Pages

Wednesday, December 29, 2010

தலைப்பா?.. “ப.ர்.ர்..ர்ர்..”னு வெச்சுக்குங்க..

.
.
.
ஆணி-னு போர்ட் போட்டாலும், தொந்தரவு சுத்தி சுத்தி வரும் என்பது கலைஞர் மூலமாக கற்றுணர்ந்த உண்மை.

வேலையிடத்தில ஆணி..   சரி.. ஏதாவது பதிவ படிக்கலாம்னு போனால்...
போனேனா!!!..  அங்கதான் சனி சம்மணம் போட்டு உட்கார்ந்து இருந்தது......

நமது அண்ணன், அஞ்சா சிங்கம், திருவருச்செல்வன், சிந்தனைச்சிற்பி, படத்தைப்பற்றி அருமையா விமர்சனம் எழுதி, பார்க்காதவன் பைத்தியக்காரன் என்ற ரேஞ்சில விளாசி விளாசி  எழுதியிருந்தார்...ஆமா.. இப்ப நான் எழுதியிருந்தாருனா சொன்னேன்.. சே..சே  வரைந்திருந்தார்..

அண்ணன் சொன்னா.. ஆண்டவரு(?) சொன்னமாறினு நினச்சுக்கிட்டு, அப்பவே  கிளம்பி தியேட்டருக்கு போனேன்.

ங்க்கொய்யா.. படமாய்யா அது.. சூப்ப்பரு... நான் கமல் ரசிகன்னு சொல்வதைவிட,  வெறியன்னு சொல்லலாம்.  அப்பேர்பட்ட வெறியன், இப்பதான் சமீபமா..( ஹி..ஹி..  இங்கே சமீபம் என குறிப்பிட்டால், ரெண்டு அல்லது மூணு வாரம் என அர்த்தம் கொள்க..  மீறி, 1948 க்கு சென்றால்...  சென்றால்....போய் தொலைங்கப்பா.. நான் சொல்ல  வந்ததை சொல்லிட்டு, கிளம்பறேன்..  -பதிவர்)

சே...பார்த்தீங்களா?.. இதுதான் சார், எங்கிட்ட பிரச்சனை.   இப்ப என்ன சொல்லிக்கிட்டு இருந்தேன்.. ஆங்..  சினிமா பற்றி...  அதாவது,  படம் சூப்பருங்க.. குடும்பத்தோட பாருங்க. முடிஞ்சா ப்ளாக்ல டிக்கெட்
வாங்கிப்பாருங்க.. காதலர்களுக்கு அருமையான படம். அட்டகாசமான லைட்டிங்..   தியேட்டரை சொன்னேன் .  ( நல்லா இருட்டாத்தான் இருக்கு..பிரச்சனை வர வாய்ப்பில்லை.)

அதுல எனக்கு மிகவும் பிடிச்ச காட்சி என்னானா?.. பையன் காசை வாயில
போட்டுறுவான்.. கூடியுள்ள கூட்டம் பதைபதைக்குது. அடுத்து என்ன ஆகமோ-னு சீட்  நுனியில ஒவ்வொருத்தையும் உட்காரவைத்த, ரவிக்குமாரை ( அதாம்பா..  படத்தோட டைரக்டராமாம்..) பாராட்ட வார்த்தைகளே இல்லை...

எனக்கோ, கண்ணுல தண்ணியா கொட்டுது. அடுத்து அந்த காசு வெளிய வரும்... தவறி த்ரிஷா வாயில விழும்.  கமல் சீறி பாய்ந்து, தலைகீழா புரட்டி(?),  த்ரிஷா வாயில இருந்து காசை எடுப்பாருனு நினச்சுக்கிட்டு இருந்தனா.. ஹி..ஹி  தூங்கிட்டேன் போல.

படம் முடிஞ்சு, மந்திரிச்சு விட்டமாறி வெளிய வந்தா ஒரே வெயில்.
ஆகவே மக்களே. மீதி படத்தை பார்த்து, புளங்காகிதம் அடைய, பதிவர்கள் சார்பில் வாழ்த்துக்குறேன்.

இப்படிக்கு
வெறுப்புடன் கமல் ரசிகன்.

டிஸ்கி 0..
எங்கப்பா..நான் பள்ளியில படிக்கிற காலத்தில, ’ஒழுக்கமா படிச்சு வாழ்க்கையில முன்னேற பாரு’ன்னு பிடரியிலே, அவ்வப்போது போடுவாரு.  ஆனா, எங்கப்பனையும் மிஞ்சி, ஒரே போடா போட்டு, என் வாழ்க்கையில தீபம் ஏற்றிய ’அண்ணன் ரவிக்குமாருக்கு’ என் இரு கரம் கூப்பி நன்றியை தெரிவித்துக்கொண்டு, பொழப்ப பார்க்க ஆபீஸ் போகிறேன்..
நன்னி தலிவா..

இதேமாறி அடுத்த படத்தை சீக்கிரமா எடுத்து விடுங்க.. புண்ணியமா போகும்.. ஆங்.. எங்களுக்குத்தான்..


டிஸ்கி 1.
சிங்கப்பூர் டீவீயில், ”கமல், ரவிக்குமார், த்ரிஷா மற்றும் மாதவனு”க்கு, சிவப்பு கம்பள வரவேற்ப்பு கொடுத்ததை காட்டி( படத்தில் நடித்தற்க்கு.!!),  என்னை மனிதனாக்கிய டீவி நிலையத்துக்கும் என் நன்னி.

”கண்ணால் காண்பதும் பொய்.. 

காதால் கேட்பதும் பொய்.. 
தீரவிசாரிப்பதும் பொய்தான்..”

மறக்காம் படத்தை பாருங்க.. நாட்டை முன்னேற்றிச்செல்லுங்க...


டிஸ்கி 2.
ஆங்.. என்னா படம்னு சொல்லமறந்துட்டேன்.. ”மன்மத அம்பாம்”..


டிஸ்கி 3.
மார்க்கெட் போன நடிகனுக, நடிக்கவேண்டிய படத்தில்.. கமல்.. இதுல, வசனமும் அவரேதானாம்.. உம்...
”ஊறுகாய வெச்சு உண்டக்கட்டி சாப்பிட்டு

இருந்தா.. வெடுக்குனு போயிருக்கும்”.. எல்லாம் கொடுமை சார்..
.
.
விடு தலைவா  !!!..   இப்ப எங்க மூஞ்சியும் இப்படிதான் இருக்கு....
.
.
.

Wednesday, December 22, 2010

ஆ........ணீ......



ஆணி அதிகம்..அதனால.. ஹி..ஹி... அடிக்கடி ப்ளாக் பக்கம் வரமாட்டேன்..

 @டெ%$#^#&#@ரர்...
ப்ளாக்கை வித்துடாதே மச்சி...

நான் சொல்வதை என்னைக்கு கேட்டிருக்கே?.. சரி வித்தா,
2 % டோமருக்கும், ( ங்கொய்யா.. இனியாவது மொய் கொஞ்சம் அதிகமா வைக்கட்டும்.. வெங்காயம் என்னா விலை விற்க்குது?..)
4%  கனி+ராசாவுக்கும் கொடுத்துட்டு,
மீதியை , என்னுடை ஸ்விஸ் பேங்க் லாக்கர்ல வைத்துவிடு. ( ஆமாய்யா.. சோனியாவின் தங்கை லாக்கருக்கு..பக்கத்து லாக்கர்தான்.. அதுல புலிப்படம் ஒட்டியிருக்கும்.)

@%@#$#@^$#@$ஸு..
தக்காளி..சைக்கிள் கேப்-ல உள்ள பூந்து விற்க பார்த்தே...அப்பால இருக்கு உனக்கு..

( பட்டாபட்டியே போடாம, நான் ஆடும் ருத்ரதாண்டவத்தை பார்த்திருக்கியா?.!!!!  )




டிஸ்கி..

எழுத சரக்கு இல்லேனு கண்டுபிடிச்சிருப்பானுகளா?..
சே..சே.. நம்ம பயலுக, அந்தளவுக்கு யோசனை பண்ண மாட்டாங்க..!!!...... ஹி..ஹி


மக்கா... உங்க தன்மானத்தை ஓவரா காட்டிடாதீங்க.. அப்புறம் அந்த ரெண்டு எழுத்துக்காரரு, “நான் அப்பவே சொல்லலே.”.னு  எல்லா பெண் பதிவர்கள் ப்ளாக்குக்கு போய் பிலாக்கணம் பாடும்.. ஹி..ஹி

Saturday, December 18, 2010

சொன்னாங்கோ...


@கனிமொழி

”ராசா கைய வெச்சா.. அது ராங்கா...”

திமுக மீது எந்தக்குற்றமும் இல்லை என்பதை நிரூபிக்க இது போன்ற ஆய்வு நடவடிக்கைகள் அவசியம்.   ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் திமுக தனது தூய்மையை மெய்ப்பிக்கும்.  விசாரணைகளுக்கு திமுக எதிரானது அல்ல என்பதை இந்த நடவடிக்கைகள் எடுத்துக்காட்டுக்கிறது.   சிபிஐ விசாரணைக்கு முழுவதுமாக ஒத்துழைக்க தயார்.  இந்த விவகாரத்தால் எந்த வகையிலும் திமுக-காங்கிரஸ் உறவு பாதிக்காது.



ஹா..ஹா... கலைஞர் மகள்னா கொக்கா?.. அப்படி போடுக்கா அருவாளை..
இந்த முட்டாப்பயலுக..அதாங்கா..நம்ம  நாட்டுமக்கள்..  ஹி..ஹி அவர்களின் முன்னேறத்துக்காக, தன் குடும்பத்தையே அர்பணித்த கலைஞரை(?),
சீண்டிப்பார்க்கிறாங்க.. விடாதீங்கங்கா...

அக்கா.. உங்கள் ஆங்கிலம் அருமை.. அதைவிட, ராசாவின் ஆங்கிலமும் ஓகோ..ஆகா..   நீங்க ரெண்டு பேரும் மேடையில சேர்ந்து நின்னு பேசனும். அதை நாங்க வாய் பிளந்துட்டு பார்க்கனும்.. அதான் இந்த ஏழை வாக்காளானின் ஆசைக்கா..
 
’மணி எனக்கு, கனி உனக்கு..’ யாரோ சொன்னாங்களாமே.. அப்படீனா என்னாக்கா?..


=======================================================================


@தங்கபாலு

ஓய்..அங்க பாரு- .உங்க அன்னை.
ஊழலுக்கு காங்கிரஸ் எதிரானது. ஊழல் குற்றச்சாட்டு வந்தவுடனேயே பதவியிலிருந்து மகாராஷ்டிர முதல்வர் ராஜினாமா செய்தார். இதுபோல பல உதாரணங்களை கூறலாம். ஊழலுக்கு துணை போக மாட்டோம். உண்மை நிலை தெரியும் வரை ஒருவரை குற்றம்சாட்டுவது தவறு. குற்றச்சாட்டு வந்தவுடனேயே ஒருவரை குற்றவாளி என்று கூறிவிட முடியாது. அது சரியானதல்ல.




”எங்களை பெற்றெடுத்தது(?) அன்னை சோனியா. அவர் காலடி மண்ணெடுத்து, அவரது அடிவருட்டும் வரை,   ஊண் உறக்கம் இன்றி பாடுபடுவோம்.
ராகுல்.... ’அன்னை பெற்றெடுத்த வைரம்’.   அவரையும்,  அவரது இன்நாள்காதலியையும், ஆட்சிப்பீடத்தில ஏற்றும்வரை, மலம்கூட கழிப்பதில்லை என சூழுரைக்கின்றேன்.”
ஏண்ணே. இதெல்லாம் விட்டுட்டீங்க...போங்கண்ணே.. வயசானா, எல்லாம் மறந்துட்டு வருது..


=======================================================================

@முதலைமைச்சர்
உம்..இன்னைக்காவது முடி வெட்டனும்.
அமைச்சர் பதவிக்காக தன் பேரனிடம் அதுவும் ரூ. 600 கோடி அவரது பாட்டி வாங்கினார் என்று சில பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. இதை நிரூபிக்கத் தயாரா? இதுபோன்ற உண்மைக்கு மாறான பொய்ச் செய்திகளை ஒரு சில பத்திரிகையாளர்கள் திரித்து வெளியிட்டோ அல்லது அதற்காக கூடிப்பேசி சதித் திட்டம் வகுத்தோ திராவிட இயக்கத்தை சேதப்படுத்த எண்ணுகிறார்களா?
//







ரைட்..ரைட்..ரெண்டு நாளா முரசொலில கடிதம் கூட எழுதாம , எங்க போய் தொல.. இருந்தீங்க?.
அறிஞர் அண்ணா இறந்தபோதுகூட விடாமல், கடிதம் எழுதிய கைகள், கட்டுண்டு கிடப்பதின் ரகசியம் என்னா தலை?...
கனியோ.. காயோ?. பழுத்தால் அழுகதான் செய்யும்...



=======================================================================




 @அன்புமணி ராமதாஸ்
’நாளை நமதே.. இந்த நாடும் நமதே...
 
பாமக துணை இல்லாமல் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது. அடுத்த 10 ஆண்டுகளில் புகையிலை மற்றும் மதுவுக்கு அடிமையாகத இளைஞர்களே இல்லை என்ற நிலை ஏற்பட்டுவிடும் என்ற அச்சம் நிலவுகிறது. இதுவா புரட்சி, இதுவா முன்னேற்றம், இதுவா சமுதாய முன்னேற்றம். மதுவை ஒழிக்க வேண்டும் என்று சொல்லக் கூடிய தலைவர் இந்தியாவிலேயே ராமதாஸ் மட்டும்தான். அனைவருக்கும் இலவச கல்வி தர பாமக பாடுபடும் என்றார்.



விடுண்ணே..விடுண்ணே.. எதுக்குண்ணே 10 வருஷம்?..

