Pages

Thursday, December 31, 2009

வாங்கய்யா..மருத்துவரய்யா..

செய்திகள்
  • ஜெயங்கொண்டம்: வன்னியர்கள் வன்னியர்களுக்கு மட்டுமே, குறிப்பாக பாமகவுக்கு மட்டுமே ஒட்டு போட்டால் தமிழகத்தில் உள்ள 120 சட்டசபை தொகுதிகளில் பாமக வெற்றிக் கனியை பறித்து ஆட்சியை பிடிக்கும்
    ( அய்யா..சாமி.. தயவு பண்ணி ஓட்டப்போடுங்க சாமி...)

  • தமிழகத்தில் உள்ள 6 கோடி பேரில் 2 கோடி பேர் வன்னியர்கள் உள்ளனர். வன்னியர்கள் வன்னியர்களுக்கே ஒட்டு போட்டால் தமிழகத்தில் 120 சட்டசபை தொகுதிகளில் வெற்றிக் கனியை பறித்து ஆட்சியை பிடிக்கலாம். இதற்கு அனைத்து வன்னியர்களும் ஒன்று சேர வேண்டும்.
    ( 2 கோடி இருக்கட்டும்.. முதல்ல அன்பு-பெல் உங்களுக்கு ஓட்டு   போடுவாராய்யா?..தவறான முடிவினால், மகனுனோட கோட், ஸுட் -ய கழட்டுனவறாச்சே நீங்க...)

 

  • 1987 -ல் போராட்டம் நடத்தி மற்ற சாதிகளுடன் இணைந்து 20 சதவீத இடஒதுக்கீடு பெற்றோம்.ஆனால் அதில் 7 சதவீதம் கூட நமக்கு பலன் கிடைக்கவில்லை. 
     ( அடடா.. வடைபோச்சே..)
 


  • வன்னியர்களுக்கு என தனியாக 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கோரி அறவழியில் போராட்டம் நடத்தி சிறை செல்ல 20 வயது முதல் 30 வயது வரையுள்ள ஒரு லட்சம் இளைஞர்கள் தயாராக வேண்டும்.
         ( அடப்  பார்றா..இதுதான் பெற்ற பாசமென்பதா...அழகா நம்ம மணிய கரைசேத்திட்டார்...)



  • சிறையில் இருந்து வெளியில் விட்டாலும் மீண்டும் அதே போராட்டத்தை நடத்தி சிறைக்கு செல்ல வேண்டும். நான்கூட 6 மாதம் சிறைக்குச் செல்ல தயாராக உள்ளேன் என்றார்.
     ( அய்யா.. நீங்க எதுக்குய்யா வயசானகாலத்திலே உள்ளபோயிட்டு.... வெளியிருந்தே கட்ட ஆரம்மிசுருங்க............. சமாதி-ய...


ஏனய்யா. உங்கள் அரசியல் அனுபவமென்ன..நீங்கபோயி 6 மாத விசா அப்ளை பண்ணீட்டு......நீங்கமட்டும் "உம்" -னு சொல்லுங்க.... காடுவெட்டிகிட்ட சொல்லி பர்மனெண்ட் விசாவுக்கு ,  பேப்பர்ச மூவ் பண்ணிடலாம்..)





.

Wednesday, December 30, 2009

ஆங்கிலம் கற்கலாம் வாங்க.. -> 1


இந்தப் பதிவை படிக்கும்முன் தயவுசெய்து, கீழ்கண்ட கேள்விகளுக்கு பதிலளியுங்கள்..


  • நீங்க அடுத்தவருக்கு உதவும் மனப்பான்மை உள்ளவரா?
  • அடுத்தவர் துயர் கண்டு மனம் துடிப்பவரா?
  • உதவி செய்வதையே கடமையாக கொண்டுள்ளவரா?
  • ஆமாய்யா ஆமா..என்னானு சொல்லித்தொலை-னு நினைக்கிறிங்களா?..

இதுல , இரண்டு கேள்விகளுக்கு மேல் உங்கள் பதில்  "ஆம்"  என்றால்,
நீங்கதான் நம்ம ஆள்...........மற்றவங்ககெல்லாம் , அப்படியே இந்தப்
பக்கத்தில்   " கீழே வலதுமூலையிலே " ஒருவர் தலைத்தலையா அடிச்சுட்டிருப்பார்..
அவரு செய்ற மாறி , செஞ்சிட்டு அடுத்தபதிவைப் படிக்க போயிடுங்க.. ப்ளீஸ்...

மற்றவற்கெல்லாம் ,

OK.... நேர சப்ஜெட் ஆரம்பிச்சுடலாமா....

எந்த ஒரு " Target "-ய் அடையமுனாலும் , அதுக்கு விடாமுயற்சி, மற்றும் நேர் & குறுக்கு வழிகள் இருக்கும்.

விடாமுயற்சி.
இன்னும் நீங்க இந்தப்பதிவைப் படிக்கிறதாலே , உங்களுக்கு ரத்ததிலேயே "விடாமுயற்சி "  ஊறிட்டிருக்கு மக்கா.. அதனாலே நீங்க தைரியமா Continue பண்ணலாம்..

நேர் வழி
நேர்வழியில போற நல்லவங்கெல்லாம் , அந்தப் படத்தப் பார்த்து
தலையில அடிச்சுட்டு , அடுத்தப் பதிவுக்குப்போனதாலே, அவங்களோட சேர்த்து இதையும் ஸ்கிப்  பண்ணிடலாம்...

குறுக்கு வழி
எப்படியோ தட்டுத்தடுமாறி குறுக்கு வழிவரை வந்துட்டீங்க.. சபாஸ் மக்கா. ,
" நீங்கதான் நம்மாளு.."
அப்படியே கை கோர்த்திகிட்டு , எங்கூட வாங்க..

கீழ உள்ள கோல்டன் Rules , எப்படியாவது மண்டையில ஏத்திக்கோங்க..


#Rule 1 - எந்த புது "language" கற்றுக்கொள்ளனுமுனா, அதில் உள்ள கெட்ட வார்த்தைகளை முதலில் தெரிந்துகொள்ளுங்கள்..
#Rule 2 - அடுத்தவனுக்கு சொல்லிக்கொடுக்கும் போது, அது அவனோட மண்டையில் ஏறிடுச்சானு க்ராஸ் செக் செய்யுங்க..
#Rule 3 - அப்படி ஏதாவது Screwup ஆயிடுச்சுனா, சடாருனு Shutter -ப் போட்டுட்டு தப்பிச்சுருங்க...


உதாரணத்துக்கு " Holding & Lifting " அதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்..


எங்க கம்பெனியில, போனமாதம் கால்பந்து மேட்ச் "Woodlands Statium"-ல நடந்தது..எங்க டீம்ல சின்ராசு ,  எங்களுக்கு படியளக்கிற கடவுள், மற்றும் சில நண்பர்கள் ஒரு டீம்ல விளையாடினோம்..


இந்த சின்ராசு இருக்கானே...அவன் தமிழில புலி..( தாத்தாவோட பட்டாபட்டிய, அவருக்கே தெரியாம கழட்டி  ஆற்காட்டுக்காரருக்கு மாட்ற ஜாதி...) 

பிரச்சனை என்னான்னா ,நம்மாளு ஆங்கிலத்தில கொஞ்சம் அரை குறை.
எதை,  எங்க, எப்படி  யூஸ் பண்ணனும் தெரியாது.

அன்னைக்கு நடந்து முடிந்த மேட்சுல எங்களுக்கும் (எப்பவும்போல ஆறுதல்) பரிசு கிடைத்தது.. 









                                                                               படம்...

 அப்போது எங்க கடவுள் , கைல டீம் கொடியப்   பிடித்துக்கொண்டு ,
சுற்றியும் பெண்கள் படைசூழ, யாரிடமோ உரக்கப் பேசிட்டுருந்தார்.. ..
சின்ராசு பெண்கள் முன்னாடி, படம் போடலாமுனு முடிவுபண்ணி சத்தமா
" டேய்..Boss is lifting our Team Flag... " கத்த, எங்களுக்கு ரொம்ப அவமானமா போயிடுச்சு..

அவன தனியா கூப்பிட்டு , காச்சியெடுத்துட்டேன்....
சின்ராசு மெதுவா "ஏன்டா நான் சொன்னதில என்ன தப்பு"னு கேட்க,
" சின்ராசு.. Boss is holding our Team Flag " னு சொல்லனும் நானு பெரிய மனுசன் மாறி சொல்ல ,  சின்ராசு தலையாட்டிட்டுப் போயிட்டான்..

இது நடந்து ஒரு வாரம் இருக்கும்..ஒரு நாள் மதிய வேளையிலே, உண்ட மயக்கத்திலே ரிலாக்ஸா   பேசிக்கிட்டுருந்தோம்.  திடீருனு பார்த்தா கடவுள் , எங்க பின்னாடி நின்னுக்கிட்டு யாரோடவோ போனில
பேசிக்கிட்டுருக்கார். 


நாங்களும் எவ்வளவு நேரம்தான் வேலை செய்றமாறி நடிக்கிறது..
அவரு கை வேற, நாங்க அலங்காரமா வைத்திருந்த பரிசு மேல டான்ஸ் ஆடிட்டுருக்கு..

திடீர்னு சின்ராசு Boss-ப் பார்த்திட்டு, "Boss is holding our Balls " -னு போட்டான் பாரு ஒரு போடு...

