்தனர். பின்னர் பண்ணாரி வனப்பகுதியில் பறவைகள் அதிகம் வசிக்கும் வடவள்ளி காட்டில் வினோத ஆந்தையை வனத்துறையினர் விட்டனர். 

Offline News
-----------------------

பறவையிட்ட எச்சத்தை துடைத்தபடி வனத்துறையினர் , விவசாயி ஈஸ்வரமூர்த்தியிடம் பயணப்படி கொடுக்கும்படி நச்சரித்தால்,
அவர் தலைமறைவாகிவிட்டார்..
இதைபற்றி ஈரோடு இளங்கோவன் அவர்களை கேட்ட போது " கலைஞர் ஆட்சியில் பறவைகளுக்கு பாதுகாப்பில்லை..இதைபற்றி அன்னை சோனியாவுடன் வரும்மாதம் பேசப்போவதாக  " என கோபமாக  கூறினார்..
---------------------------------------------------------------------------------------------------------




Hot News
------------------


இந்த இரண்டு பேட்டிகளையும்  எடுத்த நிருபர் ,  தற்கொலைக்கு முயற்சி செய்ததால் ,  காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்..
.
.
.

Thursday, January 28, 2010

ஷ்.....ஷ்.... இங்கேயுமா....? - [ பட்டாபட்டி ]


தலைவா..நான் ப.மு.க-வின் அடிமட்ட தொண்டன்..
உங்களுக்காக மயிரென்ன .. உயிரே கொடுப்பவன்..நீங்கள் ஒரு வார ஓய்வுக்காக மலேசியா சென்றுவிட்டதாக "தினக் குசும்பு " மூலமாக அறிந்தேன்..

நான் நேற்று, கட்சி அலுவலகம் வந்திருந்த போது எனக்கு மிகவும்
மோசமான அனுபவம் கிட்டியது..அய்யா.. நீங்கள் வெளுத்ததெல்லாம் பால் என
நினைப்பதுதான் இந்த சம்பவத்துக்கு காரணம் என் நினைக்கிறேன்..
இத்துடன் என் "பேரன் பட்டுகுஞ்சுமணி"-யின் கேமராவில் எடுத்த புகைப்படங்களை அனுப்பியுள்ளேன்..

ஒரு புகைப்படம் ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம் என்பது உலகுக்கே தெரியும்..
ஆகவே , படங்களை பார்த்தவுடன் தகுத்த ஆவனம் செய்வீர்கள் என நம்பி,
இந்தக் கடிதம் அனுப்புகிறேன்...

நன்றி - கொண்டாம்பட்டி சின்னப்பன்.

----------------------------------------------------------------------------------------------------


(   அய்யா.. புரியாதவங்க , முதலிலே இந்த பதிவை
படிச்சுட்டு  வாங்க..அப்பதான் ஏதோ புரியும்...
 
)




அன்புள்ள கொண்டாம்பட்டி சின்னப்பன் அவர்களே.
கடிதம் கண்டேன்.. துக்கம் கொண்டேன்..
கடந்த மூன்று மணித்துளிகளாக நான் உணவருந்தவில்லை..
நெஞ்சு நிறைய துக்கத்தை வைத்துக்கொண்டு எப்படி உணவருந்துவது?

ஆனால் , கடைசியில் கழகக்கண்மணிகளின் ஆவேசம்தான் வென்றது..
அவர்களின் வேண்டுகோளின்படி , எனது உண்ணாவிரதத்தை முடித்துகொண்டு.. இதோ.... உணவருந்த விரைந்து கொண்டிருக்கிறேன்..
( "கோழிக்குழம்பு..... ஆறிவிட்டால் குஞ்சுக்காகாது" என்பது அயல் நாட்டுப்பத்திரிக்கையில் வந்திருந்த செய்தி...  அது என் மனதில் எப்போதும் நிழலாடிக்கொண்டிருக்கிறது )


நான் இல்லாத சமயத்தில பலரும் , அவர்களை தலைவர்களாக நினைத்துக்கொண்டு............ஆடியிருக்கிறார்கள்..
ஆடிக்கொண்டுமிருக்கிறார்கள்...
சரி.. தொண்டனே.. உன் கைதட்டல்........ பஞ்சடைத்த என் காதில் தேன் பாதிதான் விழுகிறது...


அன்றே சொன்னார் அறிஞர் அண்ணா.. "வேலியில் போகும் ஓணானை , வேட்டிக்குள் விடாதே" என்று..    அது வேட்டியைக் கிழித்தபின், பட்டாபட்டியையும் கிழிக்கும் என நான் கனவிலும் நினைக்கவில்லை..

அந்தோ.. பரிதாபம்..எது நடக்ககூடாது என நினைத்தாயோ அது நடந்தேவிட்டது....

கலங்கிடாதே என் கண்மணியே..
காவியக் காவலன் நான் இருக்க ,
காட்டாறு வெள்ளமென நீயிருக்க,
(உன்) நாடாவை அவிழ்க்க நாடு முயன்றால் ,
நாறிடுமே அவர்கள் தேகம்...

நாடி ஜோசியம் நல்லவர்களுக்கே என்றால் ,
கேடி ஜோசியம் கெட்டவர்களுக்கா?...



தொண்டர்களே.. உங்கள் கோரிக்கை உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டு
இன்று முதல் சைக்கிள் ஸ்டேண்ட் பொறுப்பிலிருந்து, "சுற்றுப்புறச்சூழலுக்கு"
உடனடியாக மாற்றப்படுகிறார் நமது சீனா தானா..

அன்புடன் பட்டாபட்டி..


யோவ்.. என்னதான் சொல்ல வர?....

இல்ல சார்.. சைக்கிள் ஸ்டேன்ட்-க்குள்ள யார் நுழைந்தாலும் ,
செருப்பு , ஷு எல்லாம் கழட்டிவிடனுமாம் நம்ம சித்தாவுக்கு...........
நீங்களே பாருங்க சார்... இந்த அ நியாயத்தை........................

இடமில்லாம............ மரத்திலெல்லாம் தொங்கவிட்டிருக்காங்க...



.
.
.


.

.

Wednesday, January 27, 2010

பிரபல டீவி சீரியல் தயாரிப்பாளருடன் ஒரு சந்திப்பு..

பிரபல டீவி சீரியல் தயாரிப்பாளர் சிங்கைமுத்து நமக்கு அளித்த பிரத்தியேகப் பேட்டி..

இவர் கடந்த 10 வருடங்களாக் சின்னத்திரையில் டைரக்டராக பணிபுரிகிறார்...

சார்.. உங்களை பற்றி கொஞ்சம் நேயர்களுக்கு சொல்லமுடியுமா?..
நான் 8-ஆம் வகுப்பை 5 வருடங்களுக்கு மேலாக படித்துகொண்டிருந்தேன்..
அப்போதே நல்ல வாட்ட சாட்டமாக இருப்பேன்.. அந்தப்பள்ளி மிகவும் கண்டிப்பானது..தவறு செய்தால், ஒரு நாள்முழுதும்   பெஞ்ச் மேலே ஏறி நிற்கவேண்டும்..
ஒரு நாள் கணக்கு வாத்தியார் என்னமோ கேட்டார்.. அப்ப நான் முக்கியமான ஒரு பிரச்சனை என்னவாகும் ... என மனதில் அசை போட்டுக்கொண்டிருந்தேன்.. கேட்டது காதில் விழவில்லை..

அப்படி என்ன சார் பிரச்சனை அந்த வயசிலே...?
முன்னாடி ரெண்டு பொம்பளப் புள்ளைக சார்..
நானு அவங்களுக்குத் தெரியாம ,ரெண்டு பேரு ஜடைகளையும் ஒண்ணா பின்னிவிட்டுட்டேன்.. திருப்பிப் பார்த்தா ஜடை இழுக்குமில்லையா..அப்ப அவர்களுடைய முகம் எப்படி மாறும்..
மூஞ்சிய சுழிப்பாங்களா இல்ல.. அழுவாங்களா ? ஒரு பரிசோதனை பண்ணிட்டுயிருந்தேன்

அந்த வயசிலேயே ஆராய்ச்சி பண்ணியிருக்கீங்க?

ஆமா சார். அது புரியாம , கணக்கு வாத்தியார் பிரம்பை எடுத்து அடிக்க வராரு சார்.. எனக்கு கோபம் வந்து மெதுவா ரெண்டு தட்டு தட்டிட்டேன் சார்.
என்னமோ , காச் மூச்சுனு கத்திட்டு பெஞ்ச் மேல ஏறி நிற்கச்சொன்னார்..

அடடே..அப்புறம் ?

நாங்கெல்லாம் கவரிமான் ஜாதி ஆச்சே.. மயிரேனு நினச்சிட்டு பெஞ்ச்மேல ஏறி நின்னுட்டேன்.. வகுப்பில எல்லாரும் சிரிக்கிறாங்க. எப்படியிருக்கும் சார் எனக்கு..