அரசியல் குடும்பங்களும், வாரிசுகளும், சுருட்டும் வேகத்தை பார்த்தால்,( பார்த்தீங்களா.. கோவிச்சிக்கிரீங்க.. வாரிசுனு உங்களை சொல்வேனா?.. இது அவங்களைண்ணே..)  இன்னும் ரெண்டு வருஷத்தில் எல்லா பயலும், பிச்சை எடுக்கும் நிலைக்கு போயிடுவானுக.

அப்போது, கண்டிப்பா, இலவச கல்விதான் கொடுக்கவேண்டி வரும்...ஹி..ஹி..
நடத்துங்க..நடத்துங்க.. ஆமா..வரும் தேர்தலை, யார் வீட்ல கொண்டாடப்போறீக?...



=======================================================================

@இதெல்லாம் நாம...




.
மன்னன் வருவான்..   கதை சொல்லுவான்.
வண்ண வண்ண போஸ்டர் ஒட்டி காயடிப்பான்..
.


Tuesday, December 14, 2010

ங்கொய்யா..விடாதே..குத்து…

காங்கிரஸ் எம்.பி.  ஆவேசம்: கலெக்டர் மீது கடும் தாக்குதல்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரில் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் அடையாள அட்டை வழங்கும் விழா இன்று காலை நடைபெற்றது.  இவ்விழாவில் கலந்துகொள்ள அமைச்சர் எ.வ.வேலு, காங்கிரஸ் எம்பி கிருஷ்ணசாமி, திமுக
எம்.எல்.ஏ. சிவானந்தம், மாவட்ட ஆட்சியர் ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


விழா மேடையின் மேல் எம்.பி.  கிருஷ்ணசாமியுடன் வந்திருந்த காங்கிரசாருக்கும்மாவட்ட ஆட்சியர் ராஜேந்திரனுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது.  இதில் ராஜேந்திரன் மூன்று காங்கிரஸ் பிரமுகர்களை அடித்துவிட்டார்.  இதைக்கண்டு  முக்கியபிரமுகர்கள் உட்பட எல்லோரும் அதிர்ச்சியானார்கள்.


இதனால் கோபமடைந்த காங்கிரசார்  மாவட்ட ஆட்சியரை சுற்றி வளைத்து உதைத்து கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.
 

மேலும்எம்.பி.கிருஷ்ணசாமி மாவட்ட ஆட்சியரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட
முற்பட்டார்.  அப்போது திமுகவினர் அவரை தடுத்து ஆரணி தங்கும் விடுதிக்கு
அழைத்து சென்றனர்.
    மாவட்ட ஆட்சியர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. தரப்பினர் உறுதியாக உள்ளனர்.

இதனால் திருவண்ணாமலையில் பதட்டம் நிலவுகிறது.

//




ங்கொய்யாலே.. காங்கிரஸ்காரன்னா, என்ன இளிச்சவாய கூ.கூ..கூமுட்டையா? எங்க மேலேயே கை வைப்பையா நீ?.. 



எங்க தலைவன், இவனுகளுக்காக,  ஸ்பெயின் சரக்க ஒதுக்கி வெச்சுட்டு,  படிப்ப பாதியிலேயே நிறுத்திப்புட்டு(?) , ”மக்கள் தொண்டே மகேசன் தொண்டு”னு,  ஊண்  உறக்கமின்றி , நாடு முழுதும் சூறாவளி பயணம் சுற்றிக்கிட்டு இருக்கார்..

இங்க என்னடானா, ”பாரம்பரிய கட்சிகாரனுக ஆச்சே.,  நாட்டு சுதந்திரதுக்கு படாதபாடு பட்டவனுகலே இவனுக”  என்ற மட்டு மரியாதை இல்லாம,  நம்ம மேலேயே ”கை” வைக்கிறானுக... 

உடாதீங்க மக்கா..  இன்னைக்கு,  எவ்வளவு பேர் செத்தாலும் சரி..


உடனே அன்னைக்கு.. அதாம்பா..... நம்ம காவல் தெய்வம் “சோனியா அன்னைக்கு”  போன் போடுங்க.... 

இந்திய ராணுவத்தை  திருவண்ணாமலைக்கு திருப்பி விடுங்க..


தக்காளி.. நாடே சுடுகாடு ஆனாலும் சரி.. நாம மரியாதைய நாமதான் காப்பற்றனும்.

இலங்கையில் , தேசிய கீதத்தில் , தமிழ எடுத்துட்டானுகனு, எங்க தலைவர் கலைஞர் அய்யா, எவ்வளவு வருத்தப்பட்டு , அறிக்கை விட்டிருக்காரு.?  
(பாவம்... வருத்தம் தாங்காம, ஏற்காட்டுக்கு  ஏறிப்போயிட்டாரு...)

நம்ம மேல கை வைக்க, எவ்வளவு பொ&^$#ச்சு கொழுப்பு இருக்கனும் இவனுகளுக்கு...


இது என்ன ஜனநாயக நாடா?.. இல்ல சர்வாதிகாரிக நாடா?...
ஒவ்வொரு காங்கிரஸ்காரன் மேல் விழும் அடிக்கு, ரெண்டு தமிழனை போட்டுத்தள்ளனும்..


போர்..போர்...


டிஸ்கி 1..
இப்படியெல்லாம் சொல்லலாமுனு பார்த்தேன்.. ஊகும்.. நாக்கு வரமாட்டிங்குது..


டிஸ்கி 2.
"நீ போடி முன்னாடி..
நான் வாரேன் பின்னாடி... ”
அடுத்த தடவை,  சிவப்பா,  ஒரு பையன், தலையில மண்சட்டிய தூக்கி வெச்சுக்கிட்டு, ”எனக்கு ஓட்டுப்போடு..எங்காம்மாக்கு ஓட்டு போடு”னு வரும்..
வந்தா.. அதுக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க மக்களே..  ( அதாவது , தலையில் இருக்கும் மண் சட்டிய, கீழ இறக்கி வையுங்க.   .ஹி..ஹி . ஆனா..மறந்தும், களிமண்ணை(?) இறக்கி வெச்சுடாதீங்க.. )




இறக்கிவெச்சதும், 10000 மரக்கன்று கொடுத்து,  1வாரத்தில்,  நட்டு முடிச்சுட்டு வரச்சொலுங்க.. அப்படி திரும்பவும் வந்திட்டா....அப்பால.... முடிவு செய்யலாம்..
.
.
.

Saturday, November 27, 2010

ஆ...ஆ...ராசா- Exclusive (எச்சக்கலை) பேட்டி

தலைப்பை பார்த்ததுமே தெரிஞ்சுருக்கும். ஆமா சார்.. Exclusive பேட்டிதான்.. ஹி..ஹி. எனக்கு, டமில் லைட்டா தடுமாறும்.!!?

பேட்டி-னு சொன்னதும் முதல் ஆளா, வந்து நின்ற, தன்மானச்சிங்கம், ஆருயிர் நண்பன் சின்ராசுக்கு , காலைவணக்கம்.!!



யாரை பேட்டி எடுக்கப்போற பட்டு?.

நம்ம ராசாவத்தான் சின்ராசு.  நம்ம முன்னணி பதிவர்.. அதாம்பா அவரு..... ”எல்லோரும் வாங்க.. தெளிவு பெறுங்க!”னு FaceBooks-ல  சொன்னாரு..  அன்னைக்குஎன்னால முடியலே,... அதான் நேராப்போய்....

'இரு..இரு வண்டியை நிறுத்து. எனக்கு இது சரிப்பட்டு வராது. பெரிய இடத்து பிரச்சனை. டீவி வாங்கினமா!,  பணத்துக்கு, ஓட்டு போட்டமா!,  சரக்கு அடிச்சமானு!,  வாழும் தன்மானத்தமிழன் நானு. அதுவுமில்லாம அங்க போனா, என் வாய் சும்மா இருக்காது.'-சின்ராசு.

'நீ சும்மா வந்து நில்லு மச்சி. நான் பதமா இதமா பேசி, பேட்டி எடுக்கிறேன். முடிஞ்சதும் டீ வாங்கித்தரேன்.'- நான்

அப்ப சரி..



இடம் : ராசா பட்டறை.

கேட்டில் எங்கள் கார், காவல்துறையால் (வாட்ச்மேன் –யா..) மறிக்கப்படுகிறது.

 

'"சின்னவரை" பார்க்கும்முன், செல்போன்... பர்ஸ்..... கேமரா......எல்லாம் கொடுத்திட்டு டோக்கன் வாங்கிக்குங்க.'.- வாட்ச்மேன் ஆறுமுகம்.

'என்னாது?. செல்போனை கொடுத்திட்டுதான் உள்ள போகனுமா?.. அப்படியெல்லாம் முடியாது. அதிலே எவ்வளவு, ’ரஞ்சிதாக்கள் மற்றும் நித்திகள்’ பற்றிய வீடியோ ஆவணங்கள்.  இது மட்டும் வெளியாச்சு..  தக்காளி... நக்கீரன், என்னை 'காப்புரிமை சட்டத்தில' உள்ள போட்டாலும் போடுவாரு. நான் மாட்டேன்.' - சின்ராசு அடம் பிடிக்க, நான் காரை விட்டு இறங்க...

'அட.. ஆறுமுகம். நல்லாயிருக்கியா?. என்னையா இங்க வேலை செஞ்சுக்கிட்டு இருக்கே?. பையன் கம்யூட்டர்ல வேலை செய்றான். கை நிறைய சம்பளம் வாங்குறான். கஷ்டமெல்லாம் விலகிருச்சுனு சொல்லிக்கிட்டு இருந்தே. இப்ப, யூனிபார்ம் போட்டுக்கிட்டு கேட் தொறந்துவிட்டுட்டு இருக்கே.!!'

'அட. போ தம்பி. ஒரு வாரம் உக்காரவெச்சு சோறு போட்டான். நான் பெத்த பிள்ளையாச்சேனு , ’PF’ காசையெல்லாம் வழிச்சு, அவனுக்கு கொடுத்துட்டேன். அப்பால , 'நாய் சாப்பிடதும்'தான், நீ சாப்பிடனுமுனு, அவனோட வீட்டுக்காரம்மா கண்டிஷன் போட்டிருச்சு. இது நமக்கு சரிவராது. இந்த காலத்து புள்ளைக எங்க பெரிசுகளை மதிக்குது?. கோவத்தில வீட்டவிட்டு வெளிய வந்து, கொஞ்ச நாளா  இங்கதாம் வேலை செஞ்சு சாப்பிட்டுக்கிட்டு இருக்கேன்.'

'அட.. கஷ்டகாலமே. படிச்சவனும் இப்படித்தான் இருக்கானுகளா?. சரி.. விடு ஆறுமுகம். இந்த பேட்டிய முடிச்சதும், அடுத்து உன் பிரச்சனைய பற்றி எழுதரேன். ஆமா.. 'சின்ன அய்யா' உள்ள இருக்காரா?.'

'நீ போ தம்பி.. அவரு உள்ளதான் இருக்காரு. ஆனா, அந்த இடதுபக்கத்து ரூம்-க்கு மட்டும் போகாதே. சின்னம்மா கோவிச்சுக்குவாங்க!. உம்.. இந்த கையுறைய மாட்டிக்கிட்டுதான் உள்ள வரனுமுனு, சின்னய்யா உத்தரவு போட்டிருக்காரு. தப்பா நினச்சுக்காதீங்க தம்பி..'- ஆறுமுகம்

ஓ.. அது எப்ப இருந்து ஆறுமுகம்?.

அய்யா டெல்லில இருந்து எப்ப வந்தாரோ. அன்னக்கே சட்டத்தை போட்டுட்டாரு

'நல்லவேளை, ஆணுறையும் மாட்டிக்கிட்டுத்தான் போகனுமுனு, சொல்லாம விட்டாரே. அதுவரை சந்தோசம்.' ( இது நான் சொல்லலே மக்கா. நம்ம சின்ராசு உதித்தது.)



கார் உள்ளே நுழைகிறது.

அது யாருய்யா சின்னம்மா?, ராசாவோட சம்சாரமா?.

அட விடுய்யா.. இது வேற சாமாச்சாரம்...

வரவேற்பரை

'வணக்கம்.. வணக்கம்.. உக்காருங்க பட்டாபட்டி. ஏர்போர்ட் வருவீங்கனு நினச்சேன். வராம விட்டுட்டீங்க..!!'

'ஹி..ஹி.. வேணும்-னு பண்ணலே சார். பாவம். உங்களுக்கு மனசு கஷ்டமா இருந்திருக்கும். நானும் வந்து, பெட்ரொலை ஊத்தனுமானு நினச்சுட்டு,'  - பல்லிளிக்க,

'அட.. இதெல்லாம் ஒரு பிரச்சனையா?. இதெல்லாம் சகஜம்னு எடுத்துக்கிட்டாத்தான், கட்சியில இருக்கமுடியும்.     உம்.. கூலா, ஐஸ்கீரிம் சாப்பிடுங்க..  டெல்லில இருந்து வாங்கிட்டு வந்தது.'

என்ன சார். ஐஸ்கீரிம்.. ரொம்பத்தான் மாறீட்டிங்க.. ஹி..ஹி

இது வந்து.. நம்ம 'சின்னம்மா'-கு ஐஸ்கீர்ம்னா உயிரு. ஹி..ஹி.. அதான்..நீங்க சாப்பிடுங்க, பார்த்து சிந்தாம சாப்பிடுங்க. இல்லாட்டி 'கறை' பிடிச்சுடும்.

'ஹி..ஹி கறை பிடிச்சா, பயப்பட நான் என்ன கிளிண்டனா!!!?' - சின்ராசு

'என்னாது கிளிண்டன், கறைனு.. ஒண்ணுமே புரியலே. ஆமா, இது யாரு .. புதுசா இருக்கு' - ராசா வினவ

'நம்ம கூட்டாளி சின்ராசுங்க சும்மாத்தான் இருக்கான். அதான் இழுத்துக்கிட்டு வந்தேன்.' – நான்

'அப்புறம் சார். பிரச்சனை பெரிசா போயிடுச்சு போல. எப்படி சமாளிக்கிறீங்க?.' – நான் வினவ

இதெல்லாம் ஒரு பிரச்சனையா?. நாங்கதான் அதுக்கு ஒரு விளக்ககூட்டம் போட்டமே. பதிவுலகில் கூட அதைப்பற்றி ஒரு பதிவப்போட்டு இருப்பாரே நம்ம கொள்கைப் பரப்பு செயலாளர். ஏதோ, அந்த மாறி நல்ல உள்ளம் கொண்டவர்கள் இருப்பதால்தான், நாடு வளமையாக இருக்கிறது.