ங்ககொய்யா...எங்க சொல்லிக்கொடுத்ததை , எங்க விட்டான் பாருங்க...
அவனாலே இந்த வருசமும் எங்களுக்கு இன்கிரிமெண்ட் கட்..

அதனாலே , கோல்டன் ரூல்சை மறந்துராதிங்க..



 

Tuesday, December 29, 2009

கணிதம் பழகலாம் வாங்க..-> 1

ரொம்ப நாளா மொக்கையா எழுதி, எழுதி , வெறுப்பாயிடுச்சு..
இதுல வேற நம்ம வெளியூர்காரன் ," சுனாமி டைம் , எங்க மச்சி இருந்தீங்க " -னு கையில அருவா வெச்சுட்டு , பின்னூட்டம் போட ஆரம்பிச்சுட்டார்.

சரி.. மக்களுக்கு Useful-லா ஒரு நல்ல பதிவைப்போடலாமுனு முடிவு பண்ணிட்டேன்..
நீங்க ஸ்கூல SIN , COS & TAN  எல்லாம் படித்திருப்பீர்கள்.

சரி.. சரி.. மண்டைய குழப்பிக்கவேண்டாம்..
உங்க கணித அறிவை மீண்டும் புதிப்பித்துக்கொள்ள
எளிய வழிமுறைகளுடன் வருகின்றான் உங்கள் பட்டாபட்டி..( சரி அப்பு.. கொஞ்சம் உட்டுப் பார்த்தேன்  கோவிச்சுகாதீங்க....)







கேள்வி 1 :  கீழ் கண்ட  படத்தில்  X- ய்  கண்டுபிடி....








 


இதுல X-யை கண்டுபிடிக்க எப்போதும் மாறி ,    "    Scientific Calculator  , பேனா , பென்சில்"      எல்லாம் எடுத்துகிட்டீங்களா...OK...




இதுல அந்த கால்குலேட்டர எடுத்து , பக்கத்தில உள்ள குப்பைத்தொட்டியில போடுங்க...

போட்டாச்சா..??


மச்சி..நான் நிசமா நக்கல் பண்ணல..இந்த  கணக்குக்கு இதெல்லாம் வேண்டாம்...



அப்படியே கீழ போங்க..விடை ரொம்ம ஈஸி...
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|

இதுதான்  X...






நான் அப்பவே சொல்லல..இதுக்கு கால்குலேட்டர் எல்லாம் வேண்டாமுனு....
இப்பவாவது  நம்புங்க அப்பு.. நம்புங்க...

.
.
.
.


போட்டோ காமெடி - 2...

ஆப்பிளயும் கண்ணுல காட்டுல...
மூணு கிலோ அரிசியும் வாங்கல..
வெறும் காலுலயே காரியத்த முடிச்சுரானுக.  ங்க்கொய்யா...



இந்த பயபுள்ளைகளுக்கு , யாரப்பா விளையாட சொல்லிக்கொடுத்தது.?

" Foot Ball " ஒரு Ball -ல தான் ஒதைக்கனும். இரண்டு "Ball" யில்ல.....





Saturday, December 26, 2009

ப.மு.க முதலாண்டு நிதி அறிக்கை...

ப.மு. கழகத் தொண்டர்களுக்கு,

புதுவருட நல்வாழ்த்துக்கள்.



முதல் செயற்குழு வெற்றிகரமாக நடந்து முடிந்தது..




















ஏதோ உங்களால் ஆன
அன்பளிப்பினால் , கட்சி வளர்ந்துகொண்டே போகிறது..
கீழே உள்ள போட்டோ , நம்ம R & D கொடுத்த "Inventory List "
















விரைவில் நம்ம தொண்டர்கள், மீண்டும் துண்டேந்தி 
வருவார்கள்..( 2010 -க்கு )

இப்படியே போனா, உங்கள் பட்டாபட்டி சீக்கரம் "Life" -ல செட்டிலாயிடுவேன்..

ஹி.. ஹி.. ஹி..



நம்ம  " R & D "  & "Secret Dept"  பதிய கட்டடதிற்க்கு மாற்றப்பட்டுள்ளது...







Wednesday, December 23, 2009

கூவம் மணக்கிறதா ?



கொஞ்ச நாளா சின்ராசு தொந்தரவில்லாம நிம்மதியா இருந்தேன்..
மனுசன் நிம்மதியா இருந்தா , சனிஸ்-க்கு ஆகாதே...
அடுத்த நாளே முன்னாடி வந்து நிக்கிறான் சின்ராசு..

நொட்ட கதை, மொட்ட கதை , மொண்டி கதையெல்லாம் பேசி முடித்த பிறகு ,
மெதுவா ஆரம்பிச்சான் டாபிக்க ...

"அப்புறம்..கொஞ்ச நாளைக்கு முன்னாடி கோட், ஸுட் போட்டுட்டு துணை முதல்வர் நம்ம ஏரியா வந்திருந்தார் போலிருக்கே " சொல்லிட்டே மெதுவா மண்டயச்சொறிஞ்சான்...
( ஊட்டி குதிரைக்காரன் மாறி..யாராவது காதில விழுத்திருந்தா நான் பொறுப்பில்லை)

நமக்கு உள்ளுக்குள்ளே நம்பிக்கை வந்திருச்சு..என்ன இருந்தாலும் , நல்லது பண்றதுக்குத்தானே, தலைவர் வந்திருக்காரு..இதுல என்னத்த நொள்ள கண்டுபிடிக்கபோறானு மனசு தெம்பாயிருச்சு...

"ஆமா சின்ராசு..கூவத்த மணக்க வைக்க என்னென்ன பண்ணலாமுனு பார்க்க
வந்திருந்தார் " னு நான் சொன்னேன்.

"இங்கபாரு பட்டாபட்டி.. லோக்கல் பேப்பரில் , அதைப்பற்றி நூசு வெளியாயிருந்தது..
ஏம்பா.. கூவத்த இங்க ஷிப்ட் பண்ணிட்டாங்கா?"... னு நக்கலா
சிரிக்கிறான்.


சென்னையில இருக்கற கூவத்துக்கு, சிங்கப்பூர்ல என்னய்யா பண்றிங்க?..
எங்கோ தேள் கொட்டுனா எங்கேயோ நெறி கட்றமாறி.....சொல்லிட்டு என்னைய
சைடா பார்க்கிறான்..

இவங்கிட்ட பேசி தப்பிக்கமுடியாது முடிவுபண்ணிட்டு "இல்ல சின்ராசு..அவரு சீக்கிரமா
கூவத்த மணக்க வெச்சுருவாரு.. என்னா.... 



எங்க தலைவரு , நல்லவரு, வல்லவரு..
சொன்னத்தான் செய்வாரு.. செஞ்சத்தான் சொல்வாரு ,"

                                                                                                                                      நான் இழுக்க...

ஆமான்டா .. வேட்டைக்காரன்ல டாக்டர் விஜய் மஞ்சத்துண்ட போட்ட மாறி ,
தமிழ் நாட்ல ஒருத்தரு தோள்ல மஞ்சத் துண்டப்போட்டுட்டு பகுத்தறிவு பேசுவாரே..
அவரு நம்ம துணைமுதல்வர் ஸ்கூல் பையனா இருந்தப்போ இதையேதான் சொல்லிட்டிருந்தார்
.-னு சொல்லிட்டு பெரிசா மூச்சு உடுறான்.

நாயி.எங்கிருந்து எதெதுக்கு முடிச்ச போடறான் பார்த்தீங்களா.
டாக்டர் விஜய எடுத்து , மஞ்சத்துண்டல மூடி , துணைமுதல்வர் தோள்லயே மாட்றான்.

மக்கா..வேறவழியே இல்லை..அதனாலே









   

One


Two



Three


 


வுடு         ஸுட்..












தற்காலியமா அவங்கிட்ட இருந்து ஒரு வழியா தப்பிச்சுட்டேன்..
சின்ராசு கிட்டயிருந்து முழுசா தப்பிக்கனுமுனா
எனக்கு ஒரே ஒருவழிதான் இருக்கு..

அதற்கு, சென்னையில வசிக்கும், மற்றும் "Digital Camera"
வைத்துள்ள நண்பர்கள் மட்டுமே எனக்கு உதவமுடியும்.,



சிரமம் பார்க்காம


" பாலும் தேனும் ஓடுகின்ற கூவத்தை" தயவுசெய்து
கிளிக் செய்து ஈஈஈஈஈஈஈஈஈமெயில் அனுப்பிவைக்கவும்.
அப்பதான் சின்ராசு மூஞ்சியிலெ கரி பூசமுடியும்...

நன்றி மக்கா..எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..



போட்டோ மறந்திராதிங்க...

Tuesday, December 22, 2009

வேட்டைக்காரன்.. - ஒரு அலசல்






ஆனாலும் நம்ம கா @#$% மாறன் மனசுல இருக்கறத அப்படியே விஜய் மூலமா,
தமிழக மக்களுக்கு தொறந்து காட்டிடாரு ...



படத்தில எனக்கு பிடித்த காட்சிகள்..

  • மஞ்சத்துண்டு போட்டு தாத்தா மனச நக்குன அழகு என்ன ?
  • யாராவது எம்.பி ஆகனுமுனா , மினிமம் என்ன எதிர்பார்போமுனு கொடுத்த "Hints" என்ன ?
  • மக்களை பயமுருத்தி சொத்துக்களை எப்படி வளைக்கனும் காட்டின வழி என்ன ?
  • அடுத்தவன் பொண்டாட்டிய ஆட்டய போடரது எப்படினு சொன்ன "Style" என்ன?