ஆமா சார். சும்மாவா விட்டீங்க ?
அது எப்படி சார் சிரிக்கலாம்.. அதுவும் என்னைப் பார்த்து..
ங்கொய்யா.. சிரிங்கிறீங்களா.....சொல்லிட்டு காலைத் தூக்கி பக்கத்திலேயிருந்த பையன் முதுகுல ஓங்கி ஒரு எத்து சார்..
அப்புறம் வீங்கிருச்சு..

என்ன. .....பையன் முதுகா சார்?..
இல்லைங்க.. என்னோட பேக்க்க்க்க்க்க்க்க் சைடூ....

அப்புறம் ஏன்னாச்சு சார் ?
போங்கடானு ஸ்கூல் விட்டு நின்னுட்டேன்..கொஞ்ச நாளா, ஆடு , மாடு , கோழி
பின்னாடி சுத்திக்கிட்டு இருந்தேன்.. எங்க நைனா பார்த்தாரு.. ஆகா.. இவன்
இப்படியேயிருந்தா , எவனும் பொண்ணு குடுக்கமாட்டாங்களே..
நம்ம பரம்பரை புட்டுகிடுமேனு நினைத்து , எங்கூரு கட்சி செயலாளருகிட்ட
கோத்துவிட்டுட்டாரு..
அவர் வீட்டில தள தளனு.. அப்புறம்  டீவிக்கு வந்துவிட்டேன்..

என்ன சார்..வேட்டைக்காரன் இடைவேளையில, டாக்டர குதிச்சமாறி ஒரே ஜம்ப் பண்ணீட்டிங்க..
பழச உடுங்க சார்..சில சமயம் கடந்து வந்த பாதைய திருப்பிப் பார்க்க கூடாது..

சார். நீங்க இப்படி சொல்வது , எங்கள் ஆவலை கிளப்புகிறது..
பாருங்க.. இப்ப நான் இருப்பது மறுபிறவி...அவ்வளவுதான் சொல்லமுடியும்..

ஓ.கே. சீரியல்.டைரக்டராயிருப்பது கஷ்டமான வேலையா? நீங்க ஒரே நேரத்தில இரண்டு , மூன்று சீரியல் எடுக்கிறீர்களே?
Maybe இப்ப வருகின்ற கத்துகுட்டி டைரக்டர்களுக்கு வேணா கஷ்ட்டமா இருக்கலாம்.. நாங்க எப்படினா........, சாயங்காலம் ஒரு ஏழு எட்டு கேமராவை எடுத்துட்டுப்போயி வீடு , ஆபிஸ் , தெருவோரம் எல்லாம் கட்டிட்டு வந்துவிடுவோம்..

அடுத்த நாள் , ரெக்கார்ட் ஆனதை அப்படியே கொஞ்சம் எடிட் செய்து ஒளிபரப்பிடுவோம்.. சிலசமயம் ரெக்கார்ட் சரியாயில்லைன்னா , வேற டைரக்டர்க்கு போனைப் போட்டு அவர்கள் எடுத்த படத்த சேர்த்துவிடுவோம்..யாருக்கும் தெரியாது...

இப்படிபடம் எடுக்கும்போது நடந்த சுவையான நிகழ்ச்சி ஏதாவது ?
நீங்க சொன்னதும் ஒரு நிகழ்ச்சி எனக்கு நினைவுக்குவருகிறது..ஒரு நாள் ஹோட்டல்ல  என்னுடைய உதவியாளர்..நல்ல பையந்தான்.. என்னைப்போல.. என்ன பண்ணுனான , கை கழுவ பாத்ரூம்க்குள்ள போயிருக்கான்..அப்புறம் மறந்துபோயி கேமராவை அங்க்கேயே வச்சுட்டு வந்துட்டான்..
கேமரா வேற விலை ஜாஸ்தி..
அப்புறம் வேற லேட்டஸ்ட் கேமரா வாங்கிட்டோம்..

பழைய கேமரா கிடைத்தா சார்..மேலும் புது கேமரா விலை அதிகமாகயிருக்குமே ?
பழைய கேமரா கிடைக்காம போயிடுமா சார்..?நாங்க வேலை செய்கின்ற டீவீ பேரச்சொன்னாலே போதுமே..  கேமரா கைக்கே வந்துருச்சு.. அப்புறம் ரெக்கார்ட் ஆனதை வெளியில விற்று, அங்க நிற்குது பாருங்க வெளி நாட்டுக்கார்.. அது..... அப்புறம் புது கேமராவெல்லாம் வாங்கிட்டோம்..

சார்.. நீங்க சொல்வதை பார்த்தா , அந்த நடிகை குளிக்..............................
ஷ்...ஷ்.. வேற ஏதாவது கேள்விகள் இருக்கா?...

ஓ.கே..சார் இப்ப வருகின்ற சீரியல்ல ,
புருஷனுக்குத் தெரியாம பொண்டாட்டி சோரம் போவது..
பொண்டாடிக்கு தெரியாம , புருஷன் சின்னவீடு வைத்துக்கொள்வது...
கொலை , கொள்ளை செய்து மாட்டிக்காம தப்பிப்பது,
மாமியார் கை, கால உடைப்பது,
மருமகளை தீ வைத்து எரிப்பது,
மண்ணாங்கட்டி மாமனார் எப்ப பார்த்தாலும் கை பைய எடுத்துட்டு மார்க்கெட் போவது..
மேலும் கக்கூஸ் போயி, கால் கழுவரவரை கேமராவா  கு#%^$&க்குப் பின்னாடியே தூக்கிட்டு போவது
இதைத்தவிர வேற நல்ல விசயம் எவ்வளவோயிருக்கே..அதையெல்லாம் எடுக்கலாமில்லை..


யோவ்.. ( ஆகா,, மரியாதை சார்.. மரியாதை...)
எனக்கு தெரியாத கதையா.. எங்க என்ன எடுக்கலாமுனு நீயே சொல்லு..

இல்ல சார்..
கம்யூட்டர் கற்போம் வாருங்கள்...
கைம்பெண்களுக்கு கல்வியறிவு,
வீட்டுப்பெண்கள் சொந்த தொழில் செய்வது எப்படி?
லோன் வாங்க வரைமுறைகள்..
நம் கடமைகள் மற்றும் உரிமைகள்..
புதிய மொழியைக் கற்கலாம்..
சுற்றுச்சூழல்....
இதுபோல..இன்னும்...........

யோவ்.நிறுத்து.. நிறுத்து ..ஆமா நீ தமிழ் நாட்லதான் இருக்கையா?.
இது போல எடுத்தா யாரையா பார்ப்பான்..ரேட்டிங்க் சர்-னு கீழே போயிடுச்சுனா..... எவன் பதில் சொல்றது?..

சார்.மக்கள் பார்ப்பாங்களே ஆமா நீங்க யாருக்கு பதில் சொல்லனும்..
எங்க தலமைக்குத்தான்.. ( நாக்கை கடித்துக் கொண்டு.. ).. இல்ல..இல்ல எங்க நிறுவனத்துக்கு..  இது மாறிதான்........ ஒரு பன்னாட தொழிலுக்கு வந்தான்.. ஆறு மாசம்....
இப்ப கையில்லாம் சிவந்துடுச்சு..

ஏன் சார் பாராட்டை வாங்கியா ??
யோவ்.. டீ கிளாஸ் கழுவிய்யா.. டீ கிளாஸ் கழுவி...

சார்.. மக்களுக்கு நல்லது பண்ணத்தானே ப்ரோகிராம் பண்றீங்க.. அப்புறம் என்ன சார்.. ?
80 வருடம் அனுபவமையா எங்க தலைவருக்கு.... அவருக்கு தெரியாதாயா எது நல்லது..எது கெட்டதுனு..  வந்துட்டானுக பேப்பர், பேனாவத் தூக்கிகிட்டு..பன்னாடப் பயலுக...

போ..போ.. போயி வேலைப் பாரு...
.
.
.
.
.

Tuesday, January 26, 2010

சினேகா அரசியலுக்கு வருகிறாரா? Exclusive பேட்டி...

காலை 7 மணி.. இடம் : சென்னை..
வணக்கம்.. நாங்க பட்டாபட்டியிலிருந்து Interview -க்கு வந்துள்ளோம்..

வாங்க.. வாங்க .. உக்காருங்க.. மேடம் மேக்கப் போட்டுட்டு இருக்காங்க.. 10 நிமிடம் வரவேற்பு அறையில உட்காருங்க..

1 மணி நேரங்கழிந்த பின்.. சினேகா ஆஜர்..

வணக்கம்.. நான பட்டாபட்டியிலிருந்து பக்கிரிசாமி. நிருபர்..

வணக்கம்.. சாரிங்க.. கொஞ்சம் லேட்டாயிடுச்சு.. நேற்று ராத்திரி Exam-க்கு Prepare பண்ணீட்டு இருந்ததால் தூங்க நேரமாகிவிட்டது..

ஓகோ.. அப்படியா. என்ன பரீட்சை மேடம்?...