(போன் அடிக்கிறது. 'சின்னவர்' , புரியாதபாஷையில் பேச ஆரம்பித்துவிட்டார்.)

சின்ராசு கிசுகிசுப்பாக, 'யாருய்யா, அந்த பதிவர்?. இப்படியெல்லாம் இருக்காங்களா?. சொல்லு.. சொல்லு.. மண்டை வெடிச்சுடும் போலிருக்கு..ப்ளீஸ்..'

அட.. நம்ம பழைய பதிவருய்யா.. நல்ல lucky-யான look-ல இருப்பாரு. நல்ல மனுஷன் தான். என்ன....., உடம்புல கழக ரத்தத்தை ஏத்திவிட்டுட்டாங்க. அதான், மந்திரிச்ச ஆடு மாறி இருக்காரு. கழக விசயத்தை தவிர மற்ற விசயங்களில், பின்னி பெடலெடுப்பாரு.

அப்பறம். யாரு சார் போன் -ல. என்னென்னவோ பாஷைல பேசறீங்க?.

இல்லைப்பா.. ஆங்கிலத்தில பேசினா, ரிக்கார்ட் பண்ணி மானத்த வாங்குராங்க. அதான் சின்னம்மா இந்த ஐடியா கொடுத்துச்சு. 'என்னையவே' ஏமாத்தி, என்னுடைய பேச்சை ரிக்கார்ட் பண்ணியிருக்காங்கனா, எவ்வளவு வன்மத்துடன் இருக்காங்க, இந்த வட நாட்டுக்காரனுக.

அட நானும் கேட்டேன் சார். என்னுடைய பாராட்டை உங்களுக்கு தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.

"அட.. நீங்களும் பாராட்டினா, வேண்டாங்க...எனக்கு வெக்கம் வெக்கமா வருது. ஆமா எதுக்கு திடீர்னு பாராட்டு?" –ராசா நெளிய

முதல்வரின் மகளைவிட, உங்க ஆங்கிலம் சூப்பராயிருந்து சார். நீங்க "The Great" சார்... என்ன ஒரே குறைதான். ஆடியோவுக்கு பதில் வீடியோ எடுத்து விட்டுருக்கலாம்..  அழகா இருந்திருக்கும்..ஹி..ஹி – நான் பதில் சொல்ல

'சே..சே. எனக்கு பெருமை பிடிக்காது.. விசயத்துக்கு வாங்க. எதுக்கு திடீனு பேட்டி.?' என அவர் நெளிய, ஐஸ்கீரிம் உருக.......  இதோ பேட்டி.............

பேட்டி.

இல்லை. இவ்வளவு பணத்தை சம்பாரிச்சுட்டாங்கனு, எல்லாப்பயலும் கூவிக்கிட்டு இருக்கானுகளே. அப்படி என்னதான் தான் சார் பண்ணுனீங்க இந்த பணத்தை.?.

தம்பி. கட்சி நடத்துவது அவ்வளவு சாதாரணமா?. 'இலவச டீவீ, ஆங்.. வரும் தேர்தலுக்கு வாசிங் மெஷின் , 1 ரூபா அரிசி.'. இதுக்கெல்லாம் யார் காசு கொடுப்பானுக.?பாடுபட்டு, மக்களுக்கு பணம் சேர்த்த என்னை, ஏதோ ஊழல் பன்ணியவன் போல சித்தரித்தால், இந்த நாடு விளங்குமா?. சே. பேசாம ஸ்விஸ்-ல செட்டில் ஆயிடலாமுனு நினைக்கிறேன்.

'ஆமாமாம். கடைசியா, அங்கதான் போய் ஆகனும். கூடவே அந்தம்மாவையும் கூட்டிக்கிட்டுப்போயிடுங்க.. கிளைமேட் நல்லா இருக்குமாம். பதிவர்கள் பலபேர் சொல்லியிருக்காங்க'.- சின்ராசு

உங்க நண்பர் என்னா சொல்றாரு.. புரியலையே..

ஹி..ஹி.. அவனை விடுங்க.. இப்படித்தான் எடக்குமடக்கா பேசுவான். வாங்க பேட்டிக்கு போவோம்.

இல்ல பட்டாபட்டி. மனசு சரியில்லை.. இன்னொரு நாள் பேட்டிய வெச்சுக்கலாம். அர்ஜெண்டா வரச்சொல்லி, அவங்க கீ
கூப்பிட்டாங்க. அடுத்த மாசம் பார்க்கலாம். என்னைப்பற்றி, நாலு நல்ல வார்த்தைகளை போட்டு பதிவ போட்டா, நல்லா கவனிப்பேன். ( காதில் கிசுகிசு...... ஒண்ணு, இல்ல ரெண்டு சூட்கேஸ்..)



"உங்க பதிவ பார்த்துட்டுத்தான் சின்னம்மா, 'ஐஸ்கீர்மா?.. இல்லை அதுவா(?)னு ' முடிவு பண்ணுவாங்க.. பார்த்து சூதனமா எழுதுங்க. வரட்டுமா" ராசா செல்ல , நாங்களும் புறப்பட, "அட.. நீங்க இன்னுமா படிச்சிட்டு இருக்கீங்க..போய் அடுத்த எலெக்‌ஷன், சீக்கிரம் வரனுமுனு கடவுளை வேண்டுங்க பாஸ்... பை..பை.

சின்ராசு, "ஏண்டா பட்டாபட்டி. பேட்டி எடுக்காமலே போறோமே. அப்புறம் எப்படி பதிவ போடுவ?"

அட.. விடுய்யா.. மேட்டர் கிடைக்காட்டி, டோமர்(?)மாறி வாசகர் கடிதம்போட்டு ஒப்பேத்தலாம்.

பதிவு... வாசகர் கடிதம்

@பட்டாபட்டி (நாந்தான்)
  • குழந்தைக்கடத்தலில் ஈடுபட்டவர்களை, சுட்ட அதிகாரிகளை பாராட்டிய பதிவுலகம், ஏன் இவ்வளவு சுட்ட சின்னவரை பாராட்டவில்லை?.
  • வெள்ளச் சட்டை போட்டாலே, எல்லோரும் ஒரே ஜாதிதான். இதில் ஏன் 'தலீத், உயர்சாதி, தாழ்ந்தசாதி' என்ற பாகுபாடு?


@உண்மைத்தம்பி
.............அய்யா.. என் பழைய பதிவை கிண்டல் பண்ணி எழுதியதால், உங்கள் மீது வருத்தம் இருந்தது. இப்பொழுதாவது உங்களுக்கு புரிந்ததே!. அந்த புரிதலுக்கு நன்றி. ( நம் பணம், நம் மக்கள். இதை இலவசபடமாகப் பார்த்து, ஒரு தமிழனாக, என் கடமையை நிறைவேற்றினேன். அது இத்துடம் முடிந்துவிடக்கூடாது என்ற சீரிய நோக்கத்துடன், பதிவுலகை அழைக்க, சிலர் பார்வையில் தவறாக புரியப்பட்டு விட்டது. எல்லாம் அவன் செயல்.)


@டோமர்
...........................இனிமேல் அமைச்சர்கள், ஜெர்மன் பாஷையில்தான் தொலைபேசவேண்டும் என்பது, நண்பர் சோ-வின் கூற்று. அதுதான் , இந்த பிரச்சனைக்கு ஒரே தீர்வு. எனது புரிதலை மாற்றிக்கொள்ள சொல்லும் உரிமை , எந்த ஜாட்டானுக்கும்  இல்லை. 

எனக்கு பல பாஷைகள், மற்றும், சைபர் கிரைம், சைபர் கணவாய் பற்றி தெரியும். உலகில் எனக்கு புரியாத ஒரே விசயம், "எப்படி டை கட்டுவது என்பதுதான். அதற்கு நீரா ராடியா உதவினால், அவருக்குமுன், நிர்வாண... நிற்க எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.


@கும்மீஸ் டீம்
............................தக்காளி.. பதிவ போடுனு சொன்னா, மாசத்துக்கு ஒரு பதிவு போடுவான். இதில் ஒரு மாதத்தை, ஒரே பதிவில் அமுக்கியதற்காக என் கண்டனங்கள்.


@வெண்ணிற ராவுகள்.
.......................பேசாம, மனித நேயம், மயிரு நேயமுனு ஒரு பதிவ தேத்தலாம்..எவனாவது, சண்டைக்கு வந்தா, "வீட்டுல ஆடு கன்னுக்குட்டி போட்டிருக்கு. அம்மாவுக்கு உடம்புக்கு முடியலே"னு ஏதாவது சொல்லிட்டா, எல்லாப்பயலும் மறந்துடுவானுக.. ஷூட்.. கமென்ஸ் மாட்ரேஷன், ஆன் பண்ணனும்.


@கரு(நான்)நிதி
..................எனக்கு "கடைசியாக ஒரே ஒரு முறை வாக்களிக்ககூடாதா?" என்று, நான் கூறிய கூற்றை ஏற்று, ஜனநாயக கடமை ஆற்றிய, தமிழ் உள்ளங்களுக்கு, என் நன்றியினை தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன். "என் கடன் பணி செய்து கிடப்பதே" என்ற அண்ணாவின் அறிவுறைப்படி , தமிழகத்தை வளமாக்க, என்னுடன் தோள் கொடுங்க, வரும் தேர்தலில் தயாநிதி..     ஷ்...  தயாளு...   ஷ்......தயாராகுங்கள்.



@கான்வெண்ட் மாமி
..............எனக்கு டமில் கொஞ்சம்..கொஞ்சம் வரும்.  என்னுடைய சகோதரி ஒருவர்தான்.  கிளைகள் எங்கும் கிடையாது.   மக்கள் சிந்திக்கவேண்டும். இந்த ஆட்சீயை தூக்கி எறிந்துவிட்டு , பதவி ஏற்க நான் தயார்..  அன்னை தயாரா?.  
எனது ஆங்கிலப்புலமை அறிந்த எம்.ஜீ.ஆர்,  என்னை கட்சியின் வாரிசாக நியமித்ததை, நானோ தோழியோ, யாருக்கும் நிரூபிக்க தேவையில்லை. 
எங்களுக்கு காலம் வரும். காலம் வந்தால் ஓய்வு வரும்.. 
ஓய்வு வந்தாலும், ஓடிபோயி, ஓய்வெடுப்போமே” ............லா..லா..லா....

எல்லாம் முடிந்ததும் ,  நமது ஆட்சிதான். ” ஒன்றே தோழி.. ஒருவனே எதிரி..”.
அதுவரை நானும் தோழியும், ஓய்வு எடுத்துக்கொள்கிறோம்.    ஆடிட்டர் .. அதை எடு..


யோவ்.. செருப்பை இல்லை.. காரை சொன்னேன்..



@கன்னிமொழி
..........இவரிடம், கேட்டால் கிடைக்குமா? இன்று தொலைபேசியில் கேட்க வேண்டும்.


@சக பதிவர்கள்
................இப்படி எழுதறானே. ஒருவேளை உப்பு, கிப்பு போட்டு சாப்பிடுவானோ?


@ நக்கீரன் கேவாலு.
.................வாழ்க்கையில எனக்கு ரெண்டே குறிக்கோள்தான். ஒண்ணு வீரப்பனை பேட்டி எடுக்கனும். பணம் கிடைத்ததும் போட்டு தள்..( உஷ்...நாக்கை கடிக்கும் சத்தம்.). அடுத்து, இந்த பதிவரின் பட்டாபட்டியை, துவைத்து, இஸ்திரி போட்டு, பாராட்டு விழா நடத்தி, மக்கள் முன்னிலையில் , அவரிடம் திருப்பி தந்து என் கடமையை ஆற்றிவிடனும்.

அப்புறம் பார்த்தீங்கனா, வீரப்பன், தண்ணி கிடைக்காம இலையில் துடைத்தார்னு ஒரு சிறப்பான பேட்டி நம்ம பத்திரிக்கையில வந்துச்சே. மக்கள் மறந்திருக்க வாய்ப்பேயில்லை. ஏன்னா. அதை நேரடியா எடுத்தது எங்க டீம். அதோட வீடியோ பார்க்கனுமுனு காசு கட்டுங்க.. லிங்க கொடுக்கிறேன். இப்ப அந்த இலை, இன்றுவரை, நம்ம ஆபீஸ்ல அலங்காரமா வெச்சிருப்பதை பற்றி பெருமையா இருக்கு. அதற்க்குப் பக்கத்திலேயே, நம்ம நயன் தாரா பொண்ணு இருக்கே.. அது ஒருநாள் பேட்டி கொடுத்தபோது , மூக்கில சளி வந்துச்சு. அதை கைகுட்டையில் சீந்தி வீச போனபோது, நான் உயிர் பயமே இல்லாம, பாஞ்சு அதை பிடிச்சு, அதையும் ஆபீஸ்ல வெச்சிருக்கேன்.

பட்டாபட்டி அண்ணனின், பட்டாபட்டி வரும்வரை, "என்னை மோசம் செய்துவிட்டீர்கள்" என்று அழும் நயன் தாராவின், உயர்தர பேட்டியை, மக்களிடம் கொண்டு செல்லும், அரிய வாய்ப்பை கொடுத்த வாசக பெருமக்களுக்கு என் குழுவினரின் சார்பாக, நன்றியினை தெரிவித்துக்கொண்டு , இன்றுமுதல், எங்கள் பத்திரிக்கையை, இரண்டாக வாங்குங்கள். ஒன்று துடைப்பதற்கு.. மற்றது, எங்கள் குடும்பம் நன்றாக இருப்பதற்கு. நன்றி. “ எனக்கூறி விடை பெறுகிறேன்.