ஆக மொத்தம் தாத்தா கொ^#$% தாங்கு தாங்குனு தாங்கிட்டார்..





 

ஆனா கடைசியா ஒண்னு சொல்லனுமுனு ஆசை...
படம் எடுத்த காசுக்கு , பேசாமா தாத்தா முன்னாடி நாலு காலத் தூக்கிட்டு
உக்காந்திருக்கலாம்...

  

Saturday, December 19, 2009

மூளை மக்கா..மூளை....


கணக்குல புலி....

மக்கா.. அல்ஜீப்ரா எல்லாம் நமக்கு ஜுஜுபி...
கீழ உள்ள வினாவை எப்படி " Expand " பண்றது..

                   |
                   |
                   |
                   |

                        n
             ( a+b )


ரொம்ப ஈசி...
                 |
                 |
                 |
                 |
                 |
                 |
                 |
                 |
                 |
                 |
                 |
                 |
                 |
                 |

                n
( a   +   b )

                    n
( a     +     b )

                         n
( a       +       b )

                             n
( a          +          b )

                                    n
( a              +            b )

                                              n
( a                    +               b )



அவ்வளவுதான்.........

 

போட்டோ காமெடி - 1...

மாமா குரூப் போட்டோ எடுக்கிறாரு...
கொஞ்சம் சிரிங்க பொண்ணுகளா...
...


Friday, December 4, 2009

பட்டாபட்டியின் பகிங்கர அறிவிப்பு...

நேற்று , சின்ராசு, என்னொட கடவுசொல்லை பயன்படுத்தி , "நேரு மாமா, காந்தி பேச்சைக் கேட்கவில்லையா?" என்று என்னோட
ப்ளாக்-ல ஒரு பதிவை ச் சொருகிட்டான்.....

மக்களே.. அந்தப்பதிவுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை..


அதில் அவன் , என்னைப்பற்றியும், நேருமாமா பற்றியும் பல தவறான கருத்துக்களை பதிவுசெய்துள்ளான்..

1. ///  ஏன்னா அவனுக்கு காந்தினா உயிரு..  ///


இது தவறு.. எனக்கு காந்திய பிடிக்குமுனு சொல்லவில்லை.. பிடிச்சிருந்தா நல்லாயிருக்குமுனுதான் சொல்றேன்...



2 ///  .நம்ம மக்கா எல்லாரும் நல்லாயிருக்கனுமுனு  நல்ல , நல்ல கருத்துக்களையெல்லாம் நம்ம தாத்தா பிதா அள்ளிவிட்டிருந்தார். உதாரணமாக


*       அஹிம்சை,
*       புலால் உண்ணாம்மை,
*       மது அருந்தாமை,
*       யாராவது அடிக்கவந்தா, தயங்காம பின்புறத்த காட்டனும் ,
*      அடுத்தவன் (இந்திய)பொண்டாட்டியா தாயா (அ) மகளா பார்க்கனும்,
*      பொறுமை-னு


/// 

 
காந்தியொட கருத்துக்கள் எனக்கூறி சிலவற்றை அட்டவணையிட்டுருந்தான்..
அதிலே முக்கியமா, அந்நியத்துணி எரிப்புப்போராட்டம் காணவில்லை...


எனக்கு மண்டைக்குமேல எறிடுச்சு.. மகனே , உன்ன இப்படியேவிட்டா ,என்ற பட்டாபட்டிய அவுத்துருவானு நினைத்து ,
உடனே சின்ராசுக்கு Phone-ப் போட்டேன்.. ( ISD- ஹி...ஹி..ஹி.. பூத்ல போயிதான்)

Phone-ய் எடுத்து சின்ராசு பேசரதுக்குள்ள , நான் அவனை காச்சியெடுத்துவிட்டேன்
ரொம்ப நேரமா , அந்தமுனையில சத்தமே இல்ல.. எனக்கு கொஞ்சம் சங்கடமா போயிடுச்சு... மெதுவா "சின்ராசு.. ஏன் எதுவுமே பதில் பேசமாட்டிங்கிற " னு கேட்டேன்..

சின்ராசு மெதுவா, "பட்டாபட்டி, உனக்கு மூளை , கீளை இருக்கானு யோசன பண்ணிட்டுருக்கேன்" னு கூலா சொல்றான்...

என்னடா, சின்ராசுக்கு மறை கழண்டிருச்சா? -னு என்று மண்டைக்குள்ள மணியடிக்குது...

சின்ராசு, " இங்க பாரு.. உன்னோட பதிவு கேப்சனா என்னமோ, யோசன பண்ணி, பிளான் பண்ணினு என்னென்னமோ போட்டிருக்க....
ஆனா , நான் போன பதிவில போட்ட படத்த நல்லா நோட் பண்ணினியா ?" திருப்பிக்கேட்கிறான்..

நான் பாத்தவரை , அதுல நேரு , வெள்ளகாரிகிட்ட பல்ல காமிச்சுட்டு , தம் பத்தவைக்கிறாரு...இந்த படத்தில மயி%# யோசன பண்ரதுக்கு இருக்குது நான் நினைக்க,  சின்ராசு என் மனஓட்டத்த புரிஞ்சுக்கிட்டு கெக்கே..பெக்கே...னு சிரிச்சுட்டு விளக்கினான் பாருங்க எனக்கு..
மண்ட முடியெல்லாம் நேரா நிக்க ஆரப்பித்துவிட்டது...

அவனோட விளக்கம்...

நேரு மாமா, அந்நியதுணி எரிப்பு போராட்டதிற்கு , அவளொட துணிய எரிக்கப்பார்க்கிறாராம்...
அத்னால அவரு காந்திபேச்சைக் கேட்கிறாரு...அவ்வளவுதான்
....

Thursday, December 3, 2009

நேரு மாமா , காந்தி பேச்சை கேட்கவில்லை என்பது நிசமா?

முன்னொரு காலத்தில , முருங்க மர தோப்புகுள்ள மூணு காலு முயல் ஒன்னு துள்ளித்திரிச்சதாம்..
சே... என்னவோ எழுதவந்துட்டு, எத எதையோ சொல்லிற்றுக்கென்....
யாராவது வரதுக்குள்ள இந்தப்பதிவ போட்டரனும்.

நம்ம தேசப்பிதா காந்தி மகான், அரைகோமணம் கட்டி, வெள்ளக்காரங்கிட்ட இருந்து  இந்திய மக்களுக்கு சுதந்திரம் வாங்கித்தந்தார்..( நல்லவேளை பட்டாபட்டி கடவு சொல்ல குடுத்துட்டு லீவுல கோயமுத்தூர் போயிட்டான்.)

நம்ம மக்கா எல்லாரும் நல்லாயிருக்கனுமுனு  நல்ல , நல்ல கருத்துக்களையெல்லாம் நம்ம தாத்தா பிதா அள்ளிவிட்டிருந்தார். உதாரணமாக


*       அஹிம்சை,
*       புலால் உண்ணாம்மை,
*       மது அருந்தாமை,
*       யாராவது அடிக்கவந்தா, தயங்காம பின்புறத்த காட்டனும் ,
*      அடுத்தவன் (இந்திய)பொண்டாட்டியா தாயா (அ) மகளா பார்க்கனும்,
*      பொறுமை-னு


என்னென்னவோ சொல்லிட்டு போனாரு...

ஆனா, நம்ம ராகுல் காந்தியொட கொள்ளு தாத்தன் , சும்மாயிருக்காம பண்ணின அட்டகாசத்த
பாருங்க....மக்கா.... பாருங்க......




|||

|||

|||

|||

|||

|||




அப்புறம் வெள்ளக்காரன் ஏன் திரும்பி ஓடமாட்டான் ?
அப்புறம், முக்கியமா , பட்டாபட்டிகிட்ட சின்ராசுதான் இந்தப்பதிவப் போட்டானு சொல்லிராதிங்க அப்பு...

ஏன்னா அவனுக்கு காந்தினா உயிரு...( ஹி... ஹி... நம்ம நமிதா அந்தூரு புள்ளங்கரதால.....)







Wednesday, December 2, 2009

" ப மு க " கட்சிக்கொள்கைகள்

கடைசியாக எங்கள் R & D dept , கம்பெனி கட்சிக்கொள்கைகளை ரெடி செய்துவிட்டனர்....