10 ஆம் வகுப்பு தேர்வு எழுதிவருகிறேன்.. கடைசியா இன்னும் ஒரு சப்ஜெட் பாக்கியிருக்கிறது..

என்னங்க.. இப்ப போயி 10 ஆம் வகுப்பு எழுதிகிட்டு...

அவருடைய அம்மா குறுக்கிட்டு... " என்னோட மகளுக்கு இப்போதான் 15 வயசு முடிஞ்சு 16 வயசு தொடங்குது..

அய்யோ.. நான் அதைச்சொல்லலீங்க... தேர்வு எப்போதும் மார்ச் இல்லை ஏப்ரலில் தானே வரும்..

எம்மக 10ஆம் வகுப்பு தேர்வை ஷார்ஜாவில எழுதுறா.. அங்கெல்லாம் ஜனவரியிலே தேர்வு வந்துவிடும்..

அப்படினா சரிங்க மேடம்.. நான் நோட் பண்ணிக்கிறேன்..
மேடம்.. முக்கியமான கேள்வி.. நீங்க "பவானி" என்ற படத்திலே நடிக்கப்போறதா நியூஸ் வந்துச்சே..அதைப்பற்றி நம்ம வாசகர்களுக்கு
ஏதாவது சொல்ல விரும்பிகிறீர்களா?..


ஆமாங்க.. அது ஒரு சூப்பர் படம்.. நம்ம விஜயசாந்தி கூட ஒருகாலத்திலே குதித்து குதித்து அடிப்பாங்களே.. அதே மாதிரி கேரக்டரை இந்தப் படத்திலே நான் பண்ணுகிறேன்..இந்தப் படத்திலே துப்பாக்கி வச்சு சுடுரமாறி சீன் எல்லாம் வருது.. அம்மா.. அந்த துப்பாக்கிய எடுத்துட்டு வாங்க.. அவ்ருக்கு சுட்டுக்காட்டலாம்..



சினேகா சொல்லிமுடித்தவுடன் பக்கத்து அறையிலிருந்து அவரது அக்கா, ஒரு துப்பாக்கிய உயர்த்திப் பிடித்துக்கொண்டு வருகிறார்.. நமக்கோ அடிவயிரு கலங்குது..  துப்பாக்கிய வாங்கிய மேடம் நம்மை குறி பார்த்தவாரு போஸ் கொடுக்கிறார்..
 
அய்யோ.. மேடம் .. துப்பாக்கிய அந்தப் பக்கம் திருப்புங்க..
குண்டு.. குண்டுல படப்போகுது
. என நான் பதற, மேடம் சிரித்தவாரு துப்பாக்கியை அக்காவிடம் திருப்பிக்கொடுக்கிறார்..
( என்னடா குண்டு, குண்டுனு ரெண்டு தடவை சொல்றேனு
நினக்கிறவங்க அப்படிக்கா " Alt+Ctr+Del " அமுத்திட்டு போயிட்டேயிருங்க..
.
ஏன்ன்ன்ன்ன்னா?..
.
.
.
போங்க சார்.. இதையெல்லாம் விளக்கமா சொல்லிக்கிட்டு ..
)





என்னோட நடுக்கத்தை வெளிகாட்டாமல் அடுத்த கேள்வியை வீசுகிறோம்..  சரிங்க.. கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு மலேசிய பையனை ஏதோ கல்யாணம். கில்யாணமுனு பேட்டி கொடுத்த ஞாபகம்.
அதைப்பற்றி கொஞ்சம் விளக்கமாக சொல்ல முடியுமா?


சார்..அதை பற்றி முன்னாலேயே சொல்லிட்டேன்..நான் மலேசியா போயிருந்தபோது அந்த பையன் என்னைபார்த்து வணக்கம் சொன்னான். நானும் பதிலுக்கு வணக்கம் சொன்னேன்.அதைப் படம் எடுத்து பிரச்சனை ஆக்கிவிட்டனர்.. . வணக்கம் சொன்னது தப்பா சார்.. இதைப் போயி............


எனன மேடம்?.. இத சாதாரணமா சொல்கிறீர்கள்.. வணக்கம் சொன்னதற்கு பதில் வணக்கம் சொல்லவில்லையென்று, பிரச்சனை வெட்டு, குத்து லெவலில் ஓடிட்டுயிருக்கு.. நாங்க ஈழப் பிரச்சனையயே மறந்துவிட்டு , இந்தப் பிரச்சனை என்னவாகுமொயென்று,  டெய்லி டாஸ்மார்க் முன்னாடி கூடிப் பேசிக்கொண்டுள்ளோம் .

சார்.. விடுங்க.. அதை நான் மறக்க முயற்சிக்கிறேன்
அடுத்த கேள்விக்குப் போங்க சார்..

ஓ.கே.. உங்க அரசியல் பிரவேசம் பற்றி...

அம்மா மற்றும் மகள் முகங்கள் பிரகாசமாகிறது..

"சென்னையில் இருந்து கூப்பிடராங்க..
டெல்லியிலேயிருந்து கூப்பிடராக..
அமெரிக்காவுல பில் கிளின்டன் கூப்பிடராக..
ஆனா, இப்போதைக்கு வேண்டாமுனு முடிவு பண்ணியிருக்கோம்.
."

எனக்கு புரியாமல் " எதுக்கு மேடம் .. உங்களை கூப்பிடராங்க?" சொல்லீட்டு திருப்பிப் பார்த்தா  அக்கா கையில துப்பாக்கி..எனக்கோ வாயிலிருந்து வார்த்தை வெளிவரவில்லை...

நல்லவேளை.. அவங்க அக்காவே "அரசியலுக்குத்தான் " எனக் கூறி வயிற்றில் பால் வார்த்தார்கள்..(அக்கா.. நல்லாயிருங்கக்கா...)

அடுத்து அம்மா "எங்களுக்கு சினிமாதான் மூச்சு.. அடுத்த 10 வருசத்துக்கு சினிமாவுல சாதிச்சுட்டு அப்புறமா அரசியலப் பற்றி சிந்திக்கலாம்.."
(தப்பிச்சமடா சாமி.. இன்னக்கு நைட்டு "குலதெய்வத்துக்கு 100 தேங்காய்" உடச்சிடனுமுனு நினைத்துக்கொண்டேன்..)

அதுக்குள்ளே , சுடசுட டீ வந்தது.. அதைக் குடித்துக்கொண்டிருக்கும் போது,

"யாராவது ஆர்ட் டைரக்டர் புதுசா படமெடுக்கற ப்ளான் வைத்திருந்தால், எங்களுக்கு சொல்லுங்க நிருபர் சார்.. பாப்பா அரசியலுக்கு வரும்முன் நல்ல படங்களில் நடித்து பேர் வாங்க வேண்டும்..."

"அரசியல் ஒரு சாக்கடை மேடம்............. அதுல எங்க தல கால் வெச்சுட்டு படாதபாடு  படாதபாடுபட்டுட்டிருக்கார்.. நீங்க போயி அதிலே..............."

"ஹல்லோ.. பாப்பா பத்தி இன்னும் உங்களுக்கு தெரியாது..மேடம் வந்தா மற்றவர்கலெல்லாம் அரசியலவிட்டே ஓடிவிடுவார்கள்..."
ஓஹோ.. அப்படினா சரிதான் மேடம்.. (விதி விட்ட வழி.. ஹும்...)


நம்ம பய ஒருத்தன் ஆர்ட் படமெடுப்பதில் வல்லவர்..அவரு ஒரு நல்ல படம்
எடுக்கனுமுனு சொல்லிட்டு இருக்கார்..

அட... அப்படியா... பாத்தீங்கல்ல எங்க பாப்பா ராசிய...சரி..ஆளு எப்படி?..நல்ல பேமஸ் டைரக்டரா?.. அவரு எடுக்கற படமெல்லாம் எப்படி ஓடுது?..

அய்யோ.. அதை ஏன் கேக்கிறீங்க.. நெட்-ல அவரு எடுத்த படம் பார்த்தவங்க மட்டும்....... கோடிக்கணக்கில இருக்கும்..  படத்த இன்னும் பாக்கறாங்கனா, பார்த்துக்கோங்களேன்..   படம் 100 நாளைத் தாண்டி ஓடிட்டேயிருக்கு...

"ஓஹொ..அப்படியா.. நாங்க கேள்விப்பட்டதேயில்லையே.".

"போங்கம்மா.. டமாசு பண்ணிகிட்டு..நீங்க பாப்பா Exam-க்கு ஷார்ஜாவில பிஸியாயிருந்த நேரத்தில  அவரு இங்க பிரபலமாயிட்டாரு.."

அட.. பாத்தீங்களா.. கொஞ்ச நாளு வெளி நாடு போயிட்டு வந்தா , இங்க என்னென்னமோ நடந்திருச்சு..  சரிங்க.. அவரு யாரு..?

அம்மா.. அவர ரோட்ல பார்த்தா கால்ல யாரும் செருப்ப போட மாட்டாங்க..