@லக்கி அண்ண்ண்னன்.
.......................என்னையவே கலாய்க்கிறானா?.  இருயா.. இரு.. பதிவப் போட்டதும் பப்ளீஸ் பண்ணிட்டு, டெலிட் பண்ணலே.. நான் கட்சிக்காரன் கிடையாது. இருடி... மாப்ளே   ( அண்ணே..  கோச்சுக்காதீங்க.......ராசா பண்ணியது தப்பேயில்லைனு,  நீங்க faceBooks போட்ட படத்தை பார்த்துதான்,  நானே அரசியலுக்கு வந்தேன்.ஹி..ஹி - ஆசிரியர்)


@பொதுசனம்.
....................அய்யா.. டீவி குடுத்தாரு. சரக்கு குடுத்தாரு. 1 ரூபாக்கு அரிசி கொடுத்தாரு. சுயதொழில் வேலை வாய்ப்பு மூலமா, வேலை செய்யாட்டியும், தினசரி பணம் கொடுத்தாரு. அடுத்தமுறை, அவருக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்கனும்.. ( சே.. அதுக்குள்ள எங்கப்பனை போட்டுத்தள்ளனும்பா.. தினமும், சோறு போடு, கொசு கடிக்குதுனு சொல்லிக்கிட்டு, வீட்டுத்திண்ணையில மூடிட்டு உட்காராமல்....)

======================================================================





டிஸ்கி 1..

"ஆண்டியப்பன் அன்று சினிமாவுக்கு போயிருந்தால்" என்ற பதிவுக்காக சவுக்குக்கு என் வன்மையான கண்டனங்கள்..  


( "ஆண்டியப்பன், அன்று கோமணத்தை, அவிழ்க்காம இருந்திருந்தால்", என்று சொல்லாமல் விட்டதால் )
 


======================================================================.

இது யார் மனதையும் புண்படுத்த எழுத்தப்பட்டதல்ல,..  அப்படி புண்பட்டிருந்தால், உங்களுக்கு என் இரங்கல்கள்...


.
.

Wednesday, November 24, 2010

மந்திரப்புன்னகை - பதிவரின்(?) பார்வையில்..

.
.
.

பதிவுலக்தோழரே,
நான் ஒரு பதிவர் என்ற முறையில் , இந்த கேள்வியை உங்கள் முன் வைக்கிறேன்.  ஒரு புதிய படவெளியீட்டு விழாவுக்கு, பதிவுலக அன்பர்களுக்கு, இலவச அழைப்பு வந்திருந்ததாக அறிந்தேன்.  இது நமக்குக் கிடைத்த அங்கீகாரம்தானே?. மேலும் இனிவரும் படங்களுக்கு, இதுபோன்ற ஏற்பாடு செய்தால், விமர்சனம் எழுத ஏதுவாக  இருக்குமே!.

மங்குனி என்ற பதிவரின் பதிவில், அதைப்பற்றிய, உங்கள்  கமென்சைப் பார்த்தேன்.  சிறிது நையாண்டியாக ஏதோ சொல்லவந்தீர்கள் போல.  ஏன்?.  ’நமக்கு கிடைத்த நல்ல ஆரம்பம் இது’, என நினைக்கலாமே!.
இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?.

அன்பின்
படைப்பாளி.


----------------------------------------

வணக்கம் படைப்பாளி.

உங்களுக்கு பதில் சொல்லும் முன்..

அய்யா.. மக்கா.. இது படத்தை பற்றிய விமர்சன்ம் இல்லை.. 
சத்தியமா , காசு கொடுத்து,    இன்னும் படம் பார்க்கவில்லை..   அதனால,.. நான் என்ன சொல்லவரேனா,  ‘பிடிக்காதவங்க.. இடது பக்கம் "Exit"-னு ஒரு கதவு ஆடிக்கிட்டு இருக்கு பாருங்க.. அதுவழியா , மெதுவா,  வெளிய போயிடுங்க....’ 

இப்ப பதிவு..................

நீங்கள் சொல்லும் அந்த பிரபலபதிவர்(?) மங்குனியின் பதிவில், என் கருத்தை பதிக்கும்போது, திடீரென் தோன்றிய சஞ்சலத்தால்,  முழுமையாக பதிவு செய்யமுடியவில்லை.    அங்கு நான் இட்ட மறுமொழி..


//

@மங்குனி..
மந்திரப்புன்னகையை பார்க்க வரும் அனைத்து பதிவர்களையும் வருக ..வருக என வரவேற்க்கிறோம்..

உண்மைத்தமிழன் அண்ணாச்சிகிட்ட டிக்கெட்டுக்கு சொல்லி வெச்சுடு.. எவ்வளவு குடும்பத்தையும் கூட்டிக்கிட்டு போலாமாம்...

மறக்காம. பேப்பர் பேனா எடுத்துகிட்டு போயிடு மாம்ஸ்..

சோறு போடுவாங்கலானு தெரியலே..
என்னாலதான் வரமுடியாது.. நம்ம முக்கிய ம(த)ந்திரியை கேட்டதாக் கூறவும்.. ஹி..ஹி

//


மக்கா.. மற்றவர்கள் எப்படியோ எனக்குத்தெரியாது. நான் எனக்கென, சில வரைமுறைகள் வைத்திருக்கிறேன்.  கடைவீதிகளில், நடக்கும் போது, புத்தக்கடையில், நக்கீரன் என்ற மஞ்சள் பத்திரிக்கையை தொங்குவதை பார்த்திருக்கிறீர்களா?    ஆம். அவர்களேதான். வீரப்பனை பார்த்து, பேட்டி எடுத்து, சர்குலேஷனை உயர்த்திய பத்திரிக்கை அது.

அதனுடைய ஆசிரியர் அப்போது அளித்த பேட்டி இன்னும் என் கண் முன்னால் இருக்கிறது.  “நெற்றிக்கண் திறப்பினும், குற்றம்  குற்றமே என்ற கருத்தின் அடிப்படையில், எங்கள் பத்திரிக்கைக்கு நக்கீரன் என் பெயர் சூட்டினோம்.  குற்றம் எங்கு நடந்தாலும், அதை  வெளிக்கொண்டு வருவதே எங்கள் குறிக்கோள்.” என கூறிய நல்லமனிதர்(?) அந்த மீசைக்காரார்

இன்றைய நிலையில்,நான்கு காலை தூக்கிக்கொண்டு, ஸ்பெக்டரம் ஊழலை அடக்கிவாசிப்பதில, அவர்களின் நல்லகுணம்(?) தெரியும்.
அவர்களுக்கு தேவை.. பிஸ்கெட் என்ற பணம். யார் கொடுத்தாலும் சரி.  அங்கு வரும் கவர்ஸ்டோரிகளை பார்த்தாலே, உங்களுக்கு புரியும்.

  • நடிகையின் முதுகில் தேமல்?. ரசிகர் தீக்குளிப்பு..
  • நித்தியானந்தனின் காமகளியாட்டம்.
  • ஆட்டத்தைப் குடும்பத்துடன் பார்க்க, எங்கள் இணையதளத்துக்கு வாருங்கள்.
  • மற்ற தளங்களை விட, குறைவான கட்டணம். நிறைவான சேவை(?)
  • பாக்யராஜ் மகன் படிப்பில் படு மக்கு!
  • தமிழர் தூக்கத்தைக் கெடுக்க வரும் ஆந்திர அழகி!
  • தடம் மாறும் மனைவிகள்...! -"சாமி' டைப்!
  • கவர்ச்சி ராணியின் கதை! -நிழலாகும் நிஜம்!

ஏன். இப்படி.. பணம்..பணம்..பணம் சாமி பணம்.. அது படுத்தும் பாடு.

அதுபோல, இந்த நிகழ்வுக்கு வருவோம். பதிவர்கள் யாரும் முழுநேரத்தொழிலாக, இதைச் செய்வதில்லை என்பது என் எண்ணம்.. (  சிலபல டோமர்களைத் தவிர்த்து....).

பதிவர்களைப்பொறுத்தவரை, ஹிட் ரேட், மறுமொழிகள், தமிழ்மணத்தில் முன்ணனி..   Etc..Etc..  என்னமோ விட்டுட்டேனே...     ஆங்.. ஓட்டுப்பிச்சை .( எழுதுங்கயா.  நல்லா இருந்தா , ஓட்டுப்போடுவாங்க. இல்ல  காறித்துப்புவாங்க..அவ்வளவுதானே!..)   மேலும், இதை வெச்சு , பெசண்ட் நகரில், மூணு கிரவுண்ட் வாங்க முடியுமா?.. இல்லை.. கனிமொழி, உங்க வீட்டுக்கே வந்து  ஆட்டோகிராப் போடப்போகுதா?

இதில வேற,  சில டோமர்கள்,
  • சாப்பிட்டு கை கழுவுவது எப்படி?.
  • முக்காமல் போவது எப்படி?.
  • பஞ்சாமிர்தத்தை, கை படாமல் நக்குவது எப்படி?-னு பதிவா போட்டு உயிரை வாங்குதுங்கள்.
நிசமாவே தெரியலே சாமிகளா...ஏய்யா  இப்படி இருக்கீங்க?.


இப்படி குடும்பத்தோட(?) படத்தை ஓசில பார்த்துட்டு, சோறுகீறு போட்டாங்கனா, அதையும் ஒரு கட்டு கட்டீட்டு, என்னா மயிறு விமர்சனம் எழுதப்போறாங்கனு நினைக்கிறீங்க?. செஞ்சோற்றுக்கடன்..... சாப்பிட்ட சாப்பாடு, உண்மையை எழுதவிடாதே பிரதர்.


இதற்கு யார்யாரெல்லாம், பாய்ந்து வந்து , குதறப்போறாங்கனு தெரியலே. பார்ப்போம்.

டிஸ்கி..
என்னாய்ய, முடிவு சொல்லாம, பதிவ முடிக்கிறேனு நினக்க்காதீங்க..

நீதி.
ஓசியில், குடும்பத்தோடு படம் பார்க்க வருபவர்களுக்கு.....

அய்யா பதிவர்களே.. எங்கே?..  எப்போ ஓசிப்படம்? என பதிவைப் போடும்  நல்ல உள்ளங்களே.    அப்படியே, அந்த பதிவில்.... சிறு கோரிக்கை வைத்து, வரும் பதிவர்களிடம், சிறுதொகையை பெற்று,  ஏதாவது ஏழைக்குழந்தைகளின் படிப்புக்கு உதவி செய்திருக்கலாமே..   சரி விடுங்க.. பதிவர் சங்கம் ஆரம்பித்து அப்பால பார்த்துக்களாம்.

இப்ப படம்.. அப்பால சந்திப்பு.. அப்பால, யாராவது நல்லவன் டீ வாங்கிக்கொடுக்காமலா போயிடுவான்.. ஹி..ஹி


மனம் இருந்தால்.....மார்க்க........
.
.
.

Tuesday, November 23, 2010

டெங்ங்ங்ங்ங்ங்கு......

.
.
.
ஏதோ பாழாப்போன காலேஸ்-ல இருந்து, எனக்கு, டாக்டர் பட்டம் கொடுத்தானுகனு மனம் பதைபதைக்குதா?.  ஹி..ஹி.    அப்படியெல்லாம் இல்லை பாஸ்.  (டாக்டர் பட்டம் வாங்க, நான் என்ன நாடறிந்த  நாதாரியா..அரசியல்வாதியா? இல்லை அரிதாரம்  பூசிய, அவதார நடிகனா?)

இந்த டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையிலும், அதைப்பற்றிய அறியாமையிலும், இந்தியா முதல் 10 வரிசையில் இடம் பெற்றுள்ளது..  (சிரிச்சுக்கிட்டே, தலைய இன்னும் கொஞ்சம் தூக்கிப் பாருங்க பாஸ்.. போட்டோவில் நல்லா வரும்.  நாம யாரு?. நம்ம பவர்  என்ன?.. ங்கொய்யாலே.)

அதை எப்படி ஒழிக்கனுமுனு, நிறைய நாடுகள் ஆராய்ச்சி செய்து வருகின்றன.. அட நாமளும்தான். அதற்கு பெரியமனது பண்ணி,  சிறிது பணம் ஒதுக்கிய இத்தாலி கவர்ன்மெண்ட்.. ஓ.. சாரிங்க.. இந்திய அரசாங்கத்தை நினைத்து மனசு விம்முகிறது.   (ராசாகளும், கல்மாடிகளும், நக்கியதை சரி செய்யவே , இன்னும் 5 வருஷம் ஆகும். அதுவுமில்லாமல், கதர் சட்டை+வாரிசுகள்.. அடுத்த 7 தலைமுறைக்கும்  சேர்த்துவிட்டு,   மிச்சம் மீதியிருந்தால்,  பெரிய அளவில் ஒதுக்குவார்களோ என்னமோ?. உம்.. பார்ப்போம்)



So. அவசரத்துக்கு வேறவழி?.. Yes.. நம் அண்ணன், நாட்டாமை அமெரிக்கா..
அவர்கள் என்ன கண்டுபிடிக்கிறார்களோ, அதை  வாங்கிக்கொள்ள வேண்டியதுதான். சமீபத்தில் வட அமெரிக்கா, புது வகையான, ஆண் கொசுக்களை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. அதனுடைய DNA-வில் சில மாறுதல்கள் செய்து,  அது டெங்கைப் பரப்பும் பெண் கொசுக்களுடன், தொழிற்புரட்சி(?) செய்யப்போகிறது. அதனால் உருவாகும் முட்டைகளில் இருந்து வரும் கொசுக்களுக்கு ( Y- Generation),  டெங்குவை பரப்பும் வீரியம்  இருக்காதாம்..

சோதனை முயற்சியாக, டெங்கு பரவியுள்ள நாடுகளில், இந்த கொசுக்களை பரப்ப உள்ளனர். அதனால் வரும் பின்விளைவுகளை பற்றி இன்னும் தெரியவில்லை. பார்ப்போம் என்ன நடக்கும் என்று.

சாக்கடைகளை, வீதிகளில் விட்டுவிட்டு, நாம் எப்பொழுதும்போல, அடுத்த தேர்தல் வரும்வரை ”நாட்டை வல்லரசாக்குவோம்” என்று கூவிக்கொண்டிருக்கலாம்.