1. எல்லொருக்கும் ஒரே நீதி.. ( கட்சி ShareHolder have extra privileges )
2. டாஸ்மார்க் வேலை நேரம் அதிகரிப்பு..( 24/7 )
3. ப்ரீ செல்போன் ( ShareHolders - Incomming / Outgoing +IDD free )
4. மாதத்திற்க்கு ஒரு முறை இலவசமாக முடிவெட்டப்படும்...( ஷேர் ஹோல்டர் -கு நகமும் வெட்டப்படும்)
5. சொட்டை மண்டைகளுக்கு , மாதம் Rs 10/- (அ) 1 பெக் , நன்கொடையாக தலைமை கழகத்தில் வழங்கப்படும்.
6. காலை 7 மணி முதல் 10 மணிவரை கழகத்திற்க்கு வந்து " பட்டாபட்டி வாழ்க " என முழக்கமிட்டால் , 1 குவாட்டர் இலவசம்.
7. வேலையில்லா மக்களுக்கு மூன்று வேளை உணவு. மற்றும் மாதம் Rs 5000 /- பஞ்சப்படி..
8. மாதசம்பளம் Rs 10,000 க்கு மேல்வாங்குபவர்களுக்கு 60% Income Tax...
9. வருடம் ஒரு முறை, குடும்பத்தலைவருக்கு இலவசமாக டெல்லிக்கு உல்லாச ரயில் பயணம். + அன்னை வீட்டில் இத்தாலி பிஸ்ஸா...( For Share Holders - Exec class Flight tickets for whole family members - include பெரிய / சின்ன வீடு(கள்)... pizza - option )
10.வருடாந்திர மெம்பர்களுக்கு தீபாவளி அன்று புதிய உடைகள்.( பட்டாபட்டி லோகோவுடன் )

Tuesday, December 1, 2009

அப்பு..நானும் கட்சி ஆரம்பிக்கப்போறேன்.....

ரொம்ப நாளா எனக்கு மண்டக்குள்ள ஒரு விசயம் ஓடிட்டிருக்கு...
யாராரோ , குடும்பக்கட்சி ( Private Ltd ) நடத்திட்டிருக்கும்போது , நாம ஏன் சும்மா சுத்திட்டிருக்கனும்?.
நாமளும் ஒரு பிரைவேட் கம்பெனி ..Sorry.. Sorry.. Tongue Slip ஆயிருச்சு...ஒரு கட்சி ஆரம்பித்து , நாட்டு நலன்-க்கு
பாடுபடலாமுனு முடிவு பண்ணிட்டேன்..
என் கம்பெனியின் விபரங்கள் பின்வருமாறு...

கட்சியின் பெயர்             : பட்டாபட்டி முன்னெற்றக் கழகம் " ப மு க ",
கட்சியின் கொள்கை     : ஹி..ஹி..ஹி...கம்பெனி R & D தயாரித்துக்கொண்டுள்ளது... விரைவில் வெளியாகும்...
மாநாடு நடக்கும் இடம் : மெட்ராஸ்  சென்னை.. ( Looking for sponsers in Overseas )
இன்ன பிற நிபந்தனைகள் ( எத்தனை சூட்கேஸ்..) : Refer tomorrow  " THE HINDU "
வட்ட , மாவட்ட டேமேஜர் நியமனம் : Same as above
மற்ற விவரங்கள் அடுத்த பதிவில் வெளியாகும்...

ஆகவே, என் உயிரினும் மேலான ஞானஒளிகளே..
உங்களின் பொன்னான ஆதரவை எதிர்பார்க்கும்... பட்டாபட்டி..

Wednesday, November 25, 2009

தெய்வம் தந்த பூவே...

ஹாயா ஹால்ல உக்காந்து டீவி பாத்துட்டு இருந்தேன்...அப்போது என்னுடய தொலைபேசி அலறியது..யாரு-னு எட்டிப்பாத்தா "சின்ராசு"...

ஆகா, சனிஸ்வரன் ஞாயிற்றுக்கிழமையும் ஓவர் டைம் செய்யறாரு போல நினைத்து , தொலைபேசிய ஆப் பண்ணலாமுனு முடிவுசெய்தேன். அதுக்குள்ள என்னுடைய வாண்டு போன ஆன் செய்துவிட்டது...

சரின்னு கடவுள்மேல பாரத்தப்போட்டு "சொல்லு சின்ராசு "-னு சொன்னேன்.
"இல்ல . ரொம்ம நாளா ஆளைப்பாக்க முடியவில்ல.. ரொம்ப பிசியா?" -னு நக்கலா கேக்கிறான். நானு "இல்ல சின்ராசு......, ஆமா சின்ராசு.... " உளறிட்டு , "அப்புறம் என்ன விசேசம் ?" கேட்டபிறகுதான் , எனக்கு சுரீர்-னு ஆகா...
சனிஸ்வரரு நம்ம நாக்குல வந்து உக்காந்திட்டார்னு உறைத்தது......

அதுக்குள்ள சின்ராசு, எங்க எத்தன மணிக்கு மீட் பண்ணனுமுனு முகூர்த்தம் பிக்ஸ் பண்ணிட்டான். முடியாதுன்னு சொன்னா மொன்னா ஞாயம் பேசுவான்..சரி.. வேற வழி-னு பஸ் எறி சொன்ன டைமுக்கு " ஜுராங்க் ஈஸ்ட் " போயிட்டேன்.

பார்க்-ல பெரிய ஜமா கூடியிருந்தது...கூட்டத பாத்ததும் , ஓகே..இன்னைக்கு எப்படியும் தப்பிச்சிறலாம்னு நம்பிக்கை வந்திருச்சு....

எப்போதும் போல ,
இந்தியாவ இங்கிருந்தே தூக்கி நிறுத்தலாமா?.. இல்லாட்டி ஊருக்கு போன் பண்ணி நம்ம மக்காகிட்ட சொல்லி முட்டுக்குடுக்கலாமானு பேசிட்டிருந்தோம்..

அப்போ, ஒரு வயதான இந்திய மூதாட்டி , சிறு சீனக்குழந்தையுடன் வாக்கிங்க் போயிட்டிருந்தது... நாங்க தமிழில் பேசிட்டிருப்பதைப் பார்த்து பக்கதில் வந்து "எல்லா ஊர்காரங்களா ? இங்க வேலை செய்கிறீர்களா ?"-னு கேட்டாங்க..

சின்ராசு முந்திக்கிட்டு "
ஆமாங்கோ பாட்டி..."னு நக்கலா சொல்ல, பாட்டி மூஞ்சி மாறிடுச்சு... நாங்க பேச்சைமாற்ற ,"குழந்தை அழகாக இருக்குங்க.. பக்கத்துவீட்டு பாப்பாங்களா ?" - னு கேட்க "இல்ல தம்பிகளா.. என்னொட பேத்திதான் " பாட்டி சொல்லுச்சு...

ஓகே.ரைட்டு..
பாட்டி பையன் சீன சரக்க கல்யாணம் பண்ணிட்டாம்போல..பாட்டிக்கு ரொம்பவே பெரிய மனசுதானு நினச்சுட்டோம்.. திடீர்னு குழந்த ஓட ஆரம்பிச்சது.. பாட்டி இங்கிருந்தே " செல்லம்.. மெதுவா போம்மா " கத்துச்சு...

சின்ராசு பாட்டிகிட்ட நல்லபேரு வாங்கனமுனு முடிவுபண்ணிட்டு "பரவாயில்லைங்க.. குழந்தைக்கு தமிழெல்லாம் சொல்லிகொடுக்கிறீங்க .." சொல்ல
(பாட்டிங்கரத முழுங்கிட்டான் ) , பாட்டி அவன ஒரு மொறை மொறச்சது....

சரின்னு நாம எங்க வேலையப்பார்ப்போமுனு வெட்டி கதை பேச ஆரப்பித்துவிட்டோம்... கொஞ்ச நேரம் கழித்து சின்ராசு என்ற முதுகச்சொறிஞ்சு சைடுல கையக் காண்பிக்கிறான்..


திரும்பிப் பார்த்தா , ஒரு 30 வயது , தமிழ் பொண்ணு ( தொட்டு பொட்டு வச்சுக்கலாம்... ) அந்தக் குழந்தையை கொஞ்சிட்டிருந்தது.. மெதுவா பாட்டியப் பார்த்து "அது யாருங்க" னு நான் கேட்க , "அதுதான் தம்பி என்ற மருமகள்." ங்குது பாட்டி..

சின்ராசு முகம் திடீர்னு
பல்பு போட்டமாறி பிரகாசமாயிடுச்சு...ஓகே.. சின்ராசு ஏதோ வில்லங்கம் பண்ணறதுக்குள்ள இடத்த காலி பண்ணிடலாமுனு அவசர அவசரமா எந்திரிச்சு நகர ஆரம்பித்தோம்..


சின்ராசு அப்பாவியா முஞ்சிய வெச்சுட்டு பாட்டிகிட்ட "குழந்த அழகா சீனப்பாப்பா மாதிரி இருக்குதுங்க.." சொல்றான்.. பாட்டி பல்லைக் காண்பிச்சுட்டு
" என்ற மருமகள் எப்ப பாத்தாலும் சீனச்சாமியே கும்பிடுவா..அதனால சாமியே பாத்து சைனாக்காரங்க மாறி புள்ளையக் கொடுத்திருச்சு" னு சொல்லுது...

சின்ராசு அங்கிருந்தே
"விதை ஒண்ணு போட்டால், சொறை ஒண்ணு முளைக்கும்..
சொறை ஒண்று முளைத்தால் யாருக்கு லாபம்" னு

பாடிட்டே எங்களை பார்த்துவரான்...

" போதுன்டா உன்ற சாகவாசம் ..இப்படியா பேசறது.. " நான் சொல்ல ,
"
டேய், வாடா போயி ஜப்பாங்கார சாமி கும்பிடலாம் " னு பல்லைக் காண்பிக்கிறான் இந்த மானங்கெட்ட சின்ராசு....




Tuesday, November 24, 2009

சரித்திரம் மாறிவிட்டதா?