ஏன் அவ்வளவு மரியாதையா?..

ஆமாம்மா..அவரு சுத்தி நின்னுகிட்டு , கன்னத்தில , உடம்புல.. எல்லாயிடத்திலும் தட்..தட்-னு.........  போங்கம்மா.. எனக்கே வெக்கமாயிருக்கு...

சரிப்பா..அவரு அமெரிக்கா லெவல்-க்கு படம் எடுப்பாரா?..

அய்யோ மேடம். என்ன இப்படி சொல்லீட்டிங்க..  பில் கிளின்டன் "ஆபிஸ் ரூம்"-ல பண்ணுனதை இவரு "ஆண்டவர் ரூம்"-லேயே பண்ணீட்டார்..
படத்த பார்த்த கிளின்டனே , பயலைப் பாராட்ட நினைத்து,
அமெரிக்காவில உள்ள இந்திய தூதரகத்தில் விசா-க்கு க்யூல நிக்கிறாரு....


சரிப்பா.. நீ உடனே அந்த டைரக்டரை வரச் சொல்லு.. புதுப்படத்த பற்றி பேசலாம்..

மேடம்.. நீங்க நினைக்கின்ற மாறி அவரு என்ன கத்துகுட்டி டைரக்டரா?.. சொன்னதும் வருவதற்க்கு... அவரு ஒரு க்ரைம் பட டிஸ்கசனுக்கா , லொகேசன் பார்த்து கதை எழுத ஜெயிலுக்குள்ள போயிருக்கார்..
எப்ப வருவாருனு அவருக்கே தெரியாது.. ஆங்
..
அவரு வெளிய வந்ததும் உங்களுக்கு இன்பர்மேஷன் கொடுக்கிறேன்..

சரிங்க மேடம்..நான் வரட்டுங்களா.. தலைக்கு மேல வேலையிருக்கு..
வேலை முடிக்காட்டி பட்டாபட்டியார் வந்து சாமியாடிடுவார்..

என்ன பக்கிரி அண்ணே. கொஞ்சம் நில்லுங்க.. அவரு பேரு + போன் நம்பரையாவது சொல்லிட்டுப்போங்க..இல்லாட்டி எங்களுக்கு தலையே வெடிச்சுடும்..

அவரப் பத்தி ஒரு பதிவையே போட்டிருக்கோம்.. படிச்சுக்குங்க..
வரட்டுங்களா..


மக்கா.. நம்ம பேட்டி நல்லாயிருந்தா , கமெண்ஸா துப்புங்க.. உங்க புண்ணியத்தில பட்டாபட்டியார் கிட்ட  புரமோஷன் வாங்கிடுவேன்.. இல்லாட்டி பழையபடி சைக்கிள் ஸ்டேன்ட் தான்..( செட்டியாரு வேற அங்க குத்தவெச்சி உக்காந்துட்டு இருக்காரு...)
.
.
.

தேவ நாதாரி ( Exclusive Interview )

வணக்கம்.. நான் தான் பக்கிரி சாமி.. பட்டாபட்டியின் (முக்குன) நிருபர்..
தலைவர் எனக்கு சில பொறுப்புகளை அளித்துவிட்டு ஓய்வுக்காக (
???) வெளி நாடு சென்றுவிட்டார்..
இது என்னுடைய கன்னிப் பேட்டி.. ஏதாவது தவறுகள் இருந்தால், தயவு செய்து,  தலைவர் பட்டாபட்டியை கிழியுங்கள்..


ஓ.கே.. நமது பேட்டியை தொடங்கலாம்..




 
வணக்கம்.. தேவ நாதன் இவர்களே...நான் பட்டாபட்டியின் பிரதம நிருபர் பக்ஸ். ( சும்மா.. உல்லூலுக்கு.. தலைவர் வேற ஊரில இல்லை)

வணக்கம் நிருபர் அவர்களே..நீங்கள் நடு நிலையான பத்திரிக்கை நிருபர் என எனக்குத் தெரியும்    ( இது நம்ம கைவரிசை.)
அதற்குத்தான் உங்களுக்கு பேட்டி கொடுக்க சம்மதித்தேன்..

உங்களுக்கு இப்படிபட்ட நிலை வரக் காரணமென்ன?.
இதுக்கு தலைவர் தான் காரணம்..

ஆஹா.. எப்படிச் சொல்கிறீர்கள்?
எங்கள் கோயிலிலே சரியான வேலை நேரம் என்ன என்பதை தெரியப்படுத்தாமல்,  பக்தர்கள் வரும்போது எல்லாம் அர்ச்சனை செய்யச் சொல்கிறார்கள்.. குடும்பத்துக்கு தேவையான மளிகை சாமான் வாங்ககூட நேரமில்லாமல்  உழைக்கிறோம்..அர்ச்சனை செய்பவர்கள்கூட கடன் சொல்ல ஆரம்பித்துவிட்டனர்..

சரிங்க.. அதுக்காக , தெய்வ வழிபாடு நடத்துமிடத்தில் இப்படியெல்லாம் பண்ணலாமா?
நாங்க என்ன பண்றது?..  வருபவர்கலெல்லாம் கடன் சொன்னால் , எங்கள் வீட்டில் அடுப்பெரிய வேண்டாமா?

யோவ்.. நான் என்ன கேக்கிறேன்,, நீ என்ன சொல்லிட்டு இருக்கே?..
நீங்கள் தொழிழுக்குப் புதுசா?  ( அட.. எப்படியா கண்டுபிடிச்சான் ?)
இதே.. உங்க தலைவராயிருந்தா , டாண் புரிஞ்சுட்டிருப்பார்..

( ஆஹா.. தலை..)  சரிப்பா.. நான் எதுவுமே பேசல.. நீயா சொல்லு.. நான் அப்படியே  குறிப்பெடுத்து தலைமைக்கு அனுப்பிடரேன்.. சரியா...

சார்.. வேண்டுதலுனு சொல்லி  காது குத்தறது , மொட்டை போடுவது,
அலகு குத்துவது , பொங்கல் வைப்பது , அதுமாதிரி ,   இதுவும் ஒரு வேண்டுதலே..

இந்த நாடு முன்னேற வேண்டும் என்பது எனது 10 வருட கனவு..
அதுக்கு என்ன பண்ணனுமுனு நாளும் தெரிஞ்ச நல்ல மனிதர்களைக் கேட்டேன்..  அவர்கள் தான்,  கடவுளுக்குக்காக ஒரு பிள்ளையை பெற்றெடு..அந்த குழந்தை இந்த நாட்டை ஆண்டு
நல்வழிப் படுத்துவான்  .எனக் கூறினார்கள் அதனால் தான் இப்படி செய்தேன்..

சரிங்க.. உங்க ஆசையெல்லாம் நல்லாத்தான் இருக்கு.. அதுக்கு வீட்டிலேயே ஏதாவது பண்ணியிருக்கலாமில்லையா?
நீங்க கத்துக்குட்டி நிருபர் என்பதை அடிக்கடி காண்பிக்கிறீர்கள்..
( ங்கொய்யாலெ..இருடி.. இரு..)
நான் பேட்டியின் தொடக்கத்திலேயே சொன்னேன்.. வேலை நேரம் என்னை வேலை செய்யவிடவில்லையென்று...

(ஆஹா.. இப்படியும் பேசிட்டு திரியுறாங்களா இந்த நாதாரிக...)
சரிங்க.. ஆனா வேலை நேரத்திலே யாராவது பக்தர்கள் வந்துதிருந்தால் ?
சார்.. இப்படியெல்லாம் ஏடாகூடமா பேசுவீர்கள் என்றுதான் அதை வீடியோ எடுத்துவைத்துள்ளேன்..  அதை உன்னிப்பாக பார்த்தால்  நான் எவ்வளவு தொழில் பக்தியுள்ளவன் என்பது புரியும்..   "வேலை நேரத்தில் " யாராவது வருகிறார்களா என்பதை அடிக்கடி வாயிலை நோக்கி திரும்பி உறுதி செய்துகொள்வேன்..
அதற்கு வீடியோ தான் ஆதாரம்..வேண்டுமென்றால்  நன்றாக மீண்டும் ஒரு முறை பாருங்கள்..

சரிங்க சார்.. நான் கிளம்புகிறேன்..ஆட்டோ வேற வெய்டிங்க..நீங்க சொன்னத அப்படியே ப்ளாக்ல  போட்டுவிடுகிறோம்..அப்புறம்.. கடைசியா ஏதாவது சொல்ல வேண்டுமா?..

ஆமா சார்.. வெளிய மார்க்கெட்ல ஏதாவது புது செல் போன் வந்திருக்கிறதா?.. இந்த போலீஸ்காரங்க பேப்பரையே  கண்ணில  காட்ட மாட்டுகிறார்கள்..
மேலும் அடுத்த தடவை பேட்டிக்கு வந்தா , வெறும் கையோட வராம...........
"பிஸ்தா, பாதம் பருப்பு" இதெல்லாம் வாங்கிட்டு வாங்க சார்..