டிஸ்கி.

Basic requirement
  • நல்ல திடகாத்திரமான, திறமையான, மூளையுள்ள இளைஞர்கள்.
  • தங்குமிடம், மூன்று வேளை சோறு, குடி மற்றும் கு^%$ட்டி இலவசம்.

Job Scope
  • நாட்டுப்பற்று அவசியம்.
  • அனுபவம் தேவையில்லை.
  • புதுவகையான மருந்துக்கள்  கண்டுபிடிப்பவர்களுக்கு, முன்னுரிமை அளிக்கப்படும்.

Medicine Spec

  • புது மருந்தானது, ஊழல் அரசியல்வாதிகளை இனம் கண்டு அவர்களிடம் மட்டுமே செயல்படவேண்டும்.
  • உடம்பில் தடிப்போ, ரத்த சோகையோ வரக்கூடாது.
  • வாயில் வைக்கும் சோற்றை,  2 விநாடிகளில் மலமாக்கும் சக்தி,  அந்த மருந்துக்கு இருக்கவேண்டும்.

Reward

வெற்றிகரமாக கண்டுபிடிப்பாளர்கள், பட்டாபட்டி ப்ளாக்கின் சொந்தக்காரராகலாம்..
.
.
.

Saturday, November 20, 2010

சென்ற வாரப் பதிவுலகம்

மியான்மர்

பர்மா என்று முன்னர் அழைக்கப்பட்ட மியான்மர் நாட்டின் ராணுவ அரசால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த அந்நாட்டின் ஜனநாயகப் போராளியும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூ கி விடுதலை செய்யப்பட்டார்.

ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடிய ஆங் சான் சூ கி (வயது 65), கடந்த 21 ஆண்டுகளில் சுமார் 15 ஆண்டுகளை சிறையிலேயே கழித்துள்ளார்.

விடுதலை செய்யப்பட்ட மறுதினமான ஞாயிற்றுக்கிழமை, யங்கோனில் உள்ள தனது கட்சி தலைமையகத்தில் உரையாற்றிய அவர்,

"நம்பிக்கையை விட வேண்டாம். நம்முடைய லட்சியங்களை எப்படி அடைவது என்பதை மக்கள் எண்ண வேண்டும். அனைத்து ஜனநாயக சக்திகளுடன் இணைந்து பணிபுரிய தயாராக இருக்கிறேன். மக்கள் விரும்பினால் மியான்மர் மீதான தடைகளை நீக்க மேற்கத்திய நாடுகளுடன் பேச தயாராக இருக்கிறேன். கடந்த 7 ஆண்டுகளாக தான் சிறை வைக்கப்பட்டது தொடர்பாக, என்னை சிறை வைத்தவர்கள் மீது எனக்கு எவ்விதமான வஞ்சமும் இல்லை," என்றார்.


 

*********** -X- ************



ஒருவேளை, தமிழகமாக இருந்திருந்தால்..மக்கா... நான் சொல்லவந்தது..உம்..உம். இருந்திருந்தால்....., ."அய்யோ கொல்றாங்களே" என்று கூவி, இரண்டு மணி நேரத்தில் வெளிவந்து இருக்கலாம். உம்.....விடுங்க...

ஜனநாயகம் உயிருடன்தான் இருக்கிறது.

.

.

.

கலாச்சாரம் , Living Together


போன வார ஹாட் டாபிக்தான் இது.. கலாச்சாரம், சீரழிவு, பாதுகாவலர்கள், வன்புணர்சி, மென்புணர்சி, துகிலுரிதல்.etc..etc.. புதுப்புது வார்த்தைகளை தெரிந்துகொள்ள உதவிய, சக பதிவர்களுக்கு, கோடான, கோடி நன்றிகள் அய்யா.  
( நல்லவேளை.. சைலேந்திரபாபுகாரு,   போட்டுத்தள்ள(?),  போலீஸ்காரன் கைகளில துப்பாக்கியைக் கொடுத்து அனுப்பவில்லை...)


  • ரேஷன் கடை,
  • திரை அரங்கம்,
  • பால் பூத்,
  • அரசாங்க அலுவலகங்கள்,
  • சாலைவிதிகள்,
  • மனிதாபிமானம்,
  • தனிமனித ஒழுக்கம்..

இதெல்லாம் என்னானு கேட்குறீங்களா?. இருங்க பாஸ்.... சொல்லுவமில்ல...

மறுமணம், காதல் திருமணங்கள் பெண்ணுரிமை.. எல்லாம் அங்கங்கே நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் மிகக்குறைந்த சதவீதத்தில் என்று சொல்லிக்கொள்வதில் வருத்தம்தான். என்ன செய்ய?. 

"அப்படி இருந்திருந்தா, இப்படி பன்ணியிருப்பேன். இப்படி கிடைத்திருந்தால், அப்படி செய்திருப்பேன்". அடுத்தவரை குறை கூறியே வளர்ந்த சமுதாயம் இது. ஒரு தவறு செய்தால், எவ்வளவு பேர், அந்த தவற்றில் பாடம் படித்தவர்களாக இருக்கிறார்கள் என நினக்கிறீர்கள்?

சந்து கிடைத்தால், நுழைக்கலாம்(?) என்ற தீவிர சிந்தனை உள்ள நற்குடி, நம்குடி.


ரேஷன் கடைகளாகட்டும், திரை அரங்குகளாகட்டும், தனிமனித ஒழுக்கத்துடன் இருப்பவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.. முன்நிற்பவன்மேல முட்டவைத்துக்கொண்டு நிற்கவில்லையென்றால், கட்டை வேகாது சார்.


சாலை விதிகளை பின்பற்றுங்கள்.. அப்படீனா?.. அதேதான்.. நம்ம கலாச்சாரம்.

ரெட் விழுந்தாலும், முட்டிமோதி, முன்னாடி போய் நிற்கவேண்டும். பச்சை விழுந்ததும் , முதலில் விரட்டும் ஆனந்தம் இருக்கே.. ஆகா.. சொல்லில் வடிக்கமுடியாது. இந்தப் பெருமைய யாரால சார் விட்டுக்கொடுக்க முடியும்.?


அப்புறம் நம்ம அரசியல் கட்சிகள். சாராயம் காய்ச்சியவன், மூஞ்சியில் சாயம் பூசியவர்கள், ஆங்க்.. நம்ம மகளிர் அணி.. அதாவது பிராத்தல் பண்ணிக்கிட்டு இருந்தவங்க எல்லாம் கட்சி, தலைமை, வட்டம், மாவட்டம்னு நுழையராங்களே. எதுக்குனு நினக்கிறீங்க?


மக்களுக்கு நல்லது பண்ணி, சமுதாயம் முன்னேற வேண்டும் என பாடுபடவா? ஊகூம். நமக்கு போஸ்ட் கிடைக்கனும். பணம் சுருட்டனும். பேர் புகழ் வாங்கனும். மறக்காம, வெள்ள சட்டை போடனும். பார்ப்பவர்கள், "வணக்கம் தலைவா"னு கும்பிடனும். அப்பால, சாயந்திரம் ஆனா, தண்ணி இறங்கனும்.( உள்குத்து எதுவுமில்லை சாமிகளா...)

 

இப்படி அடுத்தவர்கள், பிரச்சனைகள , காலடியில் போட்டு மிதித்து, சுயநலனுக்காக, பழகியவர்களையே போட்டு தள்ளும் சமூகத்தில்,  காலாச்சாரம், பண்பாடுனு பேசினா, அய்யோ.. நினைக்கவே பயமாயிருக்கு. அவர்களுக்கு என்ன சார். ஆடும் வரை ஆட்டம்.. அப்பால ஓட்டம்..

இது சரியில்லையா அது.. அது பிடிக்கலையா.. அடுத்தது...


தனிமனித ஒழுக்கத்துடன் இருந்து, நீங்க சொல்லும்படி இருந்தா,  ’எங்கிருந்தாலும், நல்லா இருக்கட்டும்..பாஸ்’

இந்த சமுதாயம் மாறனும். கலாச்சாரம் வளரனும்னு நினச்சீங்கனா.. ஹி..ஹி.. நான் என்னத்தை சொல்ல..

என்னமோ பண்ணுங்க சார்....


 

டிஸ்கி..
இது தாய்குலங்களுக்கு
அம்மணிகளா.. தனிமனித உரிமை, மறுமணம், living Together, உள்ளுணர்வு.....உம்.... எல்லாம் கேட்க, நல்லாத்தான் இருக்கு.
வாழ்க்கை வாழவே.
அதில் எந்த மறுப்பும் இல்லை. 

பெண்கள் ஜாக்கெட் போடக்கூடாது. சுடிதார் போடக்கூடாது, வேலைக்கு செல்லகூடாது.. அப்பபடீனு சொன்ன சமுதாயம், இப்ப மாறியிருக்கு.. நல்ல விசயம்தாம்.
வரவேற்கணும். 

திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது, அவரவர் உரிமை. அதில், என் மூக்கை, நுழைப்பது தேவையில்லாதது.

ஆனா, சக பதிவனா, என்னுடைய கருத்தை சொல்ல உரிமையுண்டு.
“வரக்கூடிய பார்ட்னர், ஒழுக்கமானவனானு பார்த்துட்டு, அப்பால, உங்க பொன்னான முடிவை எடுங்க தாயி..”
பத்து நிமிடம் வேலைய செய்துவிட்டு, பத்து மாதம் பணிச்சுமைய கொடுத்திட்டுப்போக ,பலபேர்.... பலபோர்வையில் சுத்திக்கிட்டு இருக்கானுக.

அப்பால.. ’வாழக்கையை, வாழ்க்கை பூரா தேடும் நிலைக்கு விட்டுட்டுப்போயிடுவாங்க’, நமது சமூக ஆர்வலர்கள்(?) ...
.
.
.

Thursday, November 18, 2010

பொறுத்தார் பூமி ஆள்(ழ்)வார்.

இடம் : சத்யமூர்த்தி பவன்
நேரம் : காலை கருக்கல்

அண்ணே வணக்கண்ணே. நாந்தான் பட்டாபட்டி..


அடடே. வாங்க.. என்னோட அறிக்கைய பார்த்து மெய்சிலிர்த்துதானே வந்தீங்க?.

நீங்க வேற தல. உங்க கட்சிக்கு ஆள் சேர்க்க, யுவராசாகூட நடைப்பயணம் போயிருந்தேன். அப்படியே கஷ்டப்பட்டு 4 பேரை  தேத்தியிருக்கேன். பார்த்துப் பன்ணுங்க.

நாலு பேரா?.. தம்பி உன்னைய மாறி இள ரத்தம் தான் கட்சிக்கு வேணும்.ஆமா இந்த நாலு பேர்கிட்டேயும்  சொல்லித்தானே சேர்த்திருக்கே.

என்னா தலைவா?.. ஏதாவது புதுசா சட்டம் போட்டிருக்கீங்களா?..  சொல்லவேயில்லை..

அது இல்லப்பா. இளங்கோவன் என்னை மதிக்கிறதேயில்லை. சரி.... வயசான கிழடுக. அப்படிதான் இருக்கும்.  ஆனா பாரு.  நேற்று வந்த சின்ன பையனுககூட என்னை மதிக்கமாட்டிங்கிறானுக.

யாரை தலைவா சொல்றே?. நம்ம ராகுல் பயலையா?.

ஆகா.. தப்பு.. தப்பு.. கன்னத்தில போட்டுக்க. அவங்க இல்லேனா, இந்தியாவே இல்லை தெரியுமா?.  சோனியா பரம்பரையே நாட்டுக்காக உழைச்ச பரம்பரை. அவங்க பாதம் இந்த மண்ணில பட்டதாலதான், இந்தியா   புண்ணியபூமி ஆகியிருக்கு..  (சாஷ்டாங்கமாக வடக்கு பார்த்து விழுந்து வணங்குகிறார்.)

அப்படியே, நீயும் விழு தம்பி. போட்டோ எடுத்து , விளம்பரம் பண்ணிட்டா, அடுத்த ஐந்து வருசத்துக்கு யாராலும் அசைக்க முடியாது.

என்னத்த தலைவா அசைக்கமுடியாது?.

இல்ல.. இந்த  தமிழக காங்கிரஸ் தலைவர் பதிவில் நான் இருப்பது ரொம்ப பேருக்கு பிடிப்பதில்லை.  நான் வந்தபின்தான், தமிழகத்திலேயே மழை பெய்தது. ஆனா எல்லாப்பயலும் மறந்துட்டானுக.

சரி அதை விடுங்க தலைவா. கால்ல விழும் காலாச்சாரம் எனக்கு பிடிக்காது. அதுமில்லாம, ரெண்டு நாளா  முதுகுவலி வேற.
இப்ப எதுக்கு , கழிப்பறைய இடிச்சுட்டு இருக்காங்க?.

ஓ. அதுவா தம்பி.. ( ரகசியமாக) கழிப்பிடம் வடக்கு பார்த்து இருக்கு. அப்படி உட்கார்ந்தா, அன்னை  கோவிச்சுக்குவாங்க. மேலும் எங்கள் அன்னை எங்களை..

யோவ்.. விடுய்யா.. எரிச்ச மயிறா வருது.. சரி . உங்க அன்னை இருக்கும் திசை பார்த்து கக்கூஸு போகமாட்டே.அதுதானே மேட்டரு. விட்டுத்தள்ளு. வேற ஏதாவது புதுசா விசயம் இருந்தா சொல்லு.

தம்பி கோபமாயிருக்குறமாறி தெரியுது. . நேற்று என்னோட அறிக்கைய படிச்சீகளா?. கஷ்டப்பட்டு நாலு மாசம் உட்கார்ந்து, யோசனை பண்ணி, பக்காவா அறிக்கை விட்டிருக்கேன். இனி ஒரு பயலும் என்னை அசைக்கமுடியாது.

அப்புறம்..ராசாவ கழட்டி விட்டாச்சு. அம்மா அறிக்கை விட்டாச்சு. உம். அடுத்த நாடகத்தை பார்க்க தமிழக  மக்கள் துண்டப்போட்டுக்கிட்டு ரெடியாயிட்டானுக. சரி  யாருகூட கூட்டணி?.