அன்று ஆகஸ்ட் 15..சுதந்திரதினம்.. காலையில வீதியில சும்மா நடந்து போயிட்டு இருந்தபோது, எதுத்தாப்ல சின்ராசு வந்தான். சரி..எதுக்கு நாமளா போயி சனிஸ்வரனுக்கு சல்யூட் வெக்கனுமு நினைத்து வெரச வேற பக்கம் திரும்பிட்டேன்...

அப்பாடா ஒரு வழியா தப்பியாச்சுன்னு நினைக்கரப்போ, இளிச்சுட்டே சின்ராசு தோளைத் தொட்டு "அப்புறம் ..கொண்டாட்டமெல்லாம் எப்படியிருக்குனு " பல்லைக் காண்பிக்கிறான். சரி.. மாட்டியாச்சுனு நினைத்து திரும்பி ஈ...னு நானும் சிரித்துவைத்தேன்.

அப்ப ஒரு ஸ்கூல் பையன் கொடியெல்லாம் குத்திட்டு நடந்து போயிட்டுருந்தான். பேச்சை திசை திருப்பலாமுனு "அப்புறம் தம்பி.. ஸ்கூலுக்கா ? " -னு கேட்டேன்..
அவன் பதில் சொல்வதிற்குள் சின்ராசு, குறுக்கபூந்து "தம்பி.. நமக்கு யாரு சுதந்திரம் வாங்கிதந்தது ? " ஒரு பிட்-ட போட்டான். பையனும் சந்தோசமா " காந்தி தாத்தா " னு சொன்னான்.

சின்ராசு வில்லங்கத்த ஆரம்பிசிட்டானு தெரிந்துவிட்டது. நான் முந்திக்கிட்டு "சரி தம்பி..தாத்தா தவிர வேற யார், யார் எல்லாம் வாங்கிதந்தா?" எனக் கேட்டு சின்ராசுக்குத் தெரியாம சைகை செஞ்சேன். பையனும் மண்டைய சொறிச்சிக்கிட்டே "நேரு மாமா..." னு சொல்றான்.

ஓகே.. சனிஸ்வரன் வேலைய ஸ்டார்ட் பண்ணிட்டாரு..இனி நம்ம கைல ஒண்ணுமில்ல-னு முடிவு பண்ணிட்டேன்..

"சரிடா,
பகத்சிங் , சுபாசு , வ.உ.சி இவங்கெல்லாம் யாரு "னு சின்ராசு கேட்க,
"இவங்கெல்லாம் போராட்டத்தில கலந்துக்கிட்டவங்க" - னு பையன் சொல்றான்...

சரி..சின்ராசு..... பையன் மனசில நஞ்சக் கலந்துராதே.னு சொல்லிட்டு பையன விரட்டிவிட்டேன். ஒரு வழியா , பையன தப்பிக்க விட்டாச்சுனு பெருமுச்சு விட்ட போது சின்ராசு என்னப் பாத்து ஒரு கேனச்சிரிப்ப சிரித்தான்.

"சின்ராசு..எனக்கு நேரமாச்சு...கிளம்பறென்.." சொல்லிட்டு ிரும்பறேன்..குறுக்கால கையவெச்சு வழிய மறிக்கிறான். "நா சொல்ற கதயக் கேட்டுட்டு அப்புறம் எக்கேடோ கெட்டு ஒழி.." னு சொல்லிட்டு ஒரு கதை சொல்றான்.

ஒரு ஊர்ல பெரிய மாமரத்தோட்டம் இருந்துச்சு.. திடீர்னு ஒரு நாள், வெள்ளை குரங்கொன்று மரத்துமேல உக்கார்ந்துட்டு தோட்டதில வேலை செய்பவர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தது...

அதைப்பார்த்த மக்கள், "ஆகா.. வெள்ளக் குரங்கு வெள்ளக் குரங்கு " என் வாயப்பொளத்துட்டு வேடிக்கை பார்த்தனர். அதுல சில பெரிய மனுசங்க , குரங்கு வெள்ளையா இருப்பதனாலே, அது
கடவுளின் மறு உருவமுன்னு ஊர் சனங்களுக்கு சொல்லி, குரங்குக்கு நல்ல மாம்பழங்களை கொடுத்தனர். குரங்கு அத சாப்பிட்டுவிட்டு பெரிய மனுசனுக்ளைப் பார்த்து , பெரிசா ஒரு கும்புடு போட்டது..

அதப் பார்த்த பெரிய மனுசனுகளுக்கு , கால் ஒரு வாரமா, தரையில் படவில்லை...

இப்படி போயிட்டுருக்கும் போது ,கொஞ்ச நாள் கழித்துப்பார்த்தால் , எல்லா மரத்திலும் குரங்கு குட்டிகளா இருத்தது...பெரிய மனுசனுக பார்த்தாங்க.. ஆகா.. இப்படியே விட்டா, நமக்கு ஒண்ணும் கெடைக்காதுன்னு முடிவு பண்ணி அத விரட்டப்போனார்கள். குரங்குகள் குச்சிய எடுத்துட்டு வந்தவர்களை தொரத்த ஆரம்பித்தது...

அப்பொ , பெரிய மனுசனுக , வேட்டிய குண்%#$ மேல கட்டிட்டு , "
என்ன மெரட்டுனா நான் சாப்புடமாட்டேன்.. எங்க சாதி, சனமெல்லாம் , தோட்டத்திலிருந்து நீ வெளிய போறவரைக்கும் வீட்டுக்குள்ளார போகமாட்டொம்.. சோத்துல உப்பு போடமாட்டோம்.. பல்லுல பச்ச தண்ணி படாம உண்ணாவிரதம் இருப்போம் "-னு சொல்லிட்டு இருந்தாங்க...

அப்போ சில வீர இளை ஞர்கள் கம்பு, கடப்பாரை எல்லாம் தூக்கிகிட்டு, "
ங்க்கொய்யாலே..ஓடிப்போகலைனா உனக்கு சங்கு தாண்டி" சொல்லிட்டு குரங்குகளை விரட்ட ஆரப்பித்தனர்....நம்ம பெருசுக அவங்களை தடுத்து நிறுத்திவிட்டனர். எல்லா கூட்டமும் தோட்டத்த சுத்தி நிக்குது. முன்னாடி எல்லாம் , பெரிசுக, வேட்டிய தூக்கிகட்டிகிட்டு நிக்கறாங்க.. பின்னாடி, கத்தி, கம்போட இளை ஞர்கள்.

குரங்குகள் மரத்துமேல இருந்து கூட்டத்த பார்க்குது. அதுக கண்களுக்கு கத்தி , கபடா எல்லாம் பள பள-னு தெரியுது. "
ஆகா.. போட்டாலும் போட்டுருவானுக போல..எடத்த காலி பண்ணிடலானு..." முடிவு பண்ணி, கம்ப கூட்டதுக்கு முன்னால வீசிட்டு , ஓடிப்போயிருச்சு......(முன்னாடி யார் இருக்கா ?)

குரங்குகள் ஓடிப்போனதும் பெரிசுக எல்லாம் , குண்%^# மண்ண தட்டிட்டு "
வெற்றி.. வெற்றி. ." னு கூத்தாடுகிறார்கள்...கம்பு எடுத்துட்டு வந்த கூட்டம், அத வீசிட்டு அவங்கவங்க வேலையப்பார்கக போயிட்டாங்க..

இப்ப சொல்லு.. குரங்கு ஓடிப் போனதுக்கு காரணம் பெரிசுகளா? இல்ல கடப்பாரை எடுத்துட்டு வந்த கூட்டமா? -னு கேக்கிறான்..
எனக்கு மண்டை குழம்பிப்பொயி வீட்டுக்குப்போயிட்டேன்..



Sunday, November 22, 2009

காலேஜ் கலாட்டா ...( 1 Contd....).

காலேஜ்-ல் இருந்து ஒரு checklist தரப்பட்டது..நமக்குத்தான் எதுவும புரியாதே..
நேரா அத எடுத்துட்டுப்போயி காந்திபுரத்தில ஒரு க்ளினிக்குல க்யூ கட்டி நின்னாச்சு..

நர்ஸம்மா வந்து ஒவ்வொருதர உள்ள போங்கன்னு சொன்னாங்க ...ரிசப்சன்-ல ஒரு அசினோட கஸின் மாறி ஒரு சப்ப பிகர்.. என்னமோ நாங்க , ஆக்ஸ்போர்ட்-ல இருந்து வந்தவங்கனு நெனைத்து ஒரே தாட், பூட்ன்னு இங்கிலிச்சு என்னமொ சொல்லுச்சு...

நல்லவேளை, எங்க கேங்க்ல ஒரு ஆப்பக்காரன் இருந்தான். (ஆப்பகாரன யாருன்னு தெரியாதவங்க, எனக்கு ஒரு EMail அனுப்புங்க.. ) ஒரு வழியா அவந்தான் எங்களுக்கு என்னென்ன டெஸ்ட்னு புரிய வைத்தான்.