.
.
.

Monday, January 25, 2010

பட்டாபட்டி - முக்கிய அறிவிப்பு..

 நோட்டிஸ் போர்ட்..
மகளிர் அணி தலைமைக்கு , வந்த பாரங்களை பார்த்து அதிர்ச்சியான "அய்யா பட்டாபட்டி " அவர்கள்,  கீழ்கண்ட முடிவுகளை உடனடியாக
அமுல்படுத்தியுள்ளார்

  • மகளிர் அணிக்கு , பட்டாபட்டியார் உடனடியாக  தலைமையேற்கிறார்.

  • சிதம்பரம் ,டெல்லியில் உள்ள பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு , பட்டாபட்டி  சைக்கிள் ஸ்டேண்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

  • கடந்த 5 வருடங்களாக குப்பை கொட்டிக்கொண்டிருந்த சைக்கிள் ஸ்டேண்ட் பக்கிரிசாமி , நிருபர் அணிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

ஆகவே உங்கள் பொன்னான ஆதரவை பக்கிரிசாமிக்கு தர வேண்டுகிறோம்..

-நன்றி பட்டாபட்டி...


P.S

பக்கிரிசாமி, வல்லவர் , நல்லவர் என உலகம் அறிந்ததே..பொறுப்பேற்றவுடன் அண்ணன் பக்கிரிசாமி,  டீ.வி - க்கு அளித்த பீபேட்டியில்  ..........

" சிதம்பரம் நல்ல அனுபவம் உள்ளவர்..நாட்டை அவர் கண்களை போல பேணிக்காற்பவர்..புதிய பொறுப்பை (சைக்கிள் ஸ்டேண்ட்)  ஏற்று நன்றாக வழி நடத்துவார் என் நினைக்கிறேன்.."  எனக் கூறினார்...

மேலும் , "சினேகா மற்றும் தேவ நாதாரி" போன்ற முக்கிய பிரமுகர்களை ,  முதலில் பேட்டியெடுக்க முடிவு செய்துள்ளாதாகவும் அறிவித்துள்ளார். ..






இந்த கால கட்டத்திலே , அண்ணன் பட்டாபட்டி ,
ஒருவார கால ஓய்வுக்காக மலேசியா செல்ல முடிவெடுத்துள்ளார் என்பது கூடுதல் செய்தி...
.
.
.

Saturday, January 23, 2010

பட்டாபட்டி அலுவலகத்தில் ஒட்டுக் கேட்டது...

செய்தி : புதுடில்லி - வறுமைக் கோட் டுக்குக் கீழ் உள்ள ஏழை மக்களின் எண்ணிக்கை பற்றி,  முரண்பாடான தகவல்கள் கிடைத்திருப்பதால் குழம்பிப்போயிருக்கிறது மத்திய அரசு. தெண்டுல்கர் கமிட்டி, வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள வருமானம் மிகக் குறைந்தவர்கள் பற்றிய விவரங்களைத் திரட்டியது.  அதன்படி, மொத்தம் 37.2 சதவீதம் பேர் ஏழைகளாக இருக் கின்றனர். ஆனால், மாநில அரசுகள் தந்துள்ள விவரங்களின் படி மொத்தம் 27 சதவீதம் பேர் தான் ஏழைகளாக இருக்கின்றனர். இந்த முரண்பட்ட தகவல்களால் மத்திய அரசு குழம்பிப் போயிருக்கிறது. இதனால், ஏழைகள் எவ்வளவு பேர் என்ற சரியான எண்ணிக்கையைக் கணக்கிட, ஒரு புதிய திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறது.
---------------------------------------------------------------------------------------------------------------
இடம்   :   பட்டாபட்டி கழக அலுவலகத்தில் ஒட்டுக் கேட்டது...

ஏம்பா.. செக்யூரிட்டி ஆபிஸர்.... .கார்த்திக் சிதம்பரமும் , கனியக்காவும் , பிஸியா இருப்பதால் தானே , நம்ம சிதம்பரத்தை டெல்லிக்கு அனுப்பினோம்..
இங்க பாரு மத்திய அரசுவுடைய அறிக்கையை...
யாரு  வேலை செய்யறதில்லைனு எனக்கு ஒரு மணி நேரத்திலே அறிக்கை வரனும்...
.

.
.
.
சே.......... கட்சித் தலைவனா இருப்பது எவ்வளவு கஷ்டமாயிருக்கு....
.
.
.
ஒண்ணு பண்ணுங்க   செக்யூரிட்டி ஆபிஸர்......
இந்த சிதம்பரத்த திருப்பி வரச்சொல்லு...வந்ததும் நம்ம கழக சைக்கிள் ஸ்டேண்டுல கொஞ்ச நாளைக்கு  டெம்ரவரியா  வேலை செய்யச்சொல்லு...முக்கியமா HR -க்கு போனைப் போட்டுஅந்தாளுக்கு சம்பளத்தில  20% கட் பண்ணச்சொல்லு... 




அப்புறம் அந்த புது செக்ரட்டரி... அட நம்ம அசினோட கஸின்.. அதுகிட்ட சொல்லி டெல்லிக்கு ஒரு தந்தி அனுப்பச்சொல்லு...
.
.
.
என்னான .?
.
.
.
.
எல்லா நானே சொல்ல வேண்டியிருக்கு...? கஸ்டமடா சாமி....
.
.


 இந்தியாவுல எவனெவன்  கட்சி உறுப்பினர் அட்டை வெச்சிருக்கானோ...., அவனெல்லாம் பணக்காரனுக..
மீதி,  " இந்த ஆபிஸ் ,சொந்த பிஸ்னஸ்,   வெளி நாட்ல வேலை செய்யற பயபுள்ளைக"..... எல்லோரும் ஏழைக...

இதுக்கெல்லாம் போயி ஆலோசன பண்ணிகிட்டு ,நேரத்த வேஸ்ட் பண்ணிட்டு    இருக்கானுக பன்னாட பயலுக...

ஒட்டுக்கேட்டவர் : டாஸ்மார்க் காரன்..
.
.
.
.
.
.

.
.

( எது கேட்டாலும் வாயில கை வச்சுக்கோங்கலே...)





.
.
.

அட.. நாதாரிப் பயபுள்ளைகளா !!!!....


அண்ணா  .. வணக்கம்...
நான் கடந்த 5 வருடங்களாக சிங்கையிலே பணிபுரிகிறேன்..
எனது வீட்டிலிருந்து ,  வேலை இடத்துக்கும், தினமும்  M.R.T-யில் ( Mass Rapid Train ) செல்ல வேண்டியுள்ளது.. உங்களுக்கே தெரியும் , அது முழுக்க மூடிய குளிர் சாதனப்  பெட்டியென்று.. மேலும்   காலை வேளை , எங்கும் நகரமுடியாத அளவு கூட்ட நெரிசல் வேறு..

பிரச்சனை என்னவென்றால் , கூட்ட நெரிசலில் யாராவது "Gas Chamber" -ய் திறந்துவிட்டால்,  ( தமிழில் சரியான சொல் தெரியவில்லை.. மன்னிக்கவும் ) கூடியுள்ள சீன/மலாய்  குடிமகன்கள் , ஒரு கையால் அவர்களுடைய மூக்கை மூடிக்கொண்டு அருகில் உள்ள எங்களை  கேவலமாகப் பார்க்கின்றனர்..

ஏன் ?... அவர்களிடமிருந்து கேஸ் ரிலீஸ் ஆகாதா? ..
ஏமாளி இந்தியன் என்பதால் , அவர்கள் விட்ட பாவத்திற்க்கு நாங்கள் பொறுப்பேற்க வேண்டுமா?

உடனடியாக இந்தப் பிரச்சனைக்கு  உங்கள் ஆலோசனை  வேண்டியுள்ளது.  தவறாக நினைத்துக்கொள்ளாதீர்கள்..
 

- சிங்கை வாழ் தமிழர்கள்..( சிங்கை )


பதில்   : 

ஆகா.. அண்ணாயென்று சொல்லி என் நெஞ்சைத் தொட்டுவிட்டீர்கள்..



 உங்கள் கேள்வியை தவறாக நினைத்துக்கொள்ள  நான் என்ன தாத்தாவா ?...


உள்ளூர் பிரச்சனைகளுக்கு ஆலோசனை கூறிவந்த
என்னை வெளி நாட்டுப் பிரச்சனைக்காக அழைத்ததிற்க்கு நன்றி...

தமிழ் மொழியில் எப்படி குறிப்பிடுவதென தெரியவில்லை எனக் கூறியுள்ளீர்..இந்த ப்ளாக்கை ஆண்/பெண்   இருபாலரும் படிப்பதால்,  நேரடியாக அந்த சொல்லைக் குறிப்பிடமுடியாது..
ஆனால் உங்களுக்காக..... நாசுக்கா கூறுகிறேன்... புரிந்துகொள்ளுங்கள்..