அதாவது எங்கள் அன்னை யாரை கை காட்டுகிறார்களோ, அவர்களுடந்தான் கூட்டணி. எங்கள் அன்னை எங்கள்  தெய்வம். எங்கள் தெய்வம் பெற்றெடுத்த சின்ன தெய்வம் ராகுல் காந்தி. அவர் கண் காட்டினால், தமிழகத்தில ஆட்சி மாற்றம் ஏற்ப்படும். மேலும் எங்கள் தெய்வம்.................


யோவ்.. Stop.. Stop..என்னால சத்தியமா முடியலே. ஒரே தெய்வங்களா இருக்கு.. சத்தியமா இந்தியா புண்ணிய பூமிதான்.

தம்பி. கடைசியா எங்களை நல்லா புரிஞ்சுக்கிட்டீங்க. அப்படியே அந்த உறுப்பினர் அட்டையில ஒரு கையெழுத்தை மட்டும் போட்டுட்டீங்கனா, மீதிய நான் Fill பண்ணுக்குவேன்.

வெண்ணை.. உயிரை குடுக்க சொல்லு. கொடுக்கிறேன். ஆனா, உங்க கட்சீல மட்டும் சேரமாட்டேன்.  சுதந்திரம் வாங்கிதந்து(?), நாட்டை, ஆளு..ஆளுனு ஆண்டுக்கிட்டு. இன்னும் கூசாம, இந்தியாவை வல்லரசு  ஆக்குவோமுனு கூவிக்கிட்டு இருக்கீங்களே. நான் என்ன மூளை இல்லாத மடையனா?.
இங்க பாரு .. வளவளனு பேசாம அந்த அறிக்கைய கொடு. பப்ளிஸ் பண்ணிட்டு பொழப்ப பார்க்கப்போறேன்.
--------------------------------------------------------------------------------------------------------
பின்வருவது அண்ணன், ஆருயிர் தலைவன், தெய்வம் பெறாத பிள்ளை கொடுத்த அறிக்கை.  பூசை அறையில்  வைத்து, இதை மூணு வேளை நாள் தவறாது சொல்லி வந்தால், இந்தியா வல்லராசுக் காலம் விரைவில  வந்துவிடும்..
--------------------------------------------------------------------------------------------------------


//
  • சோனியா காந்தி பிரதமர் பதவியையே ஏற்க மறுத்து தியாக உணர்வோடு மக்கள் பணியாற்றி வருபவர். குறிப்பாக  இலங்கை தமிழர்களை பாதுகாக்கும் பாசமிகு தாயாக செயல்பட்டு வரும் நிகரற்ற தலைவியாவார்.


  • இலங்கைப்போர் நிகழ்வுகள் தொடங்கிய காலத்திலும், அது நடைபெறும் நேரத்திலும் அது முடிவுக்கு வந்து சுமூக சூழ்நிலை முழுமையாக உருவாகப்போகும் இன்றைய காலக்கட்டம் வரை அனைத்து நிலைகளிலும் சோனியாகாந்தியின் மனிதாபிமான வழிகாட்டுதலில் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அரசு எடுத்ததொடர் நடவடிக்கைகளை  தமிழக மக்களும், இலங்கைவாழ் தமிழர்களும் ஒருபோதும் மறந்திருக்க மாட்டார்கள்.

  • போர் நிறுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி 2009-ம் ஆண்டு ஏப்ரல் 27-ந் தேதி தமிழக முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற உண்ணாநோன்பிலும், அதே ஆண்டு பிப்ரவரி மாதம் 7, 8, 9-ந் தேதிகளில் நடைபெற்ற பேரணி, பொதுக்கூட்டங்களிலும் பங்கேற்க வேண்டும் என்று சோனியா காந்தி அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு காங்கிரஸ் தொண்டர்கள் பங்கேற்றனர்.

  • சோனியாகாந்தியின் வழிகாட்டுதலில் மத்திய அரசு 800 டன் உணவு, மருந்து மற்றும் அத்தியாவசிய  பொருட்கள் 4-11-2008 அன்றும், 9-3-2009 அன்று 25 டன் மருந்து பொருட்களுடன் டாக்டர்கள்,  செவிலியர்கள் உள்பட இந்திய மருத்துவக்குழு இலங்கை போர் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு இலங்கை  தமிழர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

  • போர்க்காலத்தில் அங்கு உணவின்றி தவித்த இலங்கை தமிழர்களுக்கு சோனியா காந்தியின் ஆணைகேற்ப கடந்த  16-4-2009 அன்று அரிசி, பருப்பு, மருந்து மற்றும் துணிமணிகள் ஆகிய நிவாரணப்பொருட்கள்  வழங்கப்பட்டன.

  • இலங்கைத் தமிழர்களை காப்பாற்ற அங்கு போர் நிறுத்தம் வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங் இலங்கையில்  நடைபெற்ற சார்க் மாநாட்டின் போது அதிபர் ராஜபக்சேவிடம் நேரிலும், மீண்டும் தொலைபேசி மூலமும்  இரண்டுமுறை பேசினார்.

  • இந்திய வெளியுறவுத்துறை மந்திரி பிரணாப் முகர்ஜி, இலங்கைக்கு நேரடியாக சென்று அதிபர் ராஜபக்சேவை  சந்தித்து, `இலங்கையில் போர் நிறுத்தப்பட வேண்டும். அப்பாவி தமிழர்களுக்கு பாதுகாப்பு வேண்டும்' என்று  வலியுறுத்தினார். அதையொட்டி 48 மணி நேரத்தில் போர் நிறுத்தம் செய்யப்பட்டது.


  • இலங்கையில் அமைதி நிலை உருவாக வேண்டும், அதற்கிடையே போரில் அல்லல்படும் இலங்கை தமிழர்களின்  துயர் துடைக்கப்பட வேண்டும் என்பது போன்ற நடவடிக்கைகளில் மத்திய அரசு எடுத்த ஒருசில நடவடிக்கைகளை மட்டுமே நினைவுபடுத்தியுள்ளேன்.

  • அதைத்தொடர்ந்து போர் நிறுத்தப்பட்டு அங்கு அமைதி சூழல் உருவான நிலையில் அங்குள்ள தமிழர்களின் புனர்வாழ்வுக்கு மத்திய அரசு சார்பில் 5 ஆயிரம் கோடி ரூபாயை வழங்கியிருக்கிறது என்பதை நாடறியும்.


  • வீடிழந்து, உணவின்றி தவிக்கும் இலங்கை தமிழர்களுக்கு, அங்கு 50 ஆயிரம் வீடுகள் கட்டித் தரும் பணி  விரைவில் தொடங்கும் என்ற செய்தி அண்மையில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.


  • இலங்கை போர்க்காலம் தொடங்கி, அது நின்றதற்கு பின்பு இதுவரை மனிதாபிமான உணர்வோடு மத்திய அரசால்  நடைபெற்று வரும் இலங்கை தமிழர்களின் மறுவாழ்வு திட்டங்கள் அபரிமிதமாக தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருகின்றன.


  • அங்கு விடுதலைப்புலிகளின் பிரச்சனை உக்கிரம் அடைந்த கடந்த 1983-ம் ஆண்டு முதல் இந்திராகாந்தி,  ராஜீவ்காந்தி, பிரதமர் நரசிம்மராவ் ஆகிய தலைவர்களின் காலங்களில் இலங்கை தமிழர்களுக்கு வாழ்வுரிமையை பெற்றுத்தரும் பணிகளில் உலகளாவிய அளவில் எத்தனை எத்தனை நடவடிக்கைகளை செயல்படுத்தி வந்தார்கள்  என்பது வரலாற்றில் மறைக்க முடியாத அத்தியாயங்கள்-சாதனைகள்.


  • ராஜீவ்காந்தி-ஜெயவர்த்தனே ஒப்பந்தம் இலங்கை தமிழர்கள் வாழ்வை பாதுகாக்கும் அரணாக உருவாக்கப்பட்டது. ஆனால் வைகோவின் பிதாமகன்களான விடுதலைப்புலிகளின் தடையால் அது நிறைவேறாமல் போனது.


  • இலங்கை தமிழர்களின் வாழ்வுரிமைக்காக போராடிய விலைமதிக்க முடியாத தலைவர் ராஜீவ்காந்தி அவர்களை  தமிழின துரோகிகளால் பறிகொடுத்தோம். இன்றைக்கு சோனியா காந்தி பிரதமர் பதவியையே ஏற்க மறுத்து தியாக  உணர்வோடு மக்கள் பணியாற்றி வருபவர். குறிப்பாக இலங்கை தமிழர்களை பாதுகாக்கும் பாசமிகு தாயாக  செயல்பட்டு வரும் நிகரற்ற தலைவியாவார்.


  • அரசியல் நடத்த வேறு வழியோ, கொள்கையோ இல்லாத நிலையில் இலங்கை தமிழர் ஒன்றை மட்டுமே வைத்து  தமிழின மக்களுக்கு விரோதமாகவும், எஞ்சியிருக்கும் தமிழர்களை காப்பாற்றும் மத்திய அரசு நடவடிக்கைகளுக்கு எதிராகவும் பேசி செயல்படுகிற வைகோவுக்கு சோனியா காந்தியை பற்றி பேச எவ்வித அருகதையும் கிடையாது.


  • தமிழர்களின் வாழ்வுரிமைக்காக போராடிய தலைவர் ராஜீவ்காந்தி அவர்களை கொலை செய்த கொலையாளிகளுக்கு துதிபாடும் வைகோ போன்றவர்கள் இலங்கை தமிழர்களுக்கு மட்டுமல்ல, தமிழக மக்களுக்கு கூட எதையும்  செய்யும் வாய்ப்பற்றவர்கள் என்பதை மக்கள் அறிவார்கள்

//


 டிஸ்கி.
நாளைபின்னே, இந்தியா ஏன் முன்னேறலேனு கேள்வி கேட்பவர்களுக்கு..

யோவ்.. மூணு வேளை பூசை பண்ணுங்கனு அண்ணாரு சொல்லியாச்சு. அதை ஒழுக்கமயிரா பண்ணினா,  இந்தியா முன்னேறும்.  இல்லே.. பிரியங்காவோட சின்ன தெய்வங்களோ, இல்லை ராகுல்க் காந்தியோட, சின்ன   தெய்வங்களோ வந்து இந்தியாவை வல்லரசு ஆக்கும் வரை பொறுத்துக்குங்க..

பொறுத்தார் என்னத்தை ஆள்வார்....

ஆம்..           பூமியை ஆள்வார்....


( சரியா சொன்னவங்க, அப்படியே அந்த காங்கிரஸ் உறுப்பினர் அட்டைய எடுத்து பூர்த்திசெய்து அனுப்புங்க. அதில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும், அந்த நாலு(?) பேருக்கு, ராகுல் காந்தி கைப்பட எழுதிய, “பரதேசி மக்களும், பார்புகழ் காங்கிரஸும் “ என்ற  புத்தகம் வழக்கப்படும்)


மேலும் குலுக்கல் நடைபெறும் நாளன்று, அன்றைய அரசியல் நிலவரப்படி அன்னையுடன், அம்மாவோ அல்லது,  கருநா ணாநிதியோ கை கோர்த்து மக்களுக்கு காட்சி அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முந்துங்கள்.. உறுப்பினர் அட்டையை பூர்த்தி செய்யுங்க.. அன்னைய ஓட்டிச்செல்லுங்கள்... சாரிப்பா.. அன்னையின் அன்பைப் பெற்றுச்செல்லுங்கள்...

(இளங்கோவன் அவர்களுக்கு.... தங்கபாலுக்கு சனி சங்கோட நிற்குது சார்.. அவர் அறிக்கையில், உங்கள் அன்னையை,  தெய்வம் என்று குறிப்பிடாமல், பேரை சொல்லியிருக்காரு.. உம்.. போர் முரசு கொட்டுங்கள்.. வாழ்க தமிழமக்கள்.. வளர்க இந்தியா...)

.
.
.

Friday, November 12, 2010

டோமர் ஸ்பெஷல்

வணக்கம் பதிவுலக நண்பர்களே.

மூடிட்டு என்னோட வேலைய பார்த்துக்கிட்டு இருந்தா, ஆடி அடங்கின பெருசுகளுக்கு, அரிக்கும்போல.

என்னடா.. வரவர டோமர்மாறி பேசறேனு நினக்கும் சக பதிவர்களுகளான உங்களுக்கு.....

வணக்கம் அண்ணாத்தே.  நாந்தான் பட்டாபட்டி.. ஆங்.. ஞாபகம் வந்திருக்குமே.


அதே..
கொஞ்ச நாளா ஆணீ அதிகம்.. சரி.. , பொழப்ப பார்க்கலாமுனா,   ங்கொய்யாலே.......சொறிஞ்சுவிடராங்க.. யாரா?..

வேற யாரு?..
நம்ம டோமருதான்...


அய்யா மயி^%$ருகளா..இந்த ஹிட் ரேட், ப்லோயர் ,  ஓட்டு, கமென்ஸ்சு.. யோவ்..  நாங்க என்ன அலையிரமோனு நினச்சீங்களா.

எங்க முழுநேரத் தொழில் இது. மேலும் இதை வெச்சு சம்பாரிச்சு, ஆங் .. கார் வாங்கி , அதை ஓட்டத்தெரியாம(?) டிரைவர் வைத்து, சுத்தும் பன்னாடைகனு நினச்சியா?  (இங்கு கார் எனக்குறிப்பிடுவது, நான்கு சக்கரம் உள்ள வாகனம் என்பதை குறிக்கும். வாசகர்கள் மனதில் வேறு தீய எண்ணங்கள் தோன்றினால, எங்கள் குழு பொறுப்பில்லை-  ஆசிரியர்)



அனானி ஆப்ஷன், ம%$யிரு ஆப்ஷன்னு போட்டுக்கிட்டு, குண்டி குளிர்ந்திருந்தா பப்ளிஸ்  பண்ணுவேன். இல்லாட்டி, மட்டறுப்பேனு , கதறிக்கிட்டு இருக்கு.