ஒகே... ரைட்.. விடுன்னு நாங்க, Urine, Blood, extra டெஸ்ட் எல்லாம் செய்தாகிவிட்டது..ஒரே ஒரு Item- தான் பாக்கி.. அதுதான் "மோசன் டெஸ்ட்.." மொட்ட வெயிலில முக்கினாலும் வராதுன்னு தெரியும்..எனவே, நாளை கொடுக்கிறோம்முனு நர்ஸம்மா கிட்ட சொல்லிடு சினிமா பாக்க சென்றுவிட்டோம்.( நம்ம தாடி படம்.. )

இன்டர்வெல்ல காட்டான் மெல்ல வந்தான். என்னடா அந்த "மோசன் மோசன்." சொல்றாங்களே, அது என்னடான்னு மண்டய சொறியறான்..
நானே தாடி, கம்பு எடுத்து படம் பாக்றவங்கல தொரத்திட்டுருக்கானே என எரிச்சல்ல இருந்தேன் இந்த நாயி வந்து டவுட் கேக்குதுனு ," முடிட்டு போடா" சொல்ல, காட்டான் முகம் இருட்டில போட்ட இட்டிலி மாறி மாறிடுச்சு..
எப்படியொ ஒரு வழியா அவனுக்கு புரியவெச்சிட்டு , நம்ம தாடிக்காரருகிட்டருந்து தப்பிச்சிட்டு வீடுக்கு போயிட்டோம்..

அடுத்த நாள் எப்படியோ கொஞ்ச்ம் முக்கி, முணங்கி , தீப்பெட்டில போட்டு க்ளினிக் -ல் கொடுத்துவிட்டோம். ( காட்டானத் தவிர....)
முணு நாளா காட்டான் காலெஜுக்கு வரவில்லை...நாங்க Busy -யா இருந்ததால அவனப் பற்றி நினைக்கவில்லை...
அடுத்த நாலு கரெக்டா 8 மனிக்கு டீ கடையில நாங்க ஆஜர்.
காட்டான் மஞ்சப்பையோட டீ கடை முன்னால நிக்கிறான்..கிட்டப்போனா எலி செத்த நாத்தம். அந்த நாத்த்திலும், எப்பம்போல "2/6 " டீ..கெணப்பார்வை..etc.. etc.... ஒரு வழியா காலெஜுக்கு போலாம்ன்னு முடிவெடுத்தோம்.

காட்டான் மெதுவ வந்து "டேய்... மோசன் சாம்பிள் குடுத்துட்டு மதியம் காலெஜுக்கு போகலானு" சொல்ல எங்க கேங்கும் 100% ஓட்டுப்போட, ஒரு வழியாதிரும்பவும் காந்திபுரம் பயணம். .

நல்லவேளை க்ளினிக்-ல் கூட்டம் இல்லை.. அசின் , எப்பம்போல ஒரு கேனப் பார்வை பார்த்துவிட்டு உள்ள கை காமித்தாள்...டாக்டர் ரூமுக்குல்ல நுழைஞ்சாச்சு...நம்ம டாக்டர், அப்பதான் நல்ல பவுடர் போட்டு பேண்டு போட்ட பெருமாளு மாதிரி சீட்ல உக்காந்து இருக்கார்...( பிகர கரெக்ட் பண்றாராம்....)

நாங்க "Good morning, வணக்கம் , Good afternoon, Good night " அப்படினு சொல்லிடு இருக்கரதுக்குல்ல டாக்டரு பொதெல்லு சேர்லேருந்து விழுந்தாரு...என்னடா கடவுளு காலைல எலிசெத்த சிக்னல் குடுத்தாரு.. இப்ப நிஜமாவே அய்யா டிக்கெட் வாங்கிட்டாரானு மெரண்டுட்டொம்..

ஒரு வழியா சுதாரிச்சுக்கிட்டு, அவருகிட்ட போயி தோள உழுக்கி சத்தம் போட , நம்ம அஸின் உள்ள ஓடிவரா.ரூம்-பே சந்தைகடை மாறி ஆயிருச்சு....
எங்களுக்கு ஒண்ணுமே புரியவில்லை... இந்த பிரச்சனயில, அசினு திடீருன்னு கதவைப்பாத்து ஓட ஆரம்பிச்சுவிட்டது....

அப்போ டாக்டரு மெதுவா முணங்கிட்டெ கண்ணு முழிக்கிராரு...பார்வை மெதுவா டேபிள் மேல போகுது....
" எடுத்துட்டு ஓடுரா , எடுத்துட்டு ஓடுரா " கத்திக்கிட்டே நடுங்கராரு . எங்களுக்கு அஸ்திவாரம் ஆட்டமாட ஆரம்பித்துவிட்டது.....எல்லோரும் பயம்மா டேபிள் பார்க்க அதுமேல
" 1kg ஹார்லிக்ஸ் Bottle-ல நம்ம காட்டான் ஃபுல்லா நிரப்பிட்டு வந்திருக்கான் "....

அப்படியெ வலைய வீசர மாதிரி மஞ்சப்பைய பாட்டல் மேல போட்டு, டபால்னு தூக்கிகிட்டு வீதிக்கு ஓடி வந்துட்டோம்.
ஒரு வழியா குப்பையில வீசிட்டு "என்னடா காட்டான் இப்படி பண்ணிட்டெனு கேட்டா "நீங்கதா எவ்வ்ளவுனு சொல்லலியே.. எங்களை திருப்பிக்கேக்கிறான்..

( Moral - Communication is a skill and not everbody have.. )

Friday, November 20, 2009

காலேஜ் கலாட்டா ...( 1 ).

நன்றாக நேர் எடுத்து சீவிய தலை. எண்ணை வடியும் முகம்.தோளில் ஒரு மஞ்சள் பை.இந்த மொத்த உருவத்தின் பெயர்தான் காட்டான். நிஜப்பெயர் கோபால்சாமி... ( அய்யோ சாமி , நம்ம வைகோ இல்லங்கோ . இது வேற சாமி...)
சொந்த ஊரு பல்லடம். 10-வது படித்தது தமிழ் மீடியம்.. காலேஜ்-ல ஆங்கில மீடியம்.

நாங்கள் முதல் வருடம் காலேஜ் சேர்ந்தபோது , எப்படியோ எங்கள் குழுவில் ஐக்கியமாகிவிட்டான்..காலேஜ் 9 மணிக்கு ஆரம்பிக்கும். ஆனா எங்க ஜமா (Gang ) 8 மணிக்கு காலேஜ் முன்னால உள்ள டீ-கடையில ஆஜராகிவிடும்.(Punctuality அப்படினா என்னனு அங்கதான் கத்துக்கிட்டோம் ).

எப்ப போல " 2 / 6 " இல்லாட்டி " 2 / 8 " டீ தான் Order செய்வது...கடைக்காரன் ஒரு கேனப்பார்வை பார்த்துவிட்டு டீ சப்ளை செய்வான்.

அடுத்த ஒரு மணி நேரம், காலேஜ் வருபவர்களை பத்திரமாக உள்ள அனுப்பிவிட்டு 9 மணிக்கு நாங்க எங்க பொன்னான பாதங்கள காலேஜ்-ல எடுத்து வைப்போம்.

முதல் வருடத்தில் எல்லா மாணவர்களும் மெடிக்கல் செக்கப் செய்யவெண்டும் என் சர்குலர் வந்துவிட்டது..நம்ம காட்டான் , ஆனானப்பட்ட மருத்துவரையே அயரவைத்த சம்பவம் விரைவில்.....( நம்ம மருத்துவர் அய்யா இல்லங்கோ . இது வேற அய்யா...)

தொடரும்....

Saturday, November 14, 2009

கோடான கோடி நன்றியய்யா......

முல்லை பெரியாறில் தமிழக மக்களின் உரிமையை பறிக்கும் வகையில் புதிய ஆணை கட்ட முதற்கட்ட பணிகளை துவக்கிய கேரள அரசையும், ஆய்வு பணிக்கு அனுமதி வழங்கிய மத்திய தமிழர் விரோத காங்கிரஸ் அரசையும் கண்டித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில் மதுரையில் நாளை மாபெரும் உண்ணாநிலைப்போராட்டம் நடைபெறுகிறது.


இலங்கை பிரச்சனையை முடித்துவிட்டார்கள்.அடுத்து முல்லை பிரச்சனை ஆரம்பம்..
நடத்துங்கையா , நடத்துங்க........

Tuesday, November 10, 2009

நன்றியய்யா......






தமிழக மக்களின் மின்சாரத்தேவையை முழுமையாக நிறைவு செய்த அமைச்சருக்கும் ,
மின்சார ஊழியர்களுக்கும்
மற்றும் முக்கியமாக எங்கள் தமிழக முதல்வருக்கும்,
கோடான கோடி நன்றியய்யா......

Friday, November 6, 2009

ங்க்கொய்யா....




நம்ம மினிஸ்டர்ஸ் ஒரு நாள் உல்லாசபயணமாக இலங்கை சென்று வெற்றிகரமாக "அன்பளிப்பு" வாங்கிவந்துவிட்டனர்.

நம்ம மீனவர்கள் கதி ???????????...

Saturday, October 24, 2009

நாட்டு நலன் ...



ங்க்கொய்யா....பேசுல.... பேசு.......

#$%^நிதி குடும்பதை அங்க கொண்டுபோயி வைத்து நொங்கு எடுத்தா
எல்லா பிரச்சனையும் சரியாகிவிடும்........
உங்களுக்கு எல்லாம் , கு%^#டில ராக்கெட் வெச்சு அங்க அனுப்பனும்.....

Friday, October 23, 2009

தீபாவளி

அனைவருக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள்....


அன்புடன்,
பட்டாபட்டி..

Monday, October 12, 2009

டுபுக்கு......

காணவில்லை....