அது இரண்டெழுத்து வார்த்தை...அந்த  சொல்லின் முதல் எழுத்து "கு"  -வில்  தொடங்கி ,  கடைசியில்    "சு" -ல் முடியும்..


ஓ.கே.... உங்கள் பிரச்சனைக்கு வருவோம்...அங்கு நம்மூர் ரயில்போல  , "Open Window System "  கொண்டுவரமுடியாது.. அதனாலே ,  இதை வேறவிதமாகத்தான் அணுகவேண்டும்.. பண்ணாத பாவத்திற்க்கு  பொறுப்பேற்று,   நடைபிணமாக அலைகின்றீர்கள்...பாவம்தான் நீங்கள்....


அப்பூ...  பணத்தை ,   காரமடையில தொலைத்துவிட்டு,   காந்திபுரத்திலே தேடுவீங்களா? .. முடியாதுதானே...
அதுபோல  " முள்ளை முள்ளால் தான் எடுக்கமுடியும் "..
" பிரச்சனைக்கு , பிரச்சனைதான் தீர்வு  "....புரியவில்லையா?

சரி..நாளையிலிருந்து இரண்டு அல்லது மூன்று நாளைக்கு ஒருமுறை காலை கடனைக் கழிக்கவும்..  (1 வாரமென்றால் கூடுதல் பலன்.... முதலில் கொஞ்சம் கஷ்டமாயிருக்கும்.. பின்னால் பழகிவிடும் )
முடிந்தால் நம்ம பயபுள்ளைகளை ஒரே பெட்டியில் ஏறச்சொல்லி , குறிப்பிட்ட நேரத்தில்  அனைவரும்
ன்றாக ரிலீஸ் செய்யவும்..

 
ங்கொய்யாலே.. எல்லாப் பயலுகளும் , மூக்கப் பொத்திட்டு சாகட்டும்..

 
இந்தப் ப்ளான் மட்டும் சக்ஸஸ் ஆயிடுச்சுனா ,
1. உங்களை எந்த நாயும் கேவலமா பார்க்கமாட்டார்கள்  ( பயப்படுவானுக அப்பு..)
2. கூட்ட நெரிசல் இருக்கவே இருக்காது..சத்தியம்..( ப்ரீ- யா Travel பண்ணலாங்க.. )

..
இந்த உதவி பண்ணின எனக்கு ஏதாவது பண்ணனுமுனு உங்க மனசு துடிப்பது எனக்கு புரிகிறது..
சரி..சரி..பாசக்கார பயபுள்ளைகளா....
நம்ம ப்ளாக்குக்கு வர சில பயபுள்ளைக , படிச்சுட்டு பின்னூட்டம் போடாம போயிருராங்க..    சனி , ஞாயிறு லீவு நாள்ல  ,உங்க படையக் கூட்டிட்டு போயி  ,அவிங்களுக்கு புகையடிச்சுட்டு  போயிடுங்க..



- அன்புடன் பட்டாபட்டி
.
.
.

Friday, January 22, 2010

மேடம் ஜெயலலிதா .. போர் பிரகடனம்...



செல்வி: ஜெ.ஜெயலிலதா  வெளியிட்டுள்ள அறிக்கையில்.....
நான் வணக்கம் தெரிவித்தால், கருணாநிதிக்கு அஞ்சி பதில் வணக்கம் தெரிவிக்கக்கூட பேரவைத் தலைவர் மறுக்கிறார் என்று 13.1.2010 அன்று ஓர் அறிக்கை வெளியிட்டு இருந்தேன். எனது அறிக்கைக்கு பதில் அளிக்கும் வகையில்,  கருணாநிதி ஒரு வண்ணப் புகைப்படத்தை வெளியிட வைத்துள்ளார்.

வண்ண புகைப்படத்தில் நான் அணிந்திருக்கும் புடவையின் நிறம் கருஞ் சிவப்பு.   ஆனால், 11.1.2010 அன்று நான் சட்டமன்றப் பேரவையில் விவாதத்தில் கலந்து கொள்ளும் போது கருநீல நிறம் கொண்ட புடவை அணிந்திருந்தேன்.  இதிலிருந்து கருணாநிதியின் மிகப் பெரிய மோசடி வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது.

இது போன்ற மலிவான மோசடிக்கு கருணாநிதி வெட்கித் தலைகுனிய வேண்டும்.  இது போன்ற அற்ப விஷயங்களில் கூட மோசடி செய்து பொய் சொல்லும் முதலமைச்சர் நமக்கு  வாய்த்திருக்கிறாரே என்று நினைத்து தமிழக மக்கள் வெட்கப்படுகிறார்கள்....

 .
 .
 .


மேடம்.. நேற்று பத்திரிக்கையில் உங்க மேட்டரப் பாத்ததுமே  என் உச்சி மண்டையிலே சுர்ன்னுச்சு..

அது எப்படிங்க..  நீங்க வணக்கம் சொல்லியும் , சலாம் போடாம இருந்த
சபாநாயகரை  சும்மா விடலாம்...இதுல சால்சாப்பு வேற.....
"வெந்த புண்ணுல வேலப் பாய்ச்சுற மாறி............... படத்தவேற போடராங்கோ..."

தாத்தாவ விட உங்களுக்கு வயசு கம்மியாச்சே..........ஆனா அவரு  "கன்" -னு மாறி இன்னும்  வேலை செய்யறாரு.. நீங்கமட்டும்  அடிக்கடி ஓய்வெடுக்கப் போயிடரறீங்களே..என்ன விசயம்?-னு  இந்த மரமண்டைக்கு புரியாம இருந்துச்சு...

அப்புறம் உக்காந்து யோசிச்சுப் பார்த்தா.......  நல்லாப்புரிஞ்சிடுச்சுங்கோ...

 தாத்தாவுக்கு  கதை எழுதி , கதை எழுதி  கை மட்டும் தான் வலிக்கும்..கை அமுக்க துணை(கள்)யிருக்கு..  பாவம் ... உங்களுக்கு யார் இருக்கா...  

ஆனா , அதுக்கெல்லாம் அசராம   திருப்பு உட்டீங்க பாருங்க பாயிண்டை.........
அதுலயே  தாத்தா ஆடியிருப்பாருங்க...( ஏன் நாங்களும் தான் )

  • நான் அன்னைக்கு கட்டிட்டு இருந்தது கருநீல நிறம் ..
  • போட்டோவில இருப்பது  கருஞ் சிவப்பு. 
  • கருநீல நிறம் கட்டுன தேதி  இது இது..
  • கருஞ் சிவப்பு கட்டுனது  தேதி  அது..அது...
  • இந்த பத்திரிக்கையில என்னோட போட்டோ வந்த தேதி இது..
  • அந்த பத்திரிக்கையில என்னோட போட்டோ வந்த தேதி அது..

இந்தமாறி  புள்ளிவிபரம் கொடுக்க.......... ங்கொய்யாலே... உலகத்திலேயே எனக்கு தெரிஞ்சு இரண்டே பேருதான்  இருக்கீங்க..

ஒண்ணு  - " நீங்க.."
இரண்டாவது  " கேப்டனு.  ". ( யாருன்னு .. தெரியாதா?......   அதுதாங்க நம்ம சதீஸ் -ங்க மாமன் )

ஏம்மா தாயே.. இவ்வளவு புள்ளிவிவரங்களை வைத்திருக்கனுமுனா..? எவ்வளவு வேலை செய்யனும்..  அது புரியாம , என்னமோ நீங்க சசி அக்காகூட அடிக்கடி கொட நாடு போயிடிறீங்கன்னு   நக்கலா பேசராங்க....

அப்பப்ப்ப்ப்ப்ப்பா....தலைவியா இருக்குறது எவ்வளவு கஷ்டம்- னு  இப்ப புரிஞ்சுபோச்சு...

O.K -ங்க.. எங்க  மரமண்டைக்கு தோணின விசயத்தை உங்களுக்கு சொல்லலாமுனு வந்தா..  எதை எதையோ பேசிட்டு இருக்கேன்...

அன்னைக்கு துரைமுருகன் உங்க சேலையை உருவ வந்தபோது,
" நீங்க மட்டும் பதிலுக்கு ,  அவரு வேட்டிய உருவியிருந்தா.................... , "
 .... ங்கொய்யாலே..   வணக்கத்துக்கு ,  பதில்  வணக்கம் போடாம ருப்பாங்களா?

( முதல்ல இந்தப் முக்கிய பிரச்சனைய,  எல்லோரும் சேர்ந்து முடிங்க.. எங்க பிரச்சனைய மெதுவா பார்க்கலாம்...

அதுவரைக்கும்
நீங்க குடுத்த  இலவச வேட்டியக் கட்டிகிட்டு , 
வாழும் வள்ளுவர் குடுத்த , ஒரு ரூபா அரிசியில சமையல பண்ணிட்டு ,
டாஸ்மார்க் சரக்கப் போட்டுட்டு ,
இனப்பெருக்கம் பண்ணிட்டு இருக்கோம்...)