நீ கேள்வி கேளு, பதில் சொல்லு.. ஆனா என்ன ம%$#யிருக்கு, எங்க பேரை இழுக்கிறே?...இதுல நாங்க கெட்ட வார்த்தை பேசறமாம்.. இவரு வாயில, சந்தனமா ( அதாம்பா.. மஞ்சக்கலர்ல இருக்குமே..அதுதான்..) வருமாம்..

இதோ...அந்த பன்னாடை போட்ட  கமென்ஸ்


//
பிறரைத் தாக்கி வரும் கேள்விகளை கேட்பவர்கள் ஊர் தெரிந்த பதிவர்களாக இருப்பது அவசியம். ஏனெனில் அவர்கள் அசிங்கமாக எல்லாம் திட்ட மாட்டார்கள் -
பட்டாப்பட்டி, வெளியூர்காரன், மங்குனி அமைச்சர், கும்மி, பன்னிக்குட்டி ராமசாமி போன்ற சில விதிவிலக்குகளைத் தவிர்த்து, என நம்பப்படுகிறது.
//


//
@வெளியூர்க்காரன்
முதல் தடவை வரும்போதுதான் ஹிட்ஸ்வ் ஏறும், அதே தினம் மறுபடி அதே ஐபிலேருந்து வந்தா ஹிட்ஸ் ஏறாதுன்னு கூட தெரியாத கபோதிக் கொசுவா நீர்?
டோண்டு ராகவன்
//


அதுமட்டுமா?.. இதோட கொ%$^#ட்டைதாங்கி ..  அதாங்க.. காயடிப்பவன்.. அதுபோயி டோமர் ப்ளாக்ல வாந்தியெடுத்து வெச்சிருக்கு.. அதை பப்ளீஸ் பண்ணிட்டு, இந்த நாதாரி... காந்தி மாறி  வேஷம் கட்டுது....
நீங்களே பாருங்க..

Anonymous //
கம்யூனிஸ்டுகளைக் காயடிப்பவன் said...
இந்த பட்டா பட்டி, நாடா ஜட்டி, பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி... எல்லாம் சமீபத்தில் ஐயர் வெச்சு தாலிகட்டிய பகுத்தறிவுவாதி மற்றும் அந்த பகுத்தறிவுவாதியின் வால்ரா ச்சீ ஜால்ரா கோஷ்டி போல் தெரிகிறது. உடம்பில் உள்ள ஒன்பது ஓட்டைகளில் ஆப்பு வைத்தும் அவிங்களுக்கு லூஸ் மோஷன் நிக்கவேயில்லை. பயங்கரமான பகுத்தறிவு இன்ஃபெக்ஷன் ஆயிப்போயிருச்சு.

//

ஒன்பது ஓட்டையும் அடச்சிட்டா, நாங்க அப்படி கக்கா போறது.. பார்த்து தயவு பன்ணி, உன்னோட அல்லக்கைக்கு சொல்லு சாமி..
வேற வழியே இல்ல.. முடியலேனா....அங்க வந்து, வாயிலதான் போவோம்..

அப்புறம் நாறுது.. பெனாயில் போட்டு கழுவனும்.. அப்படி இப்படினு சவுண்டி(?) மாறி பொழம்பினே, எனக்குத்தெரியாது.....சொல்லீட்டேன்..


வெண்ணை.. எழுது .. இல்ல  வாந்து எடு... இல்ல கோமணத்தை கட்டிக்கிட்டு நாட்ட திருத்து.. ரொம்ப முடியலையா?. பேப்பரும், பேனாவும் ( அந்த(?) பேனாவ சொல்லலே.. எழுதுற பேனா). எடுத்துக்கிட்டு , யாராவது கல்யாணத்துக்குப்போ.. போற வரவனையெல்லாம், கேள்வி கேட்டு சாக அடி..

என்னா கேள்விகளா?...

உம்..
1. நேற்று , ராத்திரு தூங்கும்போது, காற்று பிரிஞ்சது வலது பக்கமா?.  இல்ல இடது பக்கமா?..

2. எழுதாத பேனாவை எங்கு வைப்பீர்கள்?

3. முக்கும்போது ரத்தம் வந்தா, மூஞ்சிய  எப்படி வைக்கனும்?.


ஆன்மீகத்திலிருந்து , எந்த நாதாரிக்கும் புரியாம, காப்பி, பேஸ்ட் பண்ணிப்போடு..   படிச்சுட்டு , ஆஹா.. பேஸ்..பேஸ்.. ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க..   தொடர்ந்து  சொல்லுங்க-.னு நாலு பேரு வருவானுக..
நீயும் வேட்டிய மடிச்சுக்கட்டிட்டு, நாலா பக்கமும் பார்த்து, பெருமையா.. அதாவது சமீபத்தில 1934-ல் ஆரம்பி..
அவனும் , அவனுது வேட்டியில சீறுநீர் கழிவதைப்கூடப் பார்க்காம, உன்னோட பல்லு ஆடும் அழகைப் பார்த்துக்கிட்டு இருப்பான்.
அப்பால ரெண்டு பேரும், அடுத்து எவனை, இழுக்கலாமுனு டிஸ்கஸ் பண்ணிங்க...



போங்கய்யா..போய் வேற எவன சீண்டலாமுனு பாரு..
வந்துட்டானுக...


ஆங்.. சொல்ல மறந்துட்டேன்.

இந்த கோட்டுக்கு கீழ நீ படிக்காதே..
ஏன்னா இது மனுசப்பயலுகளுக்கு சொல்லப்போறோம். உமக்கு , பக்கத்தில ஏதாவது  இருக்கும். அங்க போயி காலை தூக்கிட்டு, பொழப்ப பாரு...


-----------------------------------------------------------------


இங்கு கேள்விகள் கேட்கலாம். ஆனால் அது விதிமுறைக்கு உட்பட்டதாக இருக்கவேண்டும்.

1. கேள்விகள் நாயைப்பற்றியோ, அல்லது டோமரைப்பற்றியோ மட்டுமே இருக்கவேண்டும்.

2.அனானியாகவும் கமென்ஸ் போடலாம்.

3. கெட்ட வார்த்தைக்ள் இருந்தால், அறுக்கப்படும்.. அதாவது மட்டறுக்கப்படும்.
.
.
.

Wednesday, November 10, 2010

வெல்டன் கோவை போலீஸ்

முதலில் உங்களுக்கு எங்களுடைய  நன்றிகள்.





நீங்கள் சுட்டது, ஒரு மகானையோ, இல்லை மனிதனையோ இல்லை.
மனித உருவில் உள்ள மிருகத்தைதான்.

குழந்தைகள் புகைப்படத்தை பார்க்குபோது மனம் பதைபதைகிறது.
இப்படி குரூரமாக , குழந்தைக்ளை கொன்றது  மன்னிக்கமுடியாத குற்றமே.


இவ்வளவாவது மனசாட்சியுடன் காவல்துறை செயல் பட்டது பாராட்டப்பட வேண்டிய விஷயம். இந்த மாதிரி மனசாட்சியே இல்லாமல் குழந்தைகளைக் கற்பழிப்பது, கொல்வது போன்ற காட்டுமிராண்டித்தனமான செயல்களில் ஈடுபடும்,  வெறி நாய்களுக்கு,  நீங்கள்அடிக்கும் சாவுமணியாக இருக்கட்டும்..

தொடரட்டும் உங்கள், களை எடுக்கும் பணி..


ஆனாலும், இந்த கடத்தலுக்கு பின்னால் மறைந்துள்ள மர்ம முடிச்சுக்களை, அவிழ்க்கவேண்டிய கடமையும் உங்களுக்கு உள்ளது.

வெல்டன் போலீஸ்...

Tuesday, November 9, 2010

ச்சின்னப்பையன் – வா.வ*1

.

.

.

வணக்கம் சார். என்பேரு மயில்சாமி. படிச்சது 10ஆவது. சரி விடுங்க. படிக்க ஆசைப்பட்டது 10ஆவது. ஆனா இந்த பாழாப்போன படிப்புக்கும் எனக்கும், கலைஞருக்கும் , ஜெயலலிதாவுக்கும் இருக்கும் நெருக்கம். எங்கப்பன் இருக்காரே. அவருதான் சார் நான் படிக்காமபோனதுக்கு முக்கிய காரணம்.


நீங்களே சொல்லுங்க சார். காலையில எந்திரிச்சதும், பல்லு விளக்கிட்டே.. அட... எங்கப்பனை சொல்றேன் சார். பல்லு விளக்கிட்டே, எங்கம்மாவை பாத்து, "அந்த கேணப்பொ%$#ச்ச எழுப்பு. வெயில குண்டில அடிச்சாலும் 'பப்பரப்பா'-னு தூங்கரான் பாரு"னு காறீத்துப்பும். கரெக்டா அந்தநேரம்தான் சார், அஸின் எங்கிட்ட 'ஐ லவ் யூ' சொல்ல, ஓடி வந்துக்கிட்டு இருக்கும். எங்கப்பன் துப்புற சவுண்ட் கேட்டதும், அப்படியே யூ டர்ன் பண்ணிக்கிட்டு, தலைதெறிக்க திரும்பி ஓடிடும். இல்லே.. தெரியாமத்தான் கேட்கறேன். நானும் மனுசந்தானே. எனக்கும் 'ஐ லவ் யூ டூ' சொல்ல ஆசை இருக்காதா?.


ஆனா ஒண்ணு பாஸ், எல்லா அப்பனும் ராட்சனுக. 'படி..படி'னு தினமும் காலையில சுப்ரபாதம் பாடினா, எப்படி சார் படிக்க?. எங்கம்மா எங்கிட்ட வந்து, 'ராசா... எந்திரிய்யா... ஸ்கூலுக்கு டைம் ஆச்சு..... இந்தா காப்பி....'-னு எழுப்பும். அதத் தாங்காம எங்கப்பன் குதிப்பாரு பாருங்க மேலேயும் கீழேயும்.... 'ஒருகூடை சாணிய கீழே வெச்சிருந்தா, வரட்டியாயிருக்கும்'.


இப்ப ஓரளவுக்கு என்னைப்பற்றி புரிஞ்சிருக்குமுனு நினைக்கிறேன். அதேதான் சார். நீங்க நல்லவரு, அதனாலத்தான், என்னையும் நல்லவருனு நினைக்கிறீங்க. அடிச்சு புடிச்சு எழுந்து, 6 இட்லி, 2 பொங்கல், சூடா பில்டர் காபினு லைட்டா சாப்பிட்டுட்டு, பேக்கை எடுத்து 'பேக்'-ல மாட்டிக்கிட்டு, சைக்கிள எடுப்பேன் பாருங்க. சரியா சின்ராசு வந்துருவான்.


பள்ளியை நோக்கி, நீண்ட பயணம் ஆரம்பிக்கும். இப்பவும் எங்கப்பன் உறுமிக்கிட்டே இருக்கு. ஒருவேளை பைல்ஸ் இருக்குமோ என்னவோ?. எரிச்சல, எப்பப்பாரு என்கிட்டையே காட்டிக்கிட்டு இருக்கு. பைக் வாங்கிக்கொடுத்தா சொத்தா அழிஞ்சிரும்?. வெண்ணைக சார் இந்த பழைய ஜெனரேஷன், அதுக்கும் ஓட்டத்தெரியாது. ஓட்ட ரெடியா இருப்பவனையும் ஓட்டவிடாது. நானும் பெரியவனாகி, பைக் வாங்கி, அஸின பின்னாடி உக்காரவெச்சு, இதே ரோட்டுல, 80கிமீ ஸ்பிட்-ல போகப்போறேன் சார். 'நம்பிக்கைதானே வாழ்க்கை.'


சரி. சரி..'ங்கே'-னு முழிக்காம, சீக்கிரம் வாங்க. பஸ் வரும் நேரமாச்சு. ஏன்னா நான், 'பஞ்சுவாலிட்டி மெயிண்டெய்ண்' பண்ணுவதில் 'பெஸ்ட்'-னு அகிலாவும், அதுகூட ஈஞ்சலா ஒரு சப்ப பிகரு இருக்குமே. அதுவும் சொல்லியிருக்கறதா சின்ராசு சொல்லியிருக்கான். ....ம்... அதுகளுக்குத் தெரியுது. எங்கப்பனுக்கு?. தூத்தேரி.


அப்பாடா, பஸ் வந்திருச்சு. என்னைப் பார்க்காத மாறியே, ஓரக்கண்ணுல, குனிஞ்சுக்கிட்டு, என்னைய பார்க்குது பாருங்க. அதுதான் என்னோட டாவு. என்னாது? தெரியலையா.. யோவ்.. கடைசி சீட்ல செகப்பா மெல்லிசா, கையில கண்ணாடி வளையல் போட்டுக்கிட்டு, காதில ஜிமிக்கி.. ஹி.ஹி . அதேதான். அவங்கப்பன் இருக்கானே. அது ஒரு டோமரு சார். டெய்லி தண்ணிய போடவேண்டியது. சலம்ப வேண்டியது. ரோட்ல போறவரவனையெல்லாம் வம்புக்கு இழுக்கும். அப்பால எங்க மாமியார்காரி, அவரோட கழணடு விழுந்தவேட்டிய தேடிக்கிட்டு, வீதிவீதியா அழையும். அதப்பார்த்தா, எனக்கு கோவத்துல கண்ணுல சிவந்து, தண்ணியா வடியும் சார். மாமியார்காரி முன்னாடி அழக்கூடாதுனு அப்படி ஒரு வைராக்கியத்தில அடக்கீட்டு  (கோவத்தை இல்லை பாஸ். கண்ணீரை சொன்னேன் ) போயிடுவேன். அந்த கோபம், இன்னும் என்னுடைய மனத்தில் சுழண்டுக்கிட்டே இருக்கு.


சரி பஸ் போயிடுச்சு. லைட்டா சாப்பிட்டா, இதுதான் பிரச்சனை. வாங்க டீக்கடைக்கு போவோம்.