டுபுக்கு என்ற மனிதர் ,Blog-ல் எழுதிக்கொண்டு இருப்பது தெரிந்ததே...
அவரை சில நாட்களாக காணவில்லை...
கண்டுபிடித்து தருவோருக்கு , கீழ்கண்ட அட்டவணனைப்படி அதாவது ஒரு பரிசு தரப்படும்..

A: டாஸ்மார்க் சாரயம்.
B: 1 ரூபாய் அரிசி 10kg
C: கொட நாடு-ல் ஒரு வேளை சாப்பாடு.
D: கலை ஞர் வீட்டில் இட்லி வடையுடன் காலை டிபன்.

Sunday, October 11, 2009

காங்கிரஸ்-ன் சுதந்திரப் போராட்டம்






இப்படிதான் காங்கிரஸ் இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக்கொடுத்தது....
பாவம் மவுண்பேட்டன் பிரபு....

திருந்துங்க மக்கா....


எங்க ஊர் பாமரன் எழுதியது....




முலாயம்சிங் கட்சியோடு சோனியா காங்கிரஸ்
கூட்டணி வைத்துக் கொள்ளாததற்கு எது காரணம்?
நாட்டு நலன்தான்.




ஆனால் “இன்னமும் காத்திருக்கிறேன். கூட்டணி பற்றிய முடிவை கட்சியின் குறுந்தலைவர்களிடம் விடாமல் தலையாய தலைவராய் இருக்கிற சோனியாவே இறுதி முடிவை எடுக்க வேண்டும்” என்கிறார் முலாயம்சிங்.
அதற்கு எது காரணம்?
நாட்டு நலன்தான்.




“விஜயகாந்த் தேர்தல் புறக்கணிப்பையோ அல்லது தி.மு.க, அ.தி.மு.க.வோடு கூட்டு சேருவதை கைவிட்டு பா.ஜ.க.வோடு கூட்டு சேருவதுதான் நல்லது” என இல.கணேசன் கதறுகிறாரே… எதற்காக?
நாட்டு நலன்தான்.


சாலைப் பணியாளர் போராட்டம்……
விவசாயிகள் போராட்டம்……
நெசவாளிகள் போராட்டம்……
அரசு ஊழியர் போராட்டம்……
எனச் சகலரின் போராட்டத்துக்கும் ஆப்போ ஆப்பு வைத்த புர்ர்ர்ர்ர்சித் தலைவியோடு பல்லை இளித்துக் கொண்டு கூட்டு வைத்திருக்கிறார்களே
லெப்ட்டும்…… ரைட்டும்……
என்ன காரணத்திற்காக?
நாட்டு நலன்தான்.







ஒரு பக்கம் புறக்கணிப்புப் பெனாத்தால்……
மறுபக்கம் காங்கிரசுடன் மச்சான் மந்திரியாவதற்கான பேரம்……
என அல்லும் பகலும் அலைமோதுகிறாரே
அலப்பரைகாந்த்……
எதற்காக?
நாட்டு நலன்தான்.


ஊரே காறி உமிழ்ந்து கொண்டிருக்கிற காங்கிரசோடு
உடும்புப்பிடி உறவு வைத்துக் கொண்டிருக்கிறாரே
உடன்பிறப்புகளின் தலைவர்……
அது எதற்காக?
நாட்டு நலன்தான்.


இந்தப் பக்கம் குதிக்கலாமா?
இல்லை அந்தப் பக்கம் குதிக்கலாமா?
இப்பவே குதிக்கலாமா?
அல்லது அப்புறமா குதிக்கலாமா? என தீவிர ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறாரே
தமிழ்க்குடி தாங்கி மருத்துவர் அய்யா ……
அந்த ஆலோசனைகள் எதன் பொருட்டு?
நாட்டு நலன்தான்.


அத்துமீறுவதாவது ……?
அடங்க மறுப்பதாவது ……?
அறிவாலயமே சரணம்!
என சத்தம் போடாமல் ஒதுங்க இடம் கிடைத்தால் போதும் இப்போதைக்கு
என ஓரம் கட்டுகிறதா சிறுத்தை?
என்ன காரணம்?
அதுவும்

நாட்டு நலன்தான் வேறென்ன?


எல்லாம் சரிதான் …….ஆனால் இவர்கள் எல்லோரும் சேர்ந்து கரடியாகக் கத்துகிறார்களே ……நாட்டு நலன் ……நாட்டு நலன் என்று ……அது எந்த நாட்டின் நலன் என்பதை தேர்தலுக்கு முந்துன நாள் சொன்னாக் கூட தேவலை.
அந்த நாட்டு மக்களை ராவோட ராவா கூட்டியாந்து ஓட்டுப் போட வெச்சுரலாம்.
நாங்க கையில, கால்ல கரும்புள்ளி …… செம்புள்ளி குத்திக்கறதுக்குள்ள சீக்கிரமா சொல்லுங்கப்பா ராசா …… உங்குளுக்கு கோடிப் புண்ணியமா போகும்.







டவுட் தனபாலு ...

ஜெ.வின் ஈழப் பிரகடனம்……
காங்கிரஸ் அரசின் “நிதி உதவி”……
கலைஞரின் உண்ணாவிரதம்……
என எல்லாவற்றையும் பார்க்கும்போது……
ஈழத் தமிழர் படுகொலைகளுக்கு எதிராக இனி ராஜபக்சே உண்ணாவிரதம் இருப்பது ஒன்றுதான் பாக்கி போலிருக்கிறது.

வாழ்த்துக்கள்..






ஜங்க் , ஜங்க் ,

ஜங்க்,ஜங்க் ,

ஜங்க் ஜங்க் , ஜங்க் ,

ஜங்க்,ஜங்க் ,

ஜங்க் ஜங்க் , ஜங்க் ,

ஜங்க்,ஜங்க் ,

ஜங்க் ஜங்க் , ஜங்க் , ஜங்க்



அடிங்க அப்பு , அடிங்க.........

தமிழக மக்களுக்கு இன்னும் பாடுபட எங்களுடைய நல்வாழ்த்துக்கள்..



மக்கா , Be ready .....Hardware கடையில Fevicol- ந்னு ஒண்ணு விற்பார்கள்..வாங்கி தலைகாணிக்கு அடியில வேச்சுக்கோங்க..

( மக்கா ஏமாந்துவிடாதீர்கள்.. அதுல யானைப்படம் போட்டிருக்கும்.)






Saturday, October 10, 2009

அய்யாவுக்கு...



ஓகே...ரெடி....
3...
2...
1...
ஜம்ப்......


நமீதா அக்காக்கு...

கொஞ்ச வருசமா SUN TV பார்ப்பதில்லை என்ற என்முடிவை மாற்றிக்கொண்டு சமீபத்தில் , SUN TV Cable Subcribe செய்தேன்..
கண்றாவி.. இவங்க இன்னும் மாறவில்லை...
குண்டா ஒரு அம்மா வந்து , கொஞ்சு தமிழிலில் பேசி கொண்டுருந்தது..என்ன கிரகமுனு புரியவில்லை..
அப்போ என் பொண்ணு , அப்பா, அப்பா , நாம புது TV எடுக்கலாமுனு நச்சரித்துகொண்டே இருந்தா..சரின்னு முடிவு பண்ணி, 42" TV வாங்கியாச்சு...
இரண்டு வாரம் கழித்து என் பொண்ணு, மீண்டும் ஒரே நச்சரிப்பு.. இன்னும் பெரிய TV வேண்டுமென்று...எம்மா, இதுவும் புது TV தானே என் நான் சொல்ல,
இல்லப்பா, நமீதா அக்கா வந்தா , இன்னும் பாதி ஒடம்பு TV தெரியமாட்டிங்குது.. பாவம் எந்த அக்கா..நம்ம பெரிய TV வாங்கினா , அந்த அக்கா, இன்னும் கொஞ்சம் ஃப்ரீயா நடந்து Prog பண்ணுவாங்கதானே என் கூறுகிறாள்...

நமீதா அக்கா...பார்த்து...எங்களுக்கு Budget தாங்காது....

மடப்பய மக்கா....






தமிழக மக்களை தாவி வந்து காப்பாற்ற போகின்ற தலைவியே வருக , வருக ......

டவுட் தனபாலு...

ஒரு நாள் நம்ம டவுட் தனபாலு வேர்க்க, விறுவிறுக்க என்னுடைய dept. வந்தான்.
என்னடா, அண்டர்வேரில்ல பாம் வெச்சமாறி ஓடி வரே என் கேட்டதுக்கு , அண்ணே அண்ணே , என்னொட தல ஒரு Prog- எழுத சொன்னாங்க.. அதுக்கு " Do while , If else endif" எல்லாம் use பண்ணனுமாம்.
ரொம்ப நாளா மூஞ்சியலெ சந்தனம் பூசிட்டு இருக்கிறதால மூளை வேளைசெய்யமாட்டிகுது என சொன்னான்..


அவனுக்கு காபி தண்ணி வாங்கிக்குடுத்து அசுவாசப்படுத்தி ஒரு சாம்பிள் prog கொடுத்தேன் ..இப்போ அவ்னுக்கு நல்லா விளங்கிடுச்சு..


அந்த prog கீழே,,,,


மடப்பய மக்கா....








கடைசியா அய்யா , ADMK-வில் இருந்து தாவிவிட்டார்...

அடுத்து என்ன பண்ணவேண்டும் என் குடும்ப உறுப்பினர்களை ஆலோசித்துவிட்டு முடிவு செய்வார் என நினக்கிறேன்.