நன்றி மேடம்............
 
இப்படிக்கு
இரத்ததின் ரத்தம்..
.
.
.

என்னாது...கலைஞர் வேலை செய்யறாரா?..


சாமி.. வணக்கம்...
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாவனும் ... மொத கேள்வி ........அரசாங்க உழியர் , வேறு தொழிலோ , வேறு வேலையோ , பாக்க கூடாது ........நம்ம முதல்வரும் அரசாங்க உழியர்தானே ? அவரு எப்படி பாட்டு எழுதுறாரு ,கத எழுதுறாரு , அதுக்கு லட்ச கணுக்குல சம்பளம் வாங்கறாரு ........

-அப்பாவி  ( தமிழ் நாடு )



பதில்   : 

நல்ல கேள்வி..உங்களுக்கு, உங்கப்பா சொத்து சேர்த்து வைத்தனால் ,உமக்கு உலக நிலவரம் தெரியவில்லை..   இன்னும் எவ்வளவு நாளைக்குதான் அப்பாவி - யாகவே இருப்பீர்.. ( பேசாம நம்ம கட்சி கார்டு-ய் வாங்கிப் போடுங்க.. அப்பு..)

முக்கியமா உங்க கேள்வியிலே பிழை உள்ளது.. என்னான..... அரசாங்க ஊழியர்கள் தான் வேறவேலை செய்யமுடியாது..ஆனா வேற வேலை செய்பவர்கள், அரசாங்கத்துக்கு உதவலாம்.ஹி..ஹி..ஹி
( நாங்க வெவரமில்ல... ).


தாத்தா பாவம்... ரொம்ப கஷ்டமான சூழ் நிலையிலிருந்து மேல வர இன்னும்
முயற்சி செய்துகொண்டுள்ளார்..

முரசொலி ஆரம்பித்தபோது கையிலே பணமேயில்லாமல் , கடைய மூடுகின்ற நிலைக்குப் போயிட்டார்...  அதைப் பார்த்த மனைவி  ( முதல் மனைவி .. அதுதாங்க  நம்ம டாஸ்மார்க் சக்ரவர்த்தி முத்துவுடைய அம்மா ) ,   கை-கால்-ல போட்டிருந்த நகை, நட்டெல்லாம் கழட்டி , தாத்தாவுக்கு முட்டு கொடுத்துள்ளார் என பழைய
சரித்திரம் சொல்கிறது..

ஆனா.. விதி-னு ஒண்ணு இருக்குதே.. அது தலைவருக்கு துணைவிகள் என்ற பெயரில் விளையாடிவிட்டது..

(   அய்யோ..சாமி.. ..............அண்ணா.. மன்னிச்சுகோங்க.. தப்பா டைப் அடுச்சிட்டேன்.. "விளையாடிக்கொண்டிருக்கிறது" என வாசிக்கவும் )
 

இந்த கழகக் குடும்பத்திற்க்கு  சம்பாரிச்சு ,  சம்பாரிச்சு பாவம் தாத்தா ஓய்ந்துபோயிட்டார்..( வந்ததும் சரியில்ல.. வாய்ச்சதும் சரியில்ல..)

அவரு முழு நேர தொழிலே,  கலை உலகுக்கு கதை எழுதுவதுதான்.. ஏதோ அப்பப்ப முதல்வர் மாறி வேலை செய்யறாரு.. அவரப் போயி..........!!!


போங்க சார்.............. டமாஸ் பண்ணிகிட்டு.................



- அன்புடன் பட்டாபட்டி
.
.
.

Thursday, January 21, 2010

கோழி மாட்டிகிடுச்சு டோய்...


பட்டாபட்டி சார்..
நான் உங்கள் பதிவின் ரசிகன்..உங்கள் ப.மு.கழகத்தில்  சேர விருப்பமாக உள்ளேன்.. அதற்கு என்னென்ன அடிப்படை தகுதிகள் வேண்டும்.?..
மேலும் அதில் சேர்வதால் என்னென்ன நன்மைகள் உள்ளது ?...
அப்படி சேர்ந்தபிறகு யாராவது என்னோட பட்டாபட்டியை உருவிவிட்டால்
என்னென்ன செய்வது.. கொஞ்சம் விளக்கமுடியுமா?...
-வாழவந்தான் ( சோழாவரம் )




பதில்   : 

அன்புள்ள வாழவந்தான் சார்...
 என்னைய " சார் "-னு சொன்னதாலே , உங்களுக்கும் இன்னைக்கு ஒரு  குவாட்டர் ப்ரீ...     ஆமா......நீங்க என்ன கே.பி சுந்தராமாளோட சொந்தக்காரரா?.. ஏகப்பட்ட 

என்ன...
என்ன...
என்ன...
என்ன...
என்ன...
என்ன...



  • ப.மு.கழகத்தில் சேர அடிப்படை தகுதின்னு சொல்லனமுனா  "சொன்னவுடன் தீக்குளிக்க ரெடியா இருக்கனும்."   இது முக்கியமான அடிப்படை தகுதி....
  • நன்மைகள்-னு பாத்தீங்கனா , இந்த லிங்க் சொடிக்கி பாத்துக்கோங்க...


  • பட்டாபட்டிய உருவி விட்டா என்ன பண்றதா?..
என்ன சார்...இதெல்லாம் ஜுஜிபி மேட்டரு..
எப்பவுமே ,கலைஞரின்   பூம்புகார் ஜட்டி/பனியன்கள் போட்டு , அதுக்கு மேல பட்டாபட்டியப் போட்டுக்கோங்க...
( வாழவந்தான் சார்... எங்க கட்சியில சேர்ந்தா சீக்கிரம் ஆளவந்தான் ஆயிரலாம்...)

சோழாவரம் பக்கம் நம்ம தல - யப் பாத்தா , இந்த பட்டாபட்டி கேட்டதா சொல்லுங்க...


- அன்புடன் பட்டாபட்டி
.
.
.

ராதிகா மேடம் அழாதீங்க..தினக்கூலி கூவல்.......


Dear பட்டாபட்டி,
நான் குனியமுத்தூரில் உள்ள மில்லில் தினக்கூலியாக வேலை செய்கிறேன்.  எனக்கு கல்யாணமாகி 3 குழந்தைகள் உள்ளனர்.

ராதிகா மேடம் "ஜக்குபாய்" திருடப்பட்டதுக்கு, கண் கலங்கிய
காட்சியை கண்டு இரண்டு நாட்களாக சாப்பிடப்பிடிக்கவில்லை..
ஏன் நம் தமிழ் நாடு  இப்படியாகிவிட்டது.
இதற்கு விடிவு காலமே இல்லயா?.


-சொறி மண்டையன்  (
குனியமுத்தூர் )



பதில்   : 

அன்புள்ள சொறி மண்டையன் அவர்களே..
 
உங்களுக்காவது கண்கள் மட்டும் தான் கலங்கியது.. எனக்கு ஒன்பது ஓட்டையிருந்தும் கண்ணீர் வந்திருச்சு.  தினக்கூலியா வேலை செய்தாலும் , நீங்க  ராதிகா மேடத்து மேல வெச்சுருக்கிற அன்------>பு ,  என்னை
மெய் சிலிர்க்க வைக்கிறது...( ஆனா நாலாவதா......... chance -யே இல்லை..மீறினா நாட்டாமை சொம்பத்  தூக்கிட்டு வந்துருவாரு.. சொல்லீட்டேன் )

மேடம் தேம்ஸ் நதியிலேயே கப்பல் விட்டவங்க..ஆனா இந்த விசயத்திலே எப்படி கோட்டைவிட்டாங்கனு தெரியவில்லை..............

நீங்க 3 குழந்தைகளுக்கு அப்பன் சொன்னதாலே , உங்களுக்கு மட்டும் என்ன பண்ணனுமுனு சொல்றேன்..   படிச்சுட்டு , சொந்த பணத்தப் போட்டு , மேடத்துக்கு Phone செஞ்சுக்கோங்க.. ( ஏன்னா அவங்களுக்கு  என்மேல வருத்தம்.. அதச்  சொன்னா , நீங்க உங்க வேலைய ரிசைன் பண்ணீட்டு , ராடன் - ல போயி
சேந்துருவீங்க..)


சரி.. மேட்டருக்கு வருவோம்....
 

அடுத்த தடவை ,  படம் ரிலீஸ் ஆகும்வரை  பொட்டிமேல "வீராசாமி" னு லேபில்-ல  ஒட்டிட்டா, எந்த நாயியும் காப்பி பண்ணாது.  
ஒட்டு வேலை , நட்டு வேலை முடிந்தவுடன் ஒரிஜனல் பேரை வைச்சு படத்த ரிலீஸ் பண்ணச்சொல்லுங்க..

இந்தமாறி தினக்கூலி வெறியர்கள் இருக்கும்வரை , ராதிகா மேடமும் ,  ராடன் டீவி-யும் வருத்தப்படவேண்டியதில்லை.. தமிழ் நாடும் வெளங்கீடும்...