ஸ்கூல் பெல் அடிக்குதா?. அட விடுங்க.. இதெல்லாம் பழகிப்போச்சு சார். டென்ஷன் ஆவாதீங்க. ஆங். நாம எங்க விட்டோம்?. ( யோவ். சிரிக்காதீங்கய்யா. அப்படியெல்லாம் சொல்லமாட்டேன்..ஹி..ஹி ). "கோபம்".. மனுசனுக்கு எரிச்சல், பொறாமை, பொச்%$#^சரிப்பு.. எதுவேணா வரலாம் சார். கோபம் மட்டும் ஆகாதுனு எங்க கணக்கு வாத்தி, பிரம்பெடுத்து, நொங்கிக்கிட்டே சொன்னது, உஷ்... பின்னாடி வலிக்குது பாஸ். என்னா அடி.? ஒவ்வொண்ணும் ..ம்......


குயிக்.. குயிக்..எங்கப்பன் வேலைக்கு போகும் டைம் ஆச்சு.. அப்படியே, கீத்துக்கு பின்னாடி மறைஞ்ச மாறி நில்லுங்க.. இல்லாட்டி, ஸ்கூலுக்கு ஏண்டா போகலே?னு, ரோடுனு பார்க்காம, அடிக்கும்.




டிஸ்கி 1

”இந்த தொடரை எழுதும் பன்னாடை யாரு?”னு கண்டுபிடிப்பவர்களுக்கு, 1 ஏக்கர் நிலமும், நாலு பாட்டில் ஊறுகாயும் கொடுத்து, அந்தச் சப்ப பிகரப்பற்றி சொன்னமே. அவங்கப்பன் கவுன்சிலர். அதை கட்டிக்கொடுத்து, வீட்டோ மாப்பிள்ளையாக்கி, என்னும் என்னென்னமோ இருக்கு.. அடுத்த பதிவுல பாருங்க...

.

.

.

Thursday, November 4, 2010

துவையல்

இந்த வார துவையல்.

டோமர்

தனக்குத்தானே இரங்கல் செய்தி வெளியிட்டு, சுயசொறிதல் செய்துகொண்டு இருக்கிறது.

அடுத்த ஜென்மத்திலாவது, மனிதனாக பிறக்க(?) வாழ்த்துகிறோம்.

இங்கனம்

முரளி மனோகரின் கோமணத்தை கழட்டுவோர் சங்கம்.



வெண்ணிற இரவுகள்

பேசாம, அவளோட ராவுகள்னு பேரை வைத்து, ஷகீலா அக்குளில், மச்சம் உள்ளாதா?. இல்லையா ? என்று பதிவு போட்டால், ஹிட் ரேட் நிச்சயம்,

மதுரை கிருஷ்ணன், மனம் நலம் தவறியவர்களுக்கு, உதவி செய்த்தை பற்றி பரவலாக பல பதிவுகள் வெளியாகிக்கொண்டு இருக்கிறது. நம்மால் முடியாத்தை , ஒரு தனி மனிதன் செய்வதை பார்த்து ஆச்சரியப்பட்டு, தோள் கொடுப்பதை விடுத்து, அதிலும் போய் வாய் வைக்கிறார் அந்த பதிவர்.

உண்மையாகவே இவர்கள் மனிதர்கள்தானா?..



மற்றவர்களுக்கு


ஹி..ஹி


தீபாவளி வாழ்த்துக்கள்.


குடியும் குடித்தனமாக,  விடுமுறையை கழியுங்கள்.



என்ஜாய் மக்கா....



 

Wednesday, November 3, 2010

கல்மாடியை காப்போம்.. வாருங்கள்..

.
.
.
.
டொக்.. டொக்..
டொக்..
.
டொக்..
டொக்..டொக்..டொக்..டொக்..டொக்..
.
டொக்..

எவண்டா அவன் இந்த நேரத்தில் கதவை தட்டுவது?.  நாதாரிகளா.  மனுசனை நிம்மதியா தூங்கவிடுங்கடா.

முதலாளி, நாந்தான்...  நீங்கதான் என்னை காப்பாற்றனும். சுக்கு மாணிக்கம் அண்ணன், என்னை கிழி கிழினு  கிழிக்கிறாரு.

அடடே. அவரு நல்லமனுசனாச்சே.  அப்படியெல்லாம் பண்ணமாட்டாருயா. காலங்கார்த்தால அவதூறூ சொன்னா, எனக்கு கைகால் நடுங்குமேய்யா.

இல்லேண்ணெ. நான் ஊழல் பண்றேனு பதிவு எழுதி, போனமாதம் என் மானத்தை கப்பலேத்திட்டார். சரினு  என்னோட வேலைய பார்த்துக்கிட்டு இருந்தேன், நேற்று திரும்பவும் சீண்டராருண்ணே.

ஓ. அதுவா மேட்டரு. ஆமா நீ என்னமோ ஊழல் பண்ணி, பேரை  கெடுத்துட்டேனு சொன்னாரு.?

இல்லேண்ணே. நாட்டுக்காக , 5 கோடி சேமிச்சதை யாரோ தப்பா அவருகிட்ட சொல்லீட்டாங்க.

அடங்கோ%$^#த்தா. பண்றதை பண்ணீட்டு இப்ப நொண்ண நியாயம் பேசறீயா?.
வரவர டோமர் மாறியே ஆரம்பிச்சுட்டீங்கப்பா. சரி. என்ன ம^&$யிரு, பண்ணி 5 கோடிய சேமிச்சே?.

அண்ணே. அவனுக Quotation கொடுத்தது 117கோடின்ணே.... நான், ’ இந்தியா ஏழைநாடு. சோற்றுக்கே வழியில்லாம ரொம்பபேர் இருக்கோம். அதனால கொஞ்சம் குறைச்சுகொடுங்க’-னு வாதாடி 112 கோடிக்கு பேரம்  முடிச்சேன். அண்ணே. அண்ணே.. பாருங்கண்ணே. யாரோ காறித்துப்பறாங்க.

அட விடுய்யா.. நம்ம சகபதிவர்கள் யாராவது இருக்கும். ’பேரு சொல்லாம , கதை சொல்லிக்கிட்டு  இருக்கான் பாரு’-னு துப்பியிருப்பானுக.


[ இவரு பேரு கல்மாடி. சமீபத்தில நடந்த காமன்வெல்த் போட்டிகளில் ஊழல் செய்ததாக, அவர்மீது அவதூறு  கூறியுள்ளதால், மனமுடைந்து, இங்கு வந்துள்ளார்.. ]


யோவ்.. இனிமேல துப்பக்கூடாது சொல்லீட்டேன். . நீ சொல்லு களவாடி..






அண்ணே. கல்மாடிண்ணே..

ஆங்.. ஆமா.. கல்மாடி. ஆமா, இந்த பிரச்சனைக்கு, என்னைய எதுக்குய்யா பார்க்கவந்தே?.

ஹி..ஹி நீங்க எந்திரன் பார்த்தீங்கள்ல. அதனால, நீங்களும் நானும் சொந்தகாராரு ஆயிட்டோம்.

ஏய்..ங்கொய்யாலே. படம் பார்த்தா, சொந்தக்காரருனு சன் டீவிக்காரனுக சொன்னானுகளா?.

இல்லண்ணே.  சோனியா அம்மாவுக்கு என்னை பிடிக்கும். சோனியா அம்மாவும் அமிதாப் அண்ணனும் குடும்ப நண்பர்கள். ஒரு வீட்டுல சாப்பிட்டுட்டு, அடுத்த வீட்டில கைகழுவுவாங்க.  அவருக்கு பிடிச்சது அவங்க மருமக. அதுக்கு பேரு ஐஸ்.  ஐஸ்க்கு ரஜினிய ரொம்ப புடிக்கும்.
உங்களுக்கு ரஜினிய அப்பப்ப பிடிக்கும். அப்ப நாம சொந்தக்காரங்கதானே..

அட்ங்கொய்யா.. நீ பொழைச்சுக்குவ மேலமாடி..
சரி..சரி.. மேல சொல்லு.....மேல சொல்லு.....( சரி..சரி.. விடுங்கய்யா.. இனிமேல பல்லு  தெரியாம சிரிச்சு பழகிக்கிறேன்.)

அண்ணே. நான் நல்ல மனுசுக்காரண்ணே. ஆஸ்திரேலியாகாரனுக Quotation கொடுத்தபோது ”12-”  கோடினு கொடுத்தானுக. இந்திய பண்பாட்டுப்படி ”1” க்கும் “7”க்கும் வித்தியாசம் தெரிய “7”-ல் ஒரு கோடு  போடுவமில்ல. அப்படிபோடாம, கொடுத்ததாலே, நாந்தான் அவங்ககிட்ட மாற்றச்சொன்னேன்.

என்னானு?

”12-” கோடிய,  ”127” கோடியா. அதப்பார்த்த அவங்க சேர்மன் உடனே யாருக்கோ போன் பண்ணி, BMW  கார் பரிசா கொடுத்தாருண்ணே. அதப்போயி எல்லோரும் ஊழல், ஊழல்னு சொல்றாங்க. என்னோட மனசு  எவ்வளவு பாடுபடும்?

இதுதான் பிரச்சனையா?. ஆமா டாய்லெட் டிஸ்யூ பேப்பர்ல ஊழல் பண்ணி, பொழப்புல மண்ண போட்டுட்டீங்கனு சின்ராசு கடுப்பா இருந்தான். ஏன்?.

அதுதாண்ணே நான் பன்ணின தப்பு. டிஸ்யூ பேப்பர்தானே. தொடச்சு தண்ணில போட்டுட்டா,  காணாமபோயிடுமேனு, அதுல கொஞ்சம் காசு பார்த்தேன். பயபுள்ளைக அதையும் கண்டுபிடிச்சுட்டானுக. அதுக்குதான் உங்களை பார்க்கவந்தேன்.

யோவ்.. நீ ஒரு மடக்கூ^%73யா. அன்னை, அம்மா, அக்கானு டெல்லில சொல்லிக்கிட்டு இருந்தா மற்றும்  பத்தாது. அவங்களுக்காகவோ, அவர்கள் கட்சிக்காவோ என்ன பன்ணினே?.  ஒரு மயிரும் பண்ணாம வந்துட்டு, என்னைய நோண்றாங்க, ரொட்ராங்கண்ணா...

ப்ளீஸ்ண்ணே.. ஏதாவது ஒரு வழி சொல்லுங்க.

உம்.. சரி.. கண்ண மூடிக்கிட்டு சொல்லுவேன். கேட்டுட்டு , போகும்போது,  “தும் தத்தா”  சொல்லீட்டு, ஓடிப்போயிடனும். நான் கண்ணத்தொறந்து  பார்க்கும்போது , நீ இங்க இருந்தே, டோமரை விட்டு நக்க&$%^#விட்டுருவேன். டீலுக்கு ஓகேனா, எங்க  மண்டிய போட்டு உக்காரு.


1. இனிமேல, காங்கிரஸ்காரனுக போட்டோவை, ’அவனுக சிரிச்சுக்கிட்டே நாட்டுக்கு சேவை செய்யறமாறி  போஸ்ல, போட்டோ எடுத்து’  டிஸ்யூ பேப்பரின் இரண்டு பக்கம் பிரிண்ட் பண்ணி, ஏழை எளிய மக்களுக்கு  இலவசமா தரனும்.

2. வாங்கின டிஸ்பிளே போர்டை, கட்சி ஆபீஸ், நெடுஞ்சாலை பகுதிகளில் வைத்து, கட்சியின் இன்று  எத்தனை பேர் சேர்ந்தார்கள், எத்தனைபேர் ஓடினார்கள். கடைசியா, இப்ப இருப்பது யாருனு லைவா காட்டனும்

3. அப்புறம், எங்கஊரு தம்பி, அதாம்பா. ராகுலோட கொ^$ட்டைதாங்கி,  சஞ்%$#@$ய் தம்பியின்  உருவப்படத்தை,  10 செகண்ட்க்கு ஒருதடவை, Diaplay-ல காட்டனும்.


இதெல்லாம் பண்ணினா, ’நீதான் விடிவெள்ளி. வெயிலல உனக்கு மூளை, தாடியா வழிச்சிருச்சு. அதை ஒரு  டோமரு நக்கி^&$டுச்சு’னு, ரெட்டைய விட்டு சொல்லச்சொல்லி,  கேஸை மூடிடலாம்.

சரி நாயே.. ஓடிப்போ...


அண்ணே.. கண்ண தொறக்காம, இன்னுமொரு உதவிபண்ணுங்கணே.

சீக்கிரம் சொல்லுயா...

அண்ணே.  இங்கிலாந்து இளவரசி டயானாவ பார்த்து, கை குலுக்கனுமுனு ரொம்ப நாளா ஆசை. நடந்த களேபரத்தில, இது முடியாம போச்சுண்ணே..

அடப்பாவி.. இது சப்பமேட்டரு.  உன்னோட கேஸை, சைனாவுக்கு மாற்றினா, உன்னோட விருப்பம் சீக்கிரமா நடக்கும். டயானாவை பொக்கேயுடன் வெயிட் பண்ணச்சொல்லி, உன்னை அனுப்புவானுக.

ஆனா கல்மாடி.....பார்த்துக்க.. உங்க அன்னை, கண்டதை சொல்லி, இந்த கேஸை இந்தியாவுலேயே நடத்தலாம்னு சொல்லும் . கேட்காதே.
கேஸை, இழு..இழுனு இழுத்து, வயசாயி, நீயா  சொந்தமா டிக்கெட் வாங்கி, டயானாவை பார்க்குறமாறி பண்ணிடுவானுக. ஜாக்கிரதையா நடந்துக்க..

சரிண்ணே.. நீங்க கண்ண திறப்பதற்க்குள், நான் கிளம்பறேன். அண்ணே.. பாருங்கண்ணே.. திரும்பவும் யாரோ காறித்துப்புறாங்க..

அடப்போய்யா.. இப்ப துப்பினது எனக்கு.. இதெல்லாம் ஒரு பதிவுனு எழுதறான் பாருனு , ..
நீ கெளம்பு செல்லம்..
நானும் தூங்கப்பபோறேன்..
.
.
.
தும் தத்தா....