என்ன ஈ-யும் , பீ -யும் இருந்துவிட்டு , வேற பீ -க்கு தாவப்போறத நினைத்தால்கொஞ்சம் கஸ்டமா இருக்கு.....

ஆனா , அய்யா கடைசியா ஒரு பெரிய உண்மையை கண்டுபிடித்துவிட்டார். " ADMK Building Strong.. But Basement weak..க்குனு "

அய்யா , உங்க
கு#@%$டி-ல வருவது சந்தனம்தான்னு சொன்னாலும் நாங்க நம்புவோம். நீங்க, தமிழன் தமிழ்-ல தான் படிக்கவேணும் என சொன்னபோது, நாங்க கேட்கவில்லயா?..என்னடா அய்யாவோட பேரன் பேததி எல்லாம் ஆங்கிலம் படிக்கிறார்கள் , நாங்ககென்ன மண்ணா? என் நினைக்காமல், நீங்க கொடுத்தா சந்தனத்தை பூசவில்லயா...


நீங்க சந்தனத்த குடுத்துக்கிட்டெ இருங்க, எடுத்து பூசிட்டு ஓட்டு குத்த நாங்காச்சு...

கொடுங்க , கொடுங்க , கொடுத்துக்கிட்டே இருங்க....

( நல்லவேளை , அய்யாவுக்கு ஒரே ஒரு மகன் தான் )

Friday, October 9, 2009

புலம்பல்...( நம்ம )


மகா கொடுமை....



பாஜகா , அவங்க் அலம்பல ஆரம்பித்துவிட்டார்கள்...

ராமருக்கு ஆணி அடிச்சாச்சு..

இப்போ , இலங்கை தமிழருக்கு..???..


போதும் சாமி.... வலிக்குது...



மகா கொடுமை...

செய்தி :
ஸ்டாலினுடன் , நடிகர் திருமணத்துக்கு சென்ற உதயநிதி , போலிசாரல் தடுக்கப்பட்டார்.
அதை கண்டு தொண்டர்கள் ஆவேசம்....பின்னர் போலிசார் மன்னிப்புக்கேட்டு அவரை உள்ளேவிட்டனர்....

எனக்கு என்னமோ, அது போலிஸ் தவறுமாறி தெரியவில்லை..ஒவ்வொரு போலிஸ் ஸ்டேசனிலும், தாத்தா குடும்ம Org-Chart
இருத்திருதால் இந்த தவறு நடக்க வாய்ப்பில்லை...

நல்ல வேலை , தாத்தா உண்ணாவிரதம் இருக்கவில்லை...

Saturday, October 3, 2009

மடப்பய மக்கா....

வரவர காங்கிரஸ்காரங்க பண்ற அட்டகாசம் தாங்கமுடியல...
சீக்கரம் நம்ம Indian Passport-ய் Itally Passpot-க்கு மாற்றிவிடுவார்கள் போலிருக்கு...
( இந்திய பொண்ணு தாங்கோ சீக்கரம் இத்தாலி பொண்ணு தாங்கோ ஆகிவிடும் என நினைக்கிறேன் )

நம்ம மடபய மக்களுக்கு, எதாவது சீக்கரம் பண்ணுங்க சாமி....( பின்னாடி Butter காயறதுக்குள்ள.. )

சும்மா...

வணக்கம்,
ரொம்ப நாளா Posting செய்ய நேரமில்லாமல் போய்விட்டது..
பெரிசா வேலை இல்லை..
மானுக்கு மயிருபுடுங்க போய்விட்டேன்..
விரைவில் வருவேன்...
( எப்போ , எப்படினு தெரியாது )...

Monday, September 14, 2009

ஜான்சிராணி சித்திக்கு

ஜான்சிராணி சித்திக்கு,
வணக்கம்..என்னடா இவன் மரியாதய ஜான்சிராணி-நு கூப்பிடரானெனு டவுட் வந்துருச்சா?..
காந்தி , நேரு , சுபாஸ் எல்லாம், வெள்ளக்காரங்கிட்ட சண்டபோட்டு சுதந்திரம் வாங்கினாங்க...
ஆனா நீங்க, அதை எல்லாம் மீறி அவங்கிட்ட சண்டபோட்டு குழந்தய பெத்தீங்க..

அதை தமிழ்ச்சியா வளர்க்கிரீர்கள்..
நீங்கதான் எங்க ஜான்சிராணி..
US காரங்களை ஏதாவது பண்ணமுடியுமா ......பாருங்க.

Saturday, September 12, 2009

மயிரு கொடுத்த மகராசன்

நவரச நாயகனே,
என்ன கொஞ்ச நாளா , சததமே காணம்..
தமிழக மக்களுக்கு உழைத்து களைப்பாகி விட்டீர்களா? அல்லது வேற பெரியதிட்டம் ஏதாவது போட்டுக்கொண்டு இருக்கிறீர்களா?.
என்னடா இவன் , இவ்வளவு உரிமையா பேசறானே என மண்டை குழம்புதா?..
எனா, நான் உங்களுக்கு மயிரு கொடுத்த மகராசன்..(உங்க விக்-ல சில மயிரு என்னொடது.. )
மீண்டும் மயிரு வேணுனா கூச்சபடாம கேளுக்க..
மொட்டை பொட்டு, மயிரு கொடுக்க நாங்க ஆச்சு...
அண்ணே, சும்மா இருக்கிற நேரத்தில, தாத்தா கிட்ட சொல்லி ஒரு டாக்டர் பட்டம் வாங்கறது..
பின்னாடி, கிளினிக் வைக்க உதவுமில்ல..கொஞ்சம் ரொசன பண்ணுங்க...
மீண்டும் பார்ப்போம்..

Friday, September 11, 2009

டவுட் தனபாலு ...

இந்த இருGroup-க்கும் உள்ள முக்கியமான வித்தியாசம் கண்டுபிடியுங்க ...
பார்க்கலாம்.......
சரியான விடை கண்டுபிடிப்பவருக்கு , கோவை ரயில் நிலையம் கிரயம் செய்துதரப்படும்.



குரூப் A

  • தாத்தா,
  • சரத்குமாரு,
  • சித்தி ராதிகா,
  • பாக்கியராஜு,
  • கமல்,
  • விரைவில் பிரபு தேவா
  • கார்திக்

குரூப் B'

  • நான்,
  • நீங்கள்,
  • பிரபு,
  • டாக்டர் விஜய் ,
  • அஜித்...

மடப்பய மக்கா....

தாத்தா ,,எனக்கு ஒரு Doubt....
நாம் இருவர் , நமக்கு இருவர் என அந்த காலதில் சொன்னது, மனைவிமார்களை அல்லவே...
நம்ம தமிழன் confuse பண்ணிக்கிறான்...
அவனுக்கு புரியும்படி சொல்லுங்க....

மடப்பய மக்கள்...

Thursday, September 10, 2009

அம்மாவுக்கு கடிதம். 1

அம்மா வணக்கம்.
ரொம்ப நாளா , வெளி உலகில் பார்க்கமுடியவில்லை.
தாயீ. முதுகுல மூச்சு பிடிச்சதால, கால்ல விழமுடியல தாயி..
மன்னிச்சுகோங்க அம்மா..
ஈழ தமிழர்களுக்காக இன்னும் துக்கம் அனுசரிக்கிறீர்களா?.
போதும்மா.. வலிக்குது....

உங்க உடம்ப பார்த்துக்கோங்க...( 0.5 kg குறைந்த மாறிஉள்ளது ..)
இப்படி இருந்தால், நம்ம கட்சிக்கு எப்பொது கடைசி ஆணி அடிப்பது..?? ( தாத்தா கிட்ட பேசினபடி [வாங்கினபடி ] சீக்கிரம் அடிங்க.. )..

Wednesday, September 9, 2009

தாத்தாவுக்கு கடிதம் 1.

தாத்தா வணக்கம்..
சித்தப்பா , பெரியப்பா , அத்தை எப்படி இருக்கிறார்கள்.

பெரியப்பா இன்னும் Delhi-வாசிதானா..
பாவம். மதுரை மக்கள் பீடை விட்டதென நிம்மதியா இருப்பார்கள்.
அவர்களை விடலாமா ????????

தாத்தா, இந்த வயதிலும் நீங்கள் தமிழக மக்களுக்கு உழைப்பது எங்களுக்கு கஷ்டமாக உள்ளது.
தமிழக மக்களுக்காக இலவசமாக 2 ஏக்கர் நிலம் கொடுத்தீர்கள்.
சமத்துவபுரம் கட்டி, வீடு கொடுத்தீர்கள்.
களைப்பு நீக்க , டாஸ்மார்க் , open செய்தீர்கள்.
உண்ண குறைந்த விலையில் அரிசி கொடுத்தீர்கள்.
உண்ட பின் மனதை relax செய்ய டீவி இலவசம்.

அய்யா , இன்னும் ஒரு குறை உள்ளது.
ஆற்காடு அண்ணாச்சி அடிக்கடி Fuse பிடுங்கிவிடுகிறார்.அந்த சமயம் டீவி பார்க்க முடிவதில்லை.
அப்போ டொக்கு அடிக்க எதாவது செய்யமுடியுமா தாத்தா..
இந்த கோரிக்கையை நிறைவேறினால், உங்களுக்கு ஒட்டு கூடும். ( குழந்தை பிறந்தால் !!!!!!!!!)