( பாத்துங்க சொறிமண்டை............ ரொம்பவே அப்பாவியா இருக்கீங்க...குனிய வெச்சு குமறியெடுத்துடப்போறாங்க..)

முதல் கேள்வி கேட்டதாலே, என்னோட பேரச் சொல்லி குனியமுத்தூர் டாஸ்மார்க்-ல இன்னைக்கு மட்டும் ஒரு குவாட்டர் ப்ரீ'யா  வாங்கிக்கோங்க..

- அன்புடன் பட்டாபட்டி
.
.
.

பட்டாபட்டியைக் கேளுங்கள்..

புத்தம் புதிய தொடர்..
  • மண்டைக்குள்ளே கேள்விகளாக உருள்கிறதா?
  • யாரக்கேட்பதென்று பயமாக உள்ளாதா?
  • மக்களுக்கு நல்லது பண்ணவேண்டுமென்று , மனச்சாட்சி அழுகிறதா?...
  • நாடு முன்னேறவேண்டுமென்று கனவு காண்பவரா?


அப்படினா இது உங்களுக்கான Blog....



விதிமுறைகள்




  • கேள்விகளை pattapatti.cbe@gmail.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பலாம் ..
  • ஒரு நபர் , ஒரு கேள்விக்குமேல் கேட்கக்கூடாது...( மீறினால் அண்ணனிடம் சொல்லி மிஸ்ட் கால் கொடுக்கப்படும்)
  • தொல்லைபேசியில் தொடர்புகொள்ள 1800-ங்-கொ-ய்யா-லே என்ற எண்ணுக்கு அழையுங்கள்..
  • தொலைபேசிக் கட்டணம் நிமிடத்திற்கு 10 காசு மட்டுமே..
  • வரிவிலக்கு உண்டு...
.
.
.

Wednesday, January 20, 2010

உடன்பிறப்பு அவசரமாக எழுதும் மடல்...



தலைவா..
கழக உடன்பிறப்பு அவசரமாக எழுதும் மடல்...
அய்யா , சூரிய வெளிச்சத்திலேயே நம்ம அண்டர்வேர உருவராங்கோ
இந்த படுபாவிப் பயல்க...


நீங்களே கீழ இருப்பதைப் படிங்க...

 சூரிய சக்தி மூலம் 6,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய மத்திய அரசு இலக்கு



மும்பை:"மொபைல் போன்கள் பெருகியுள்ளதை போல, சூரிய சக்தி மூலமான பயன்பாடும் பெருக வேண்டும்' என, மத்திய சுற்றுச்சூழல் துறைஅமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.மும்பையில் இது குறித்து ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது: இந்தியாவில் சூரிய சக்தி வளம் மண்டிக் கிடக் கிறது. ஒரு நாளைக்கு ஒரு சதுர மீட்டர் பரப்பளவை கொண்டு, நான்கு முதல் ஏழு மெகாவாட்மின்சாரத்தை தயாரிக்க முடியும்
....


.
.
.


நாம எவ்வளவு வருசமா உதயசூரியன வெச்சிட்டு இருக்கோம்..
நம்மள கேட்காமலேயே , என்னமோ தயாரிக்கறாங்க..

தலைவா.. உம்- னு சொல்லுங்க..
ங்கொய்யாலே , நேராப் போயி சங்க அறுத்தறோம்..



எப்படி தலைவா நீ இவ்வளவு அமைதியா இருக்கே..உனக்கு தலைக்குள்ளே ஆயிரம்  பிரச்சனையிருக்கும்..





நான் காலையிலே பேப்பர் படிச்சதுக்கப்பறம், இப்ப வரைக்கும்
கக்கூஸ் போகல....... தலைவா..நம்ம பயபுள்ளைக டாஸ்மார்க் முன்னாடி கூட்டம் சேர்த்துட்டானுகோ..

நம்ம அஞ்சானெஞ்சன் கிட்ட சொல்லி ஒரு மிஸ்ட் கால் போடச் சொல்லுங்கோ..
கட தொறந்ததும்,  சரக்கடிச்சுட்டு, வட இந்தியாவுக்கு  மொத ரெயிலப் புடிக்கணும்...

தலைவா .. அப்படி ஏதாவது ஒண்ணுக்கு  கிடக்க ஒண்ணு ஆயிருச்சுனா ( அந்த ஆயி இல்ல )..முரசொலியில ஒரு முக்கா பக்கத்துக்கு கவிதையப் போட்டுருங்கோ.. ஏதோ எங்க குழந்த குட்டிகோ  அதை வச்சு பொழைச்சிகிடும்..
இப்படிக்கு வெறி கொண்டு அலையும் உடன்பிறப்பு..
.
.
.
.பின்னூட்டமிடாமல் செல்பவர்களுக்கு 3 பிரதி  " உளியின் ஓசை "  கூரியரில் அனுப்பப்படும்..

சோனியா காந்தியின் nnnnnnn தன்னடக்கம்....






புதுடில்லி : "நெடுஞ்சாலைத் திட்டங்கள் குறித்த விளம்பரப் பலகைகளில் பிரதமர் மன்மோகன் சிங்குடன், சோனியாவின் படமும் சேர்க்கப்பட்டு, வைக்கப்பட வேண்டும்' என்று உத்தரவிட்டுள்ள நெடுஞ்சாலைத் துறைக்கு, தனது படங்களைச் சேர்க்க வேண்டாம் என்று கடிதம் எழுதியுள்ளார், சோனியா.




நெடுஞ்சாலைத் திட்டங்கள் குறித்த விளம்பரப் பலகைகள், சாலையோரங்களில் வைக்கப்படுவது வழக்கம். இம்முறை, இந்திய நெடுஞ்சாலைத் துறை ஆணையம், வித்தியாசமாக ஓர் உத்தரவை வெளியிட்டது.அதன்படி, அந்தந்தப் பகுதிகளுக்குரிய நெடுஞ்சாலைத் திட்ட விளம்பரப் பலகைகளில் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் சோனியா படங்கள் பொறிக்கப்பட வேண்டும். 20க்கு 10 அடி என்ற அளவில் அந்தப் பலகைகள் இருக்க வேண்டும். சாலையில் ஒவ்வொரு 25 கி.மீ., தூரத்திலும் பலகைகள் நிறுத்தப்பட வேண்டும்.இது குறித்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் கமல்நாத்துக்கு சோனியா எழுதியுள்ள ரகசிய கடிதத்தில், தன் படம் பொறிக்கப்பட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன


இத்தாலி தாயே.. என்னே........... உங்கள் தன்னடக்கம்...
மக்கா..அவங்க வேண்டாமுனுதான் சொல்வாங்க.. உடாதீங்க அப்பு..


தாயே.. இந்தியர்கள் நன்றி மறாவதவர்கள்.  
நீங்க வேண்டாமுனுனா , கேக்கறதுக்கு நாங்ககென்ன மன்மோகன் சிங்கா ?...

சுதந்திரம் வாங்கித்தந்த செம்மலு...
இந்தியாவின் விடிவெள்ளி...
சேலை கட்டின மாரியம்மா...

சிக்கங்குனியாவை ஒழிக்க வந்த சிங்கம்........நீங்கள்
 


நம்ம சின்ன காந்தி பதவியேற்று எங்களை வழி நடத்தும் வரை உங்கள் போட்டோ , நெடுஞ்சாலையில் காலை, மாலை பூஜை, புனஸ்காரங்களுடன் பராமிக்கப்படும்...( அன்னதானமும் இருக்கு...)




என்னது.. ரொம்ப புகழ்றேனா?..போங்க தாயி....  இது தாத்தாமேல சத்தியம்....

என்னடா........ இவன் பச்சமரத்திலே ஆணியடிக்காறானு பாக்கிறீங்க.. வேற ஒண்ணுமில்லை..   இந்தியா  - இத்தாலி நான்கு வழி சாலைத்திட்டத்தை , எங்க பட்டாபட்டி பிரைவேட் லிமிட் -க்கு காண்ராக்ட் கொடுத்தீங்கனா நாங்க அப்படியே பிக் அப் பண்ணிப் போயிட்டேயிருப்போம்..அதுக்குத்தான்...
( ஆமாம்மா.. தீபாவளிக்கு தீபாவளி ,  பட்டாசு , பலகாரமமெல்லாம் ஊடு தேடிவரும்) 

.

.
அப்புறம் முக்கியமா,       "  20க்கு 10 அடி "  என்ற அளவில் அந்தப் பலகைகள் இருக்க வேண்டும் என் சொல்லியிருக்காங்க.. 

பேசாம , 6 - க்கு 2 - அடி பலகையா போட்டுடலாம்.. சரியாயிருக்கும்...
 

.
.
.
.

," பின்னூட்டமிடாமல் செல்பவர்கள் வீடுகளுக்கு இந்திய ராணுவம்  
அனுப்பப்படும்..போர்.. போர